தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்
கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பா/வி
ஒப்பி யுன தேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தி என்று நேரமெல்லாம் தமிழ்க்கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்
ஆ/தாரம் சக்தி என்று அருமறைகள் கூ/றும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நான்கு மறை தீர்ப்பு
தீ……….ர்ப்பு.
No comments:
Post a Comment