Tuesday, October 23, 2012

en ninaivukalin e -pathivukal Murugan song


ஆலயமணி  ஓசை கேட்குதம்மா   கேட்குதம்மா
ஆலயமணி ஓசை கேட்குதம்மா கேட்குதம்மா
ஆண்டவன் குரல் நம்மை அழைக்குதம்மா அழைக்குதம்மா  (ஆலய)

அருள் மிகு ஜோதி ஒன்று தோன்றுதம்மா அம்மா
ஆறுமுகம் அதிலே காணுதம்மா காணுதம்மா (ஆலய)

ஓராரு முகமும்  ஈராறு கரமும் மறவாமல் துணை நின்று
காக்குதம்மா காக்குதம்மா
உயிராகி உடலாகி உயிர் ஞானப் பழமாகி குருவாகி
ஆட் கொள்ளும் தெய்வம் அம்மா தெய்வம் அம்மா

முத்தான முத்துக் குமரா முருகையா வா வா
சித்தாடும் செல்வக் குமரா சிந்தை மகிழ வா வா
நீயாடும் அழகை கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக்  கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனம் மாறி வருகுதைய்யா
மனம் மாறும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் வருகுதைய்யா
(முத்தான முத்துக்)

பன்னீரில் குளிக்க வைத்து பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்து எடுத்து அங்கமெல்லா,ம் பூசி வைத்து
நீர் பூசி திலகம் வைத்து நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சித்தேன் வருவாய் அப்பா
அன்பு பூத்த மலரால் உன்னை அர்ச்சித்தேன் வருவாய் அப்பா
(முத்தான)

No comments:

Post a Comment