எந்தன் வினை தீர்த்தவனே என்னை ஆட் கொண்டவனே
சிந்தை தனிலே உறைந்த சித்பர கணபதியே
முக்கண்ணும் உடையவனே மும்மதத்து குஞ்சரனே
சிக்கறுத்த தூயவனே சித்தி புத்தி நாயகனே
மூஷீக வாஹனனே முக்திக் கனூலனே
நேசமுடன் அன்பருளம் நிறைந்த பரிபூரணனே
பந்தம் அறுத்தவனே பாசம் ஒழித்தவனே
கந்தனுக்கு முன்னவனே கலிதன்னை தீர்த்தவனே
மூவர்களை உண்டு பண்ணி முத்தொழிலும் ஈந்தவனே
தேவகுருவாக வந்து தேவர்களை காத்தவனே
நீதியில்லா கலியுகத்தில் நின்னடிமை ஆனதன்பின்
சோதனைகள் செய்யாதே சூட்சுமம் உள்ள என் குருவே
வேதங்களுக்கு எட்டாத
விசித்திரத்தை காட்டி விட்டு
சோதனைக்கும் எட்டாது சூஷமமதாய் நின்று கொண்டாய்
எல்லையற்ற காட்சி தந்து எமனுக்கிடமில்லாமல்
பல்லுயிரும் காட்சி கொள்ள
பலனளித்த சின்மயமே
No comments:
Post a Comment