'தாய்'லாந்தும் 'சிலி'ர்க்கிறது
------------------------------------------
தாய்லாந்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்கள் 12 பேர், பயிற்சியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் அங்குள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு சென்றிருந்தனர். பலத்த மழை பெய்ததையடுத்து அவர்கள் அனைவரும் அங்குள்ள நீளமான குகையில் ஒதுங்கியுள்ளனர்.
மழைவெள்ளம், சகதியினால் துரதிர்ஷவசமாக குகைப்பாதை மூடிக்கொண்டது. இவர்களைத் தேடும் பணியில் 1000 தாய்லாந்து ராணுவ வீரர்கள் முடுக்கிவிடப்பட்டனர்.
குகையின் மேற்பகுதியில் சுமார் 25 இடங்களில் துளைகள் இடப்பட்டு, 9 நாள்களுக்குப் பிறகு அவர்கள் கண்டறியப்பட்டனர். குகையில் இருந்து அவர்களை மீட்கும் பொருட்டு சர்வதேச மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.
வெள்ளநீர் வடிந்தால் மட்டுமே அவர்களை மீட்கும்படியான சூழல் இருப்பதால், 13 பேரையும் குகையில் இருந்து மீட்க சில பல நாள்கள் ஆகும் என தெரிகிறது.
குகைக்குள் சிக்கியிருக்கும் 13 பேருக்கும் தேவையான உணவு, பாதுகாப்பான உடை, உறவினர்களுடன் உரையாட தொலைபேசி வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
குகைக்குள் சிக்கிய 13 பேரும் உயிருடன் கண்டறியப்பட்டதையடுத்து தாய்லாந்து மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச மீட்புக் குழுவினருக்கு தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஒச்சா நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி 2010-ஆம் ஆண்டு சிலி நாட்டில் நிகழ்ந்தது.
சிலி நாட்டில், கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 33 தொழிலாளர்கள் எதிர்பாராதவிதமாக மண்ணுக்குள் புதையுண்டனர். சுமார் இரண்டு மாத காலமாக அவர்களைத் தேடும்பணி நடைபெற்றது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்காததால் 33 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அறிவிக்கப்படும் நிலைக்கு அந்நாட்டு சுரங்கத் துறை அமைச்சர் தள்ளப்பட்டார்.
ஆனாலும் அந்நாட்டு அதிபர் செபாஸ்டின் பினேராவின் உள்ளுணர்வு அவர்கள் உயிருடன் இருப்பதாக தெரிவித்தது.
தொடர்ச்சியாக சரங்கத்தின் பல இடங்களில் துளைகள் இட்டு, சிறு குழாய்களை இறக்கி, சுரங்கத்தில் சிக்குண்டோரை தேடிப்பார்க்க உத்தரவிட்டார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.
இறுதியாக துளையிட்டு வெளியே எடுத்த சிறுகுழாயின் முனையில் "நாங்கள் அனைவரும் உயிருடன் உள்ளோம்" என்று ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட ஒரு காகிதம் வெளியே வந்தது.
அடுத்த நொடியில் மீட்புப் பணிகள் துரிதமாக முடுக்கிவிடப்பட்டன. அடுத்த நிமிடமே அந்நாட்டு அதிபர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
சிறு குழாய்களின் வழியே 33 பேருக்கும் குடிநீர், உணவு, மருந்து, உளவியல் ஆலோசனைகள், உறவினர்களின் கடிதங்கள் வழங்கப்பட்டன.
700 மீட்டர் ஆழத்தில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழாய் உறைகள் செய்யப்பட்டன. பெரிய அளவில் துளைகள் இட்டு அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக 69 நாள்களுக்குப் பிறகு தனித்துவமான குழாய் உறைகள் மூலமாக 700 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
முதலாவதாக மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா வெளியே வந்ததும், அந்நாட்டு அதிபர் அவரைக் கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீர் வடித்து வரவேற்றார்.
தாய்லாந்தும், சிலியும் உலகின் மிகச் சிறிய நாடுகள். சிறிய நாடோ, பெரிய நாடோ ஓர் அரசு நினைத்தால், உண்மையான அக்கறையுடன் மனம் வைத்து களத்தில் இறங்கினால், ஒரேயொரு உயிரிழப்பைக்கூட தடுக்க இயலும் என்பதையே மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் தன் உயிருக்கும் மேலாக நினைக்கும் தலைவன் அமைந்துவிட்டால் அவன் வானுறையும் தெய்வம் எனப் போற்றப்படுவான்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் - திருக்குறள்.
நம் ஏவுகனைக்கு பிரித்திவி என்று பெயர் வைத்துள்ளோமே..
ஏன் தெரியுமா கண்களை கட்டி கொண்டு ஒலி வரும் திக்கில் அம்பெய்துவதில் வல்லவர். பிரித்திவி மகராஜ்..
10ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட கடைசி இந்து மன்னன் இவரே.,
முகமது கோரியுடன் ஏற்பட்ட போரில் தன் மாமனார் ஆதரவளிக்காததால் அவர் தோல்வியுறுகிறார்.
முகமது கோரி இவரின் கண்களை குருடாக்கி ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கிறான்..
முக கோரியின் பொழுது போக்கே பிரித்திவியின் கையில் வில்லையும் அம்புக்களையும் கொடுத்து சிறு ஒலியை உண்டாக்கி அம்யெய்த சொல்லி ரசிப்பது தான் சபையை நிசப்தமாக இருக்க சொல்லி விடுவான் கோரி .
ஒரு முறை ஒரு சிறிய சிட்டு குருவியை கூண்டில் அடைத்து அதை கூவ செய்ய அடுத்த விநாடி கூண்டில் இருந்த சிட்டு குருவியை தாக்க..
உணர்ச்சி வசபட்ட கோரி சபாஷ் என்று கூவ அடுத்த நொடி கோரியின் இருதயத்தை அம்பு கிழித்து உடனே மரணமடைகிறான்..
இது ஒரு சரித்திர நிகழ்வு..