Saturday, November 12, 2011

PRIVACY-Charlie bit my finger - again !

PRIVACY-Wonderful India

PRIVACY-Small thagavalkal


தங்கத்தின் தரம் மதிப்பு அளவீடுகள்

தரம்         மதிப்பு

99.50   -     24ct      (carrot)
93.00  -      23ct
91.6     -     22ct
75.00   -     21ct
50.00   -     18ct
35.00   -       9ct



விலைமதிப்பில்லாத இதயத்தில் ஒழுக்கம் கெட்ட சிலரை ஏன் வைக்க

வேண்டும். அவ்வாறு வைப்பதால் ஒரு பயனும் இல்லை.

எப்படி விலை மதிப்புள்ள பீரோவில் விலைமதிப்புள்ள பொருள்களை தானே

வைக்கிறோம். வேண்டாத துணி, விளக்குமாறு, போன்ற வேண்டாத

பொருள்களை வைப்பதில்லை தானே! அது போல நம் மனதிலும்

நல்லவர்களை வைப்போம், நல்ல எண்ணங்களை வைப்போம்,


வாழ்வின் இறுக்கமான சமயங்களில் செயல்பட வேண்டிய எளிய வழிகள்: 


1.       நிலமையை நன்கு அலசி ஆராயும் பழக்கம் சிந்தையில் உருவாக வேண்டும்.


2.       நம் தேவைகள் என்ன என்பதில் தெளிவு வேண்டும்.


   3.நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நம் வருங்கால வளர்ச்சியை 

     நோக்கி உள்ளதா என சரி பார்க்க வேண்டும்.


  4.எந்த முடிவும் தற்காலிக விடுதலையாக இருப்பதை தவிர்த்து ஒரு

நிரந்தர அமைதிக்காகவே இருக்க வேண்டும்.


  5. அவசரமோ, ஆத்திரமோ, நம் முடிவினை நிர்பந்தப் படுத்தாமல் இருக்க 

பழக வேண்டும்.


  6.நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் பக்குவம் 

பலம் நமக்கு உள்ளதா என கருத்தில் கொண்டே முடிவு எடுக்க வேண்டும். 

  7.நம் மனதை நெருடும் எந்த முடிவையும் ஏற்க கூடாது

              
  8.முக்கியமானது,

                 ஆசைகளும், கனவுகளும், கவர்ச்சியான வழியைக் காட்டினாலும்

நம் சுய மதிப்பீட்டின் வெளிப்பாடாகவே நம் முடிவுகள் அமைய 

வேண்டும்.    




அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகம் பிரிட்டிஷ் படைகளால்

  அழிக்கப் பட்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்சன் 

 , மற்றும் பல அவருக்குப் பிந்தைய அதிபர்களின் முயற்சியால் உலகின்

மிகப் பெரிய நூலகமாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவின் அற்வுச்

சுரங்கமான் நாளந்தா நூலகத்தை அழித்து இன்றும் நினைவு கூறப்படுகிறார்

-முகமது.இது போல அண்ணா நூலகத்தையும் அகற்றி பெயர் பெற 

விரும்புகிறாரோ நம் முதல்வர்.



இன்று  11-11-11 ஒரு அருமையான  நாள் .நாள், தேதி ,வருடம் .எல்லாம் 

ஒரே மாதிரி உள்ளது. சிறப்பு தானே .எல்லோருக்கும்  நல்லதே  நடக்க 

எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகிறேன் .







பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவே ஆள் மாறாட்டம் செய்த புதுவை 

அமைச்சரை முதலமைச்சர் ரங்கசாமி பதவி நீக்கம் செய்தார். என்ற

செய்தியை படித்தவுடன் தான் கண்ணதாசன் அவர்கள் எவ்வளவு 

தீர்க்கதரிசி என்று உணர்ந்தேன்.

அவர் அங்க முத்து தங்க முத்து தண்ணிக்கு போனாளாம், தண்ணி 

குடத்தை கிழே விட்டு எங்கிட்ட வந்தாளாம் என்ற பாடலில் 

எழுதியிருப்பார்.

காலேஜூக்கு போகாமலே 
 
கல்வி மந்திரியானான்

காப்பிக் கடை வெச்சிருந்தவன்

 உணவு மந்திரியானான் என்று எழுதியிருப்பார்

உண்மையில் கண்ணதாசன் தீர்க்கதரிசி தான்..





நாம் செல்லும் அனைத்து பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது

இயலாது என்பதால்தான் செருப்பு அணிகிறோம் அது போலவே மன 

அழுத்தத்தைஉண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம்

ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன

  அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும், இல்லையா. முயற்சி

செய்வோம் வெற்றி பெறுவோம்!!!!





செல்போனின் ஜாதகம்:

                        உங்கள் செல்போன் எங்கு தயாரானது?எத்தனை தரம் வாய்ந்த்து?

என்று அறிய வேண்டுமா?

                                உங்கள் செல்போனில் *#06# என்று பதிவு செய்யுங்கள்.

செல்போன் திரையில் அதன் அடையாள எண் தெரியும்.

(உ.ம்) 86211400749568

  இதில் ஏழாவது மற்றும் எட்டாவது எண் என்ன என்று பாருங்கள்.

0,0 என்று இருந்தால் செல்போன் அதைத் தயாரிக்கும்


தொழிற்சாலையிலேயே உருவானது.மிக உயர்ந்த வகையாகும்.

0,1 அல்லது 1,0 என்று இருந்தால் பின்லாந்து நாட்டில் தயாரான நல்ல 

வகையானது.


0,2 அல்லது 2,0 என்றால் எமிரேட்ஸில் தயாரான மோசமான ஒன்று.

0,8 அல்லது 8,0 என்றால் ஜெர்மனியில் தயாரான சுமாரான வகை.

1,3  அல்லது 3,1 என்றால் அஸெர்பாய்ஜனில் தயாரான, உடல்நலத்திற்கு

கேடு விளைவிக்க்க்கூடிய மிக மிக மோசமான செல்போன்!உடனே தூக்கி

எறிந்து விடுங்கள்.



இத்தாலியில் ஒரு ஓவியர் இருந்தார். இயேசு பிறப்பது முதல் அவர் 

சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சி வரை ஒவ்வொரு கட்டமாக வரைந்து

கொண்டே வந்தார்.

                        குழந்தை இயேசுவை வரைய, தெய்வ அழகு நிரம்பிய ஒரு 

குழந்தை அவருக்கு கிடைத்த்து. இப்படியாக ஒவ்வொரு கட்டமாக இயேசு 

வின் வாழ்க்கை வரலாற்றை சுமார் 25 வருடங்களாக வரைந்து வந்தார்.

                 இயேசுவை சிலுவையில் அறைந்து, அவரை சாட்டையால் 

அடிப்பவனை வரைவதற்கு ,பார்ப்பதற்கு கொடுரமான தோற்றமும்

பயங்கரமும் சேர்ந்து ஒரு மாடல் வேண்டும் என நினைத்தார்.அவருக்கும்

கிடைத்த்து. ஆனால் என்ன ஆச்சரியம். எந்த குழந்தை ஐ குழந்தை 

இயேசுக்கு மாடலாக வரைந்தாரோ, அந்த  குழந்தை தான் ......வாழ்க்கை 

என்னும் புயலில் சிக்கி அப்படிச் சின்னாபின்னமாகி இருந்தது.









 


 





 

 

 
      





 















PRIVACY-THAGAVALKAL

If want to kick  ur mail to ur friends use-----kicksend.com

Monday, November 7, 2011

PRIVACY-story frog


ஒரு விஞ்ஞானி  தவளையை பரிசோதித்தார். தாவு என்றார். தவளை தாவியது. பின், ஒரு காலை வெட்டி விட்டு தாவு என்றான், தவளையும் தாவியது. பின் அடுத்த காலையும் வெட்டி விட்டு தாவு என்றார், தவளையும்
தாவியது. இவ்வாறு மூன்று கால்களையும் வெட்டிய பின்னும் தவளை ஒரு
காலால் முயற்ச்சி செய்து தாவியது.
கடைசியாக நான்காவது காலையும் வெட்டி விட்டு தாவு என்றார்,தவளை
தாவ முடியாமல்,கிடந்தது.
விஞ்ஞானி தனது குறிப்பில் எழுதினார், தவளையின் கால்களை வெட்ட வெட்ட தவளை தன் கேட்கும் தன்மையை இழந்து செவிடாகி விட்டது.இதில்
இருந்து தெரிவது, தவளையின் கால்களை வெட்டினால் அதற்கு காது கேட்காது.

PRIVACY-yoga



     யோகா என்பது ஒரு தத்துவம். உடலையும், மனதையும், சமநிலைப்படுத்துவதே யோகாவின் குறிக்கோள் ஆகும்.
முதுமையை தடுக்க முடியாது, ஆனால் முதுமையின் அறிகுறிகளை யோகா தடுக்கிறது.மனநலம் பழுது படாமல் முழு ஆரோக்கியத்துடன் முதுமை பெற யோகாபயிற்சிகள் வழிவகுக்கின்றன.
    யோகா ஆரோக்கியம் தருவதுடன் மன அமைதியையும், சமநிலையையும்அளிக்கிறது.
விளையாட்டின் போது சக்தி செலவாகிறது,ஆனால் யோகாவில் சக்தி சேமிக்கப் படுகிறது.யோகா ப்யிற்சி முடிந்த உடன் நல்ல ஓய்வுடனும்,நிதானமாகவும்,முழு சக்தியுடனும், நாம் அந்த நாளின் பிரச்ச்னைகளை எதிர் கொள்ளலாம்.
யோகா பயிற்சிகள் உள் உறுப்புகளைத் தடவிக்  கொடுக்கின்றன.ஒரு பாட்டரி இஞ்சினுக்கு புதிய சக்தியை அளிப்பது போல் யோகாபயிற்சிகள் களைத்த உடலுக்கு தெம்பளிக்கின்றன.
பிராணாயமா என்பது மூச்சு விடுதலைக் கட்டுப்படுத்தும் அறிவியல் ஆகும்மூச்சே உயிராகும். சரியாக மூச்சு விடுதலை மேற் கொண்டால் தான் நரம்புகளுக்கும், உடல் உற்ப்புகளுக்கும் சக்தி கிடைக்கும் .

மேலோட்டமான விரைவான மூச்சு நோய்களை ஏற்படுத்தும். நுரையீரல்களில்அசுத்த காற்று நிறையும் போது ஆக்ஜிசன் இல்லாமல் போய் விடுகிறது.நிதானமான மூச்சு நரம்பு மண்டலத்தை அமைதிப் படுத்துகிறது.
        

Sunday, November 6, 2011

PRIVACY-signature


வாழ்வு  என்னும் வார்த்தைக்கு பொருள்-
வாழும் போதும் வாழ்வது:
வாழ்ந்து  முடித்த பின்னும் வாழ்வது.             

PRIVACY-my talk


 கீழே சேறு
மேலே பாசி
தன்னைச் சுற்றிலும் தவளையர் கீதம்
ஆனாலும் ......
தண்ணீர்த் தீயாய் பூத்திருக்கும்
தாமரைக்கு தான்
என்னவொரு செளந்தரியம்!!!!!கம்பீரம்!!!!
தாமரை சொன்னது,
சார்பால் பெருமை பெறுவது எளிது,
சார்புக்கு பெருமை தருவதே பெரிது!!!