Thursday, December 5, 2013

enninaivugalin e-pathivugal அழகிய திருநெல்வேலி


enninaivugalin e-pathivu தமிழ் தத்துவங்கள் ----2

எழுந்து நடந்தால்
இமயமலையும்
நமக்கு வழி கொடுக்கும்

உறங்கி கிடந்தால்
சிலந்தி வலையும்
நம்மை சிறை பிடிக்கும்.

வெள்ளைக் காரன் மணலை பார்த்து கடிகாரத்தை தயாரித்தான்.
தமிழன் சூரியனை பார்த்து கடிகாரத்தை தயாரித்தான்.
வெள்ளைக் காரன் மண்ணைப் பார்த்து சிந்திக்கும் போதே
தமிழன் விண்ணைப் பார்த்து சிந்திக்க ஆரம்பித்து விட்டான்..வாழ்க தமிழன்..


நீ வெளிச்சத்தில் நடந்தால் உன்னை உலகமே பின் தொடரும்..ஆனால் இருட்டில் நடந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது..


முயற்சி செய்ய தயங்காதே..முயலும் போது முட்களும் உன்னை முத்தமிடும்..மறக்காதே..

முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும்.
ஆனால் முயலாமை என்றும் வெல்லாது..


தன்னை தானே சீர்திருத்திக் கொள்பவனே சீர்திருத்தவாதி..

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போழுதும் மண்டியிடுவதே இல்லை...


தோல்வி என்பது நாம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே தவிர  அதில் அவமானம் என்று எதுவும் இல்லை


நம்பிக்கை என்பது ஒரே நாளில் பூத்து உதிரும் பூவாக இருக்க கூடாது. பூக்களை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.



வெற்றி வந்தால் பணிவு அவசியம்
தோல்வி வந்தால்  பொறுமை அவசியம்
எதிர்ப்பு  வந்தால்  துணிவு அவசியம்
எது வந்தாலும்  நம்பிக்கை அவசியம்..


நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பை போல் இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால் நம் காலை கடிக்கும். பெரிதாக இருந்தால் நாம் இடறி விழுந்து விடுவோம்...

எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.

நான் என்ற உணர்வு நிச்சயம் தவறில்லை..நான் மாத்திரம்  தான் என்ற உணர்வு தான் தவறு..


மலரைப் பார் கொடியைப் பார் வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே.. அதை பார்க்க முயன்றால் மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

மருந்துகளில் சிறந்தவை ஓய்வும்  உண்ணா நோன்புமே..

நானும் குறைகள் நிறைந்த மனுஷி யாக இருப்பதாலும் எனக்கும் பிறருடைய அனுதாபம் தேவை படுவதாலும் நான் பிறரிடம் குறைகளை கண்டு பிடிக்க  இப்ப முயலுவதில்லை..

எல்லாம் நன்றாக இருக்கிறது என்பவனிடமும் எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு..

அன்புக்கு மீறி  தன் புலன்களுக்கு உணவு அளிப்பவன் தன் எதிரிகளுக்கு விருந்து படைத்தவன் ஆகிறான்.


உன்னை விட அதிர்ஷடம் குறைந்தவனிடம் உன் இன்பத்தை பற்றி பேச வேண்டாம்.

கடினமான செயலின் சரியான பெயர் --சாதனை
சாதனையின் தவறான பெயர் ---கடினம்

துன்பம் வந்துவிடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் துன்பத்தை விட துயரமானது...


உனக்கு இந்த உலகம்(வீடு) சொந்தமல்ல..நீ தான் இந்த உலகத்திற்கு (வீட்டிற்க்கு )சொந்தம்...

எல்லாரும் தம்மை விட்டு எதையோ  சீர்படுத்த எண்ணுகிறார்கள்.

எழுமின்!எழுமின்! கருதிய கருமம கை கூடும் வரை நில்லாது உழைமின்..

நீங்கள் விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும்...எனவே நல்ல எண்ணங்களையே விதைப்போம்..

நூலறிவு பேசும்.. மெய்யறிவு  கேட்கும்...

பணக்காரனாக வேண்டுமென விரும்புபவன் கஞ்சனாக இருக்கிறான்.நான் பணக்காரன் என செலவு செய்பவன் ஏழையாகிறான்..

பிரட்சனை இல்லா வாழ்க்கையை வேண்டுவதை விட அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வது சிறந்தது..

சகோதரர்களாக இருங்கள் ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்..


தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை உடனே திரும்பி விடுங்கள்..


உடலே  தேர் பொறி புலன்களே  குதிரைகள் மனமே கடிவாளம் அறிவே  தேர் பாகன்..

உண்மையாக நடக்கும் மனைவியை சந்தேகப் படுகிறவன் அவளை பொய்யாய் நடக்கும் படி செய்து விடுகிறான..

உங்கள் பயங்கள் உங்களிடமே இருக்கட்டும். உங்கள் தைரியத்தை மட்டும்  பிறருக்கு புகட்டுங்கள்.

பக்குவமில்லாத மனதை  பக்குவப் படுத்துபவர் தவசி.. அது போல  பக்குவமில்லாத அரிசியையும் காய்கறிகளையும் பக்குவப் படுத்தி சமைப்பதாலே  சமையல் காரரை  தவசி என அழைக்கிறார்கள்.


அஞ்சும் மூனும் சரியாக இருந்தா அறியா பெண்ணும் கறி சமைப்பா..
அஞ்சு---அஞ்சலறை  பெட்டி
மூணு--அடுப்பு

தாழ்வு மனப் பான்மை என்பது செடியில் ஒட்டிக் கொள்ளும் புழு போன்றது.அதை எடுத்து நசிக்கி  விட வேண்டும்.இல்லா விட்டால் புழு செடியை அரித்து விடும்.செடிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கலாம்..ஆனால் மனிதர்களுக்கு....


ஒழுக்கம் என்னும் ஒரு தாயிடத்திலிருந்து  தான்
அறிவு
அன்பு
அறம்
அருள்
ஆகிய  நான்கு சேய்கள் அவதரிக்கின்றன..
அடக்கம்
அமைதி
ஆன்மீகம்
ஆனந்தம்
ஆகிய நான்கு அணிகளை  அவை தரிக்கின்றன..
அவா
அழுக்காறு
அச்சம்
ஆத்திரம்
ஆகிய நான்கு அழுக்குகளை அவை எரிக்கின்றன.
அவன்
அது
இவன்
இது
ஆகிய நான்கு பேதங்களை அவை கரிக்கின்றன.
ஒழுக்கம்
ஒளிர் விடு மாயின்
வையமே
வணங்க வரும்..


ஆண்டவன் நமக்கு  அளிக்கும் வாய்ப்புகள் எதுவாயினும் அதை எப்படி பயனுள்ளதாக்கி கொள்வது என்பது நம் கையில் தான் இருக்கிறது..

ஆண்டவன் நமக்கு மாம்பழத்தை அளித்தால் மாம்பழ ஜூஸ் தான் செய்யமுடியும்..எழுமிச்சை ஜூஸ்  செய்ய முடிய வில்லையே என கவலை பட்டுக் கொண்டிருந்தால் பலனில்லை...


நல்லதென்றும் கெட்டதென்றும் எதுவும் இல்லை..நாம் நினைப்பது தான் அதை அவ்வண்ணம் ஆக்குகிறது..

நேரம் வருகிற போது  அடங்கா  மாடும் நுகத் தடியைச் சுமக்க தான் வேண்டும்.

உன்னை புரிந்து கொள்ளாதவன் உன் மேல் அன்பு கொள்ளவும் மாட்டான்..

கொடிய கற்பனைகளை விட நிகழ் கால பயங்கள் ஒன்றும் பெரிதில்லை..

நிதானமாக நேசி..நின்று நிலைக்கும்  நேயம்  அது தான்..மிக  வேகமாக வருவதும்  மிக மந்தமாக வருவதும்  நிறைவு தரா..


செதுக்குதல் என்பதோ  சீவுதல் என்பதோ  வலி நிறைந்தது தான்.என்றாலும்  பென்சில் சீவப்பட்டால் தான் கூர்மையானதாக இருக்கும்..

பென்சிலின்  வெளிப் புறத் தோற்றம் முக்கியமல்ல. அதன் உள்ளே இருப்பது தான் முக்கியம்..பணம் செல்வம்  வசதி  இதெல்லாம் வெளிப்புறம் மகிழ்ச்சி சந்தோஷம் திருப்தி இதெல்லாம் உட்புறம்.....

விட்டு விடப் போகுது உயிர்...விட்டவுடனே  உடலை சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்...

உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்ப மாகிறது.அதற்கு  முன் பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு..பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை...

மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
வணக்கமும் இணக்கமும்
பின்பற்ற வேண்டியது:
சகிப்புத்  தன்மை அனுசரித்துப் போதல்
விட்டு விட வேண்டியது:
டிமாண்ட்     கமாண்ட்


புது மணத் தம்பதிகள் வெங்காயம் மாதிரி இருக்கணும்.
வெங்காயத்தோட முதல் நிலையில் சிவப்பு வெள்ளை என ரெண்டு வர்ணங்கள் இருக்கும்.திருமண மான புதுசுல  புருஷனுக்கும் மனைவிக்கும் இரு விதமான கருத்துக்கள் இருக்கலாம்.

ஆனா  வெங்காய  தோலை உரிக்க உரிக்க ரெண்டு கலரும் மாறி மாறி வந்து கடைசியில் வறும் வெள்ளை நிறம் மட்டும் வர்ற மாதிரி  காலப் போக்கில்
தனித்  தனி  கருத்துகள் மாறி ஒரே கருத்தா வந்திடணும்..

திருமணம் என்பது முற்றுகை யிடப் பட்ட கோட்டை..வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிப்பார்கள்..

உள்ளே இருப்பவர்கள் வெளியே வரத் தவிக்கிறார்கள்...

பலவீனர்களின் பாதையில் தடையாக இருந்த கருங்கல் பாறை  பலசாலியின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது.

பணம் பிரித்து பார்க்கும்..பாசம் சேர்த்து பார்க்கும்..

சேமிப்பு மனிதனுடைய தகுதியை யும் அந்தஸ்தையும் உயர்த்தக் கூடிய மூலதனம்...

கஷடம் ஒரு நோய் போன்றது. திடீரென தாக்கும் போது அந்த டென்ஷனில்  மனிதன் உண்மையிலேயே நோயாளியாகி விடுவான்.

எந்த விஷயத்தையும் பிரட்சனையையும் நாசூக்காக கையாளுங்கள்.விட்டுக் கொடுங்கள்..


அனுபவம் என்பது கிளியோபாத் ராவை போன்றது. வயதாக வயதாக  அதன் அழகு அதிகரிக்கிறது.

நாளைய வெளிச்சத்தை நம்பித்  தான் இன்றைய இருட்டில் நான் இடித்து விடாமல் இருக்கிறேன்..

பிரட்சனை எல்லாருக்கும் தான் உண்டு.டென்ஷனாவதால் யாருக்கு நஷ்டம். மறப்போம் மன்னிப்போம்  தினமும் ஒவ்வொரு பிரட்சனைகளுக்காக டென்ஷனாகிக் கொண்டிருந்தால் நம் தலைமாட்டில் தான் மாத்திரை பொட்டலம் அதிகமாகும்.ஆகவே  டென்ஷனை மதிக்காதீர்கள். அது டென்ஷனாகி ஓடி விடும்...

enninaivugalin e-pathivu திருக்குறள் அதிசயங்கள்

enninaivugalin e=pathivu தமிழ் தத்துவங்கள்

ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலாம். ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை அறிய முடியுமா?????????????????


துன்பம் ஏன் இருக்க வேண்டும்..இன்பம் என்பது இருக்க வேண்டும் என்பதற்காகவே....துன்பம் இல்லை என்றால் இன்பத்தை எப்படி அறிவது?????????????????இன்பத்தின் சுவை துன்பத்தால் தான் கிடைக்கிறது.

எது எது நம்மை பிரிக்கிறதோ அதை மறப்போம்.எது எது நம்மை இணைக்கிறதோ அதை பற்றி சிந்திப்போம்.

எத்தனை முறை வீழ்ந்தாய் என்பதை விட எத்தனை முறை எழுந்தாய் என்பதே செய்தி.

பணம் நம் தேவைகளை பூர்த்தி செய்வதில்லை.. மாறாக தேவைகளை பெருக்கவே செய்கிறது.

பணம் ஏழைகளிடம் கொஞ்சமாக இருக்கிறது.பணக்காரர்களிடம் அதிகமாக இருக்கிறது..ஆனால் யாரிடமும் போதுமான அளவு இருப்பதில்லை..

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்..அவன் அப்படிப் பட்ட வெற்றியாளன் அல்ல என்று சொல்லிக் கொண்டு..

நம் நிழல் முட்களின் மீதும், கற்களின் மீதும் விழுவதால் நமக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை...

மனிதனின் ஆசைகள் அவன் பையில் சுமந்து செல்லும் உலோக நாணயங்களைப் போன்றது. நாணயங்கள் அதிகமானால் கனமும் அதிகமாகும்.நாணயங்களை கரண்சி நோட்டுக்களாக( குடும்ப பற்றாக )மாற்றிக் கொண்டால் கனம் தெரியாது..எனவே ஆசைகளை ஒரேஏஏஏஏஏஏஏ
ஆசையாக குடும்ப பற்றாக மாற்ற வேண்டும்...

துன்பத்திலும் நல்லதைக் காண்பதும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதும்  பாசிடிவ் திங்கிங்
அது போல பாதகங்களை சாதகங்களாகவும், பலவீனங்களை பலமாகவும் மாற்றிக் கொள்வதும் பாசிடிவ் திங்கிங் தான்.
 அது வ
ஊசி யில் நூல் கோக்கும் போது முனை சிறிது பிரிந்திருந்தாலும் கோக்க முடியாது..அது போல
கவனம் சிறிது சிதறினாலும் காரியத்தை சிறப்பாக செய்ய முடியாது..

சர்க்கரையும் மணலும் கலந்திருந்தாலும் எறும்பு  மணலை நீக்கி சர்க்கரையை மட்டுமே தின்கிறது.

உழைப்பு, உண்மை, உயர்வு என்ற தாரக மந்திரத்தால் வாழ்வில் வெற்றி கிடைக்கிறது.

வாழ்க்கை மிகவும் சிறியது.அதில் பல பிரட்சனைகள் இருக்கும்..என்றாலும்  அந்த சிறிய 
வாழ்க்கையில்  பலவிதமான ஈடுபாடுகளை வளர்த்துக் கொள்வதால் வாழ்வில் வளமும்,நிம்மதியும் கிடைக்கும்.

நேற்று என்பது செலவு செய்த காசு.நாளை என்பது இன்னும் கையில் வராத காசு..இன்று என்பது தான் கையில் உள்ள காசு போன்றது.
ஆகையால நேற்றைய தோல்விகளை அசை போட்டு,இன்றைய தினத்தை கோட்டை விடாது,இன்றைய செயல்களை சிறப்பாக செய்தால்  அது வளமான நாளைய பொழுதினை தானே உருவாக்கும்...

கற்பனையினால்  எல்லை கட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம்.இருந்த இன்பமும் போய் விடுகிறது. இது தான் நல்லது அது கெட்டது என நினைக்கிறோம். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்..கற்பனையான நிலையில் இருக்கும் வரையில் நாம் இது வரை பெற்றதை பாராட்டாமல் அதை அனுபவிக்காமல் இல்லாத பொருள் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என மனதை மறுபுறம் திருப்பி வாழ்க்கையை கவலைக் கிடமாக்குகிறோம்.


வங்கிக் கணக்கைப் போலத் தான் கனவுகள் டெபாஸிட் செய்பவர்களை விட வித்ட்ரா செய்பவர்கள் அதிகமாகி விட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும்..அது போல செயலை விட கனவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..

ஒவ்வொரு பந்தும் பேட்ஸ்மேனை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே வீசப் படுகிறது. ஆனால் அவர்கள் அதை போராகவும், சிக்ஸாகவும் மாற்றி சாதனை படைக்கிறார்கள்.நம்மை நோக்கி வரும் பந்தை எப்படி திசை திருப்புவது என்பதிலேயே கவனம் இருப்பதால் கண்களும் மனமும் குவிந்து தோற்றமே அழகாக மாறி விடும்...எவ்வளவு அருமையான வாழ்க்கை தத்துவம்.

ஒருவனை வீழ்த்த வரும் சோதனைகளை சாதனையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.சாதனைகளினால் நம் தோற்றத்திலும் கூட அழகு தோற்றும்..

அன்பு  கடல் என்றால் அலைகள் பிரட்சனைகள்.ஆழ்ந்த அன்பில் பிரட்சனைகள் உருவாகலாம்.பிரட்சனைகள் அன்பை உருவாக்குவதில்லை..அது தோன்றி தோன்றீ மறையும் அலைகளைப் போன்றது.

எதிர் காலம் என்பது மலர் மொட்டுகளைப் போன்றது...அதை ஆண்டவன் தான் பிரித்து காட்ட வேண்டும். ஆண்டவனால் தான் முடியும்.அதற்குள் என்ன தான் அவசரப் பட்டாலும் அதை தெரிந்து கொள்ள முடியாது..

கூடை கூடையாக இருட்டை கொண்டு மூடினாலும் அகல் விளக்கின் ஒளியை  எந்த இருட்டும் மறைத்து விட முடியாது.

உனது தந்தையின் இறப்புச் செய்தி ஈமெயிலில் வருகிறது.சாப்ட்வேர் சிலந்தி வலைப் பின்னலுக்குள் தகப்பன் நினைவுகளைத் தேடி ந்டுத்து கிடைத்த இடைவெளியில் கொஞ்சமாக அழுகிறார்கள்.உயிர் மீட்க உதவாத  டாலர்களோடு வந்து சேரும் போது எரித்த சாம்பல் கூட எஞ்சியிருக்காது.. அதனாலென்ன...இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வெப்சைட் வராமலா போய்விடும் ..காத்திருப்போம்....

அன்பு என்ற தலைப்பில் மிக சிறிய கவிதை கேட்டார்கள். அம்மா என்றேன்.கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சின்னதாய் சொல்வேன்-நீ------என்று


கருப்பையில்லாமல் பிறக்க முடியாது.
பணப்பையில்லாமல் வாழ முடியாது 
இரைப்பை யில்லாமல் உண்ண முடியாது.
கருவறை தொடங்கி கல்லறை வரை சில்லரை தேவை..

தெரிந்தே கொடுப்பது பகை. தெரியாமல் கொடுப்பது உறவு..

நிதானமாக நிறைவேற்றப் படும் எந்த செயலிலும் முடிவில் வெற்றி கிடைக்கும்..அந்த செயலில் இருக்க கூடிய குறைபாடுகளும் களையப்படுகின்றன..

உங்களை யாராவது கோபமூட்டி பேசினால் திருப்பி பேசாதீர்கள். மறு மொழியை தள்ளிப் போடுங்கள். அந்த மெளனம் உங்கள் மனதில் உள்ள உணர்ச்சி வசப்பட்ட அனலை  சாந்தப் படுத்தும்..எதிராளியை சிந்திக்கவும் வைக்கும்...

வேகத்தடை வாழ்க்கை பாதைக்கும் பொருந்தும்.
ஒரு தொழிலில் ஈடுபட  வேகம் ஆற்றல் பொருள் மூன்றும் மட்டும் போதாது. அந்த தொழிலில் என்ன என்ன பிரட்சனைகள் வரும் எப்படி சமாளிப்பது என்ற நிதானமான பரிசீலனை யும் தேவை.
அதற்கு உதவியாக ஆழ்ந்த தெளிவான சிந்தனையை உருவாக்குவது  இந்த வேகத் தடை தான்.
வேகக் கட்டுப்பாடு வேகத்தை அடக்குவதல்ல...வேகத்தை ஆக்க ரீதியாக நிதானப் படுத்துவது..குடும்ப நல்லுறவிலும் இந்த வேகக் கட்டுப் பாடு கை கொடுக்கும்..

ஒருவனுக்கு மலையேறும் திறமை இருக்கலாம்.எழுச்சி இருக்கலாம். ஆனால் இந்த திறமை ஆற்றல் ஆசை இவற்றை செம்மை படுத்தி செயல்பட நிதானமான அணுகுமுறை தேவை..



திறமை இருப்பது பிரசாதம். அதை கூர்மை படுத்தி நமக்கு ஏற்ற வெற்றி கரமான வார்ப்புக்குள் பிரயோகித்து வெற்றியை பெறுவது வரப்பிரசாதம்...

கவனத்தை விரிப்பதில் காட்டும் ஆர்வத்தை அவற்றை குவிப்பதில் காட்டினால் சாதனை பிரமிப்பாகும்..

எவன் ஒருவன் தனக்கு எதுவுமே தெரியாது என்கிறானோ அவனே அறிஞன்.

ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி செயல் பட வேண்டும்.

வறுமை உள்ளவர்களுக்கு சில பொருள்கள் தேவை.ஆடம்பர வாழ்க்கை க்கு பல பொருட்கள் தேவை..பேராசை கொண்டவர்களுக்கு எல்லாமே தேவை..



கடினமான உழைப்பும் கட்டுப் பாடும் வறுமையை விரட்டி அடிக்கும் சாட்டைகள்..

ஏணியின் உச்சிப் படியை அடைய கீழ்படியிலிருந்து தான் ஏற வேண்டும்.

சில காரியங்களை செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை..செய்யும் செயலை நிறைவாக செய்ய வேண்டும்.

பணம் சேர்ப்பவன் ஒரு பொழுதும் கவலைப் பட மாட்டான்.
கவலைப் படுபவன் ஒரு பொழுதும் பணம் சேர்க்க மாட்டான்.

எவன் அதிகம் ஆச்சரியப் படுவதை நிறுத்திக் கொள்கிறானோ அவன் சீக்கிரத்தில் புத்திசாலியாக மாறி விடுவான்.

தன்னை  நம்புகிறவன் என்றும் வீழ்ச்சி யடைவதில்லை..

எல்லாமே வேடிக்கை தான் உனக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நடக்கும் வரை..

இலட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாது. வேண்டுமென்றால் அவசிய மெற்பட்டால் இலட்சிய த்தை அடையும்  பாதையை வழி முறையை மாற்றி கொள்ளலாம்.

துன்பத்தில் இருப்பவனை உடனை போய் பார்..செல்வத்தில் இருப்பவன் கூப்பிட்டால் போ..

குற்றமுல்ல நெஞ்சம் அச்சமில்லாமல் இருக்கும்.


அன்பளிப்பு பொருளை விட அதை அளிக்கும்  முறை தான் மதிப்பு மிக்கது...அந் நாளில்...

கவலை பயம் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கின்றது. நம்முடைய அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை மறு பாதி நம்பத் தகாதவை..

பார்க்க கண்களை கொடுத்த இறைவன் பார்க்காதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான நேரத்தில் பயன் படுத்துபவனே புத்திசாலி...

விவாதம் செய்வது நிழலுடன் போராடுவதற்கு சமம்.


உயிர் பிரிவதை விட உறவு பிரியும் நேரம் தான் மிகவும் கொடுமை...

ஒற்றுமையாக இருங்கள் ஆனால் மிகவும் நெருக்கமாக இருக்காதீர்கள்.


கடமையை செய்பவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும்.. கவலை படுபவனுக்கு கவலை இருந்து கொண்டே இருக்கும்/

உண்மையை எல்லாம் சொல்ல வேண்டும் என்பதில்லை..சொல்பவை எல்லாம் உண்மையாக இருக்கட்டும்..

ஒரு காரியத்தை ஏன் தவறாக செய்தோம் என விளக்கம் சொல்வதற்குள் அதை சரியாக செய்து விடலாம்..



இன்றைய உலகில் கள்ளச் சிரிப்பும் அசட்டுச் சிரிப்பும் ஆபாச சிரிப்பும் தான் அதிகமாகி விட்டது..மனம் விட்டுச் சிரிக்கும் சிரிப்பு குறைந்து போய் விட்டது.


சில காரணங்களுக்காக பலரையும் விரும்புகிறோம். காரணத்தையும் மீறிச் சிலரை நேசிக்கிறோம்..அதற்கு பெயர் தான் அன்போஓஓஓஓஓஓஓஓஓஒ

மற்றவர்களின் குறைகளே நம்மை வழி நடத்தும் ஆசான்

அன்பு மன உறுதி  நிதானம்  சமயோசித புத்தி  சகிப்பு தன்மை ஐந்தும் கொண்ட பெண் வாழ்வில் தோற்பதில்லை..

பாத்திரத்தின் நிறமல்ல பாலின் நிறம்
ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்


சோம்பேறி இரு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன்.  அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை..

கோழைத் தனம் அது ஆபதில்லையா? எனக் கேட்கும்
சமயோசிதம் அதில் பயனுண்டா? எனக் கேட்கும்
செருக்கு அதில் புகழுண்டா? எனக் கேட்கும் ஆனால்
மனசாட்ச்சி அது நியாயமா ????/ எனக் கேட்கும்.

நீ வையைத் திறக்கும் போதெல்லாம் உன் உள்ளத்தையும் சேர்த்து திறக்கிறாய்.. ஆகவே கவனமாக இருக்கவும்..