விகாஸ் சர்மா என்ற இந்தி எழுத்தாளர் எழுதிய கதை ..
அதிகம் பேசாதே ......
மும்பையில் வசிக்கும் ஷியாம் கிராமத்தில் வசிக்கும் தனது தாயோடு பேசுவதற்கு புதிதாக செல்போன் வாங்கி தருகிறான்..எப்படி உபயோகப்படுத்துவது என அம்மாவுக்கு கற்று தருகிறான்.
தினமும் மும்பையிலிருந்து மாலை நேரத்தில் பொன் செய்வான்.ஐந்து பத்து நிமிடங்கள் பேசுவான்.இரண்டு மாதங்கள் இது தவறாமல் நடந்தது.பிறகு அவன் பொன் செய்தால் அம்மா போனை எடுத்து பேச மறுக்கிறார் .சில வேளை எடுத்தாலும் சில வார்த்தை களில் முடித்து விடுகிறார்.பேசும்போதும் கூட தன் உடல் நலம் பற்றியோ, குழந்தைகள் பற்றியோ விசாரிப்பது இல்லை .அம்மா க்கு என்ன கோபம் என வேதனைப் பட்டான் ஷியாம்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது அம்மா விடம் ஏம்மா போனில் பேசுவதை குறைத்துக் கொண்டாய் என கேட்டான்.
அதற்கு அம்மா 'நீ என்னை பிரிந்து போன பிறகு உன் குரல் கேட்க மாட்டோமா ஊருக்கு வர மாட்டாயா என ஏங்கிக் கொண்டிருப்பேன். உன் பிரிவை தினமும் நினைத்து, நீயும் உன் குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருப்பேன். நீ ஊருக்கு வந்தாலும் கடந்த நாட்களைப் பற்றி விடிய விடிய பேசிக் கொண்டிருப்போம்.
இந்த செல்போன் வந்த பிறகு தினமும் உன் குரலை கேட்கிறேன் .பேசுவதற்கு விஷயமும் இருப்ப தில்லை..எவ்வளவு தான் நெருக்கமாக இருந்தாலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் எரிச்சலாக தான் இருக்கும்.
உறவை வளர்க்க அமைதியும் பிரிவும் அவசியம்.ஐந்து விரல்களும் ஒட்டிக் கொண்டே இருந்தால் கை எதற்கும் பயன் படாது. விரல்களுக்குள் இடை வெளி இருப்பது போல மனிதர்களுக்குள்ளும் இடைவெளி தேவை...
எனக்கு இந்த போன் வேண்டாம் என கூறுவதாக கதை முடிகிறது..
உண்மை ..பிரிவை அமைதியை இடைவெளியை இந்த தலைமுறை உணரவே இல்லை. தொடர்ந்து பேசுவதால் ஏமாற்றமும் மனக்குழப்பமும் உருவாகிறது.
கடைசியில் ஒன்று .
கண்கள் அழகாக இருக்க வேண்டுமா ....உங்க்களைச் சுற்றி உள்ளவர்களின் நல்ல தன்மைகளை காணுங்கள்.
மெல்லிய உடல் வேண்டுமா .....உணவை பகிர்ந்து உண்ணுங்கள்..
எப்போதும் சிரிப்பையும் சந்தோஷத்தையும் உடன் வைத்திருங்கள்.
எவரையும் துச்சமாக நினைக்காதீர்கள். பொருட்களை விட அவசியம் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள் மனிதர்கள் ..
தகவல் தொடர்பு சாதனங்களால் நமது வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது. ஆனால் அதைக் கொண்டு உறவை கெடுப்பதுடன் சமூக குற்றங்களையும் உருவாக்குகிறோம்.கவனத்துடன் களைந்து எறிய வேண்டியது நமது கடமை ....