Saturday, October 29, 2011

PRIVACY-நான் அறிந்தவை

                                                            நான் அறிந்தவை 


நான் எவ்வளவு அன்பு செலுத்துகிறானோ அதன் அடிப்படையில் தான் என் 

வாழ்க்கையின் வெற்றி உள்ளது .

            துன்பங்கள் , துயரங்கள் , சவால்கள் , சோதனைகள் , எல்லாம் கடவுள்   

 நான் வளர்வதற்கு வழங்கும் கொடைகள்.

                  வாழ்கையை ஒரு கொடையாக அன்பு செய்வதற்காக , கற்று 

கொள்கிற ஒன்றாக பார்கிறேன் .

                                                     என்னுடைய கொள்கைகளை ஒரு போதும் விட்டு 

கொடுக்க மாட்டேன் .

                                          நான் தவறு செய்யும் போது தவற்றை ஏற்றுக் கொள்ளும் 

பாதுகாப்பு உணர்வும் , தவற்றை திருத்தி கொள்கிற தன்னம்பிக்கை உணர்வும் ,

 எனக்கு உண்டு .

                                         என்னுடைய செயல்களை பிறர் ஏற்றுகொள்ளாத  

போதும் , அதை பற்றி குற்ற உணர்வோ , வருத்தமோ இன்றி என்னுடைய 

மனசாட்சி படிநடப்பேன் .

Friday, October 28, 2011

PRIVACY-story laptap

   அந்த  பெரிய பங்களாவின்  முன் "car" ஐ நிறுத்தினாள்,   ஸ்ரீநிதி . வேலையாள்  ஓடி வந்து  கதவை திறந்தான் . காரை அதற்குரிய  இடத்தில்   நிறுத்தி விட்டு  திரும்பினால்,  சுமனின்  "caaaar'  வந்து கொண்டிருந்தது . சுமன்  காரை  நிறுத்தினான் .
                              இருவரும்  கண்ணாடி போல பளபளத்த  வராண்டவிற்கு  சென்று அழைப்பு  மணியை  அழுத்தினார்கள் .

     கதவை  திறந்த ஸ்ரீநிதி  அம்மாவிற்கு ஒரே  ஆச்சரியம் . (பல மாதங்களுக்கு  )
குடி வந்து ஏற தாள ஆறு  மாதங்களுக்கு  பின்  இன்று  தான்  இருவரும்  ஒரே  நேரத்தில்  வீடு திரும்பி  இருக்கிறார்கள் .   சந்தோசமாக  இருவருக்கும் காபி  , டிபன் , கொடுக்க  அடுக்களைக்குள்   விரைந்தாள் .

                      ஸ்ரீநிதி ... இன்று  ஆபீஸ்  பகுதியில்  கரண்ட் கட் . எனவே  வீட்டில்  வேலை பார்க்கலாம்  என வந்து விட்டேன் .

                          அப்படியா சுமன்,  carry on....   நான்  நம்  வீட்டு  கிரகபிரவேச photos   ஐ  பிக்காசோ  ஆல்பம்  போடலாம் . என ரொம்ப  நாள் try   பண்ணினேன் . இன்று  தான் நேரம் கிடைத்தது .

    ஓ...... carry on    என்றபடி  தனது  அறைக்குள்  நுழைந்தான்  சுமன்.

             சுமன்,   நம்ம  வீட்டு  நுழைவாயில்  ரொம்ப அழகாக  இருக்குல்ல ......

                                       உம்...உம்..உம்..உம்..

              லான்  நாம் நினைத்தபடி  அமைந்து  விட்டது .

                                          ஆம் .....ஆம் .....ஆம்  ....
   
         ஹாலின்  நடுவே  அந்த  வட்ட வடிவ  சோபா.. ரியலி  super .... பாரு சுமன்  வந்தவர்கள்  எல்லாம்  அதையே  ஆர்வத்துடன் பார்ப்பதை ......


                                                         யா .....யா....யா....

      சுமன் உங்கள் நண்பர்  பரிசளித்த  அந்த கடிகாரம் .... வாவ .. போட்டோ  எடுக்கும்  போது   சரியான  நேரத்துக்கு  வெளியே  வந்து  சத்தம் கொடுத்து  போஸ்  கொடுக்கிறது  பார் அந்த  குருவி .
    உம் ... உம்.. உம் ......i also like it

   கதவை  திறந்து  உள்ளே  நுழைந்த  ஸ்ரீநிதி அம்மா .. ஸ்ரீநிதி, மாப்பிள்ளை 

இன்று  தான்  சீக்கரம் வந்திருக்கிறார் . அவருடன்  பேசாமல்  ,... ஏண்டி. 

  laptap ஐ  கட்டி கொண்டு  அழுகிறாய் ... என  திட்டினாள்.

  ஐயோ அம்மா  இங்க laptap  திரை  ஐ  பார் . நான்  சுமனுடன் தான்  chat ல்    பேசி 

கொண்டிருக்கிறேன் ..
                                          கலிகாலம்... என  முணுமுணுத்த  படி தலையில்  அடித்த படி சென்றாள்.    ஸ்ரீநிதி அம்மா .




PRIVACY-அன்பு

                                                                 அன்பு 


ஒருவரை  பற்றி  பல மணி நேரம் பேசுவது அன்பு  அல்ல . அந்த ஒருவரை  வேறு 

யாருக்காகவும் விட்டு கொடுக்காமல்  பேசுவது  தான் உண்மையான  அன்பு .அன்பின்  வலியது  உயிர்நிலை. என்றார்  திருவள்ளுவர் .அன்பு செய்வதே  உடம்பு  எடுததன் பயனாகும் .என்று  குறள்  கூறுகிறது .
   குடும்பத்தில்  அரும்பி  சமுதாயத்தில் மலர்ந்து  உலக  அளவில்  கனிய  வேண்டியது  அன்பு.

அன்பை  ஆன்மநேயம் , மனித நேயம்  என  பெயரிட்டு  அழைத்தனர்  பெரியோர் .
எத்துணையும்  பேதமுறாது , எவ்வுயிரும்  தம்முயிர் போல  எண்ண வேண்டும் .
என மானிடசமுதாயத் திற்கு   அறிவுறுத்துகிறார்   அருட்ப்ரகாச இராமலிங்க 
வள்ளலார் .இறைவனை துதிக்கும்போது  " அப்பா  நான் வேண்டுதல்  கேட்டருள்  புரிதல் வேண்டும். ஆருயிர் கெல்லாம்  நான் அன்பு  செய்தல் வேண்டும்  என்றார்.
                                      மனிதர்களிடம்  மட்டு மல்லாமல்   பிராணிகளிடமும்  அன்பு 

பாராட்டல்  அவசியம்   என்பதை  குழந்தைகள்  கூட அறிந்து   கொள்ளும்  படி 
பாடினார்  பாரதி .

                                 "வண்டி  இழுக்கும்  நல்ல குதிரை 

                                  நெல்லு  வயலை  உழுது  வரும்  மாடு 

                                    அண்டி  பிழைக்கும்  நம்மை  ஆடு 

                                    இவை  ஆதரிக்க  வேண்டுமடி  பாப்பா .


    இயந்திர  கெதியில்   போயிக் கொண்டிருக்கும்  இன்றேய உலகில்  மனிதர்கள்

 அன்பு  என்ற அருந்தவ  சொல்லையே  மறந்து விட்டார்கள் .


To  love is nothing.
To be loved is something.
To love and be loved is every thing.


Love will die,If held too tightly...
Love will fly ,If held too lightly.

If u love something.,u set it free.
If it comes back to u, it is your's.


Thursday, October 27, 2011

PRIVACY-Page for children.



The      Winner    is    always   part   of   the  answer; The  Loser   is   always   part   of   the   problem.
The   winner  makes  commitments;   The  loser   makes    promises.
Winner s   have  dreams;   Losers   have  schemes.
Winners  see  the  gain; Losers   see  the  pain.
Winners  see  possibilities.  Losers  see  problems.


Winners   see   the  potential;  Losers  see  the  past.
Winners  make  it  happen;    Losers  let it  happen.
Winners  choose  what  they  say.Losers  say  what they  choose.
Winners  use hard  arguments but  soft  words.Losers  use  soft  arguments  but  hard words.
Winners  are  a part  of  the  team;Losers  are  a  part  from  the  team.


Winners  are  like  a  thermostat;Losers  are  like   thermomwters.
The  winners  always  has  a  program;The  losers  always  has  an  excuse.
Winners  say “I  must  do  something”Losers  say  “something  must  be  done.
The  winner  says  “Let  me  do  it  for  you;”The  Loser  days “That  is  not  my  job;’
The winner  says  “It  may  be  difficult  but  it  is  possible.The  Loser  says  “It  may  be  possible  but  it  is  difficult.”


The  winner  sees  an  answer  for  every problem;The  Loser  sees  a  problem  for  every answer.
When  a  winner  makes  a  mistake  he  says  “It  was  wrong.”When  a  Loser  makes  a  mistake  he  says” It  was  not  my  fault.”

Winners  follow  the  philosophy  of  empathy—Don’ t  do  to  others  what you  would  not  want  them to  do  to  you?
Losers  follow  the  philosophy  “Do  it  to  others  before  they  do  it  to  you.
Winners  stand  firm  on  values  but  compromise  on  petty  things;Losers  stand   firm  on  petty  things  but   compromise    on   values.


Winners   plan   and   prepare   to   win.  The   key   word   is    preparation.
 Preparation   is   the   necessary  edge   to  succeed    in   any   field
 Purpose+principle+planning+practice+pride+perseverance+
patience=====PREPARATION.

PRIVACY-thagaval

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.

இப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக்டீரியாக்கள் எங்கிருந்து வருகின்றன?

நாமே நிறைய பாக்டீரியாக்களை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் தயிர். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுடனும், மற்றொரு பொருள் சேரும்போது வேதிவினை நடக்கிறது. அதேபோல, பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை ஊற்றும் போது பாலில் வேதிவினைதான் நடக்கிறது. (சமைப்பதே ஒரு வேதியியல்தான்). பொதுவாக, பாலில் புரதச் சத்து அதிகம். இந்தப் புரதச்சத்துதான் நமது எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால் தயிராகும்போது, இந்தப் புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடுதான் நடக்கிறது.

ஏற்கனவே உறைந்த தயிரில் "லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ்' (Lactobacillus acidophilus) என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும்போது, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைப் பொருளை இந்தப் பாக்டீரியா நொதிக்கச் செய்கிறது. இதன்மூலம் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர்மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின் புரதப் பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் ஈர்க்கின்றன. இதன் காரணமாக புரதப் பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு கெட்டியாகி உறைந்துவிடுகின்றன.

லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதன் காரணமாகத்தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.

உடலில் உணவு செரிக்கவும், நோய்கள் குணமாகவும் லாக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தேவை. இதை உணர்ந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் தயிர், மோரை அதிகம் சாப்பிடச் சொன்னார்கள். நம் வயிற்றுக்குள் செல்லும் உணவை செரிக்க வைப்பதற்கான சில நொதிகளை, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தருகின்றன.

PRIVACY-தகவல்


இன்று மாறிவரும் காலநிலை, உணவு, பழக்கவழக்கம் ஆகியவற்றால் மனித உடல் நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது.

நாளுக்குநாள் புதிய பெயர்களுடன் உலா வரும் நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

அண்மைக்காலமாக மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் "ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.

எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் "ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, October 26, 2011

PRIVACY-டிப்ரஷன்

டிப்ரஷன் இப்போது அதிகமாக காணப் படுகிறது . வாழ்வின் கட்டாயங் களின்
 அழுத்தத்தால் தோல்வி பயத்தால் போட்டியால் கற்பனை பயத்தால் மக்கள் 
செயலிழந்து உந்து சக்திய்ழந்து மனோ வைத்தியரிடம் சரண் அடைகிறார்கள் .

போலியோ, வாக்சின், போல டிப்ரஷனுக்கும் தடுபூசியோ, சொட்டுமருந்தோ  கிடையாது . 

டிப்ரஷனுக்கான காரணக்கள் :

                                                                  செல் போன் பில் அதிகமாவது, பிள்ளைகள் 

 ராத்திரி லேட்டாக வருவது ,மனைவி டூர் போவது ,அண்டை வீட்டாரின்

அணுகுமுறை ,குழந்தை அலறுவது ,சாப்பிட படுத்துவது ,இப்படி எத்தனையோ 

காரணக்கள் .

 போலியோவுக்கு சொட்டு மருந்து கண்டுபிடித்து விட்டோம்.அம்மை  

நோயை துரத்தி விட்டோம் .மலேரியாவை கிட்டத்தட்ட விரட்டி விட்டோம்

எட்சுக்குகுட தடுப்பூசி வந்து ஒடுக்கபட்டுவிடும் .

ஆனால் ......

                 டிப்ரஷனுக்கு நம் மனதுக்குள் ஒரு "பாதுகாப்பு வட்டம் " அமைத்து 

கொள்ள வேண்டும்.

           நம் எல்லைகள் தகுதிகள் இவை தான் என பதம் பிரித்து பார்ப்பது தான் 

நல்ல முறை .

                          சிந்தனை திறனும் , பிரச்சனைகளை அறிவு பூர்வமாக  

அலசும் திறனும் வேண்டும் .

PRIVACY-

PRIVACY-


நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

நிச்சயமாக ஐயா..

கடவுள் நல்லவரா?”

ஆம் ஐயா.

கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

ஆம்.

ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் என்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

ஆம் ஐயா..

சாத்தான் நல்லவரா?”

இல்லை.

எல்லாமே கடவுள் படைப்புத்தான் என்றால் சாத்தான் எங்கிருந்து வந்தார்?”

கடவுளிடமிருந்துதான்.

சரி. இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா?”

ஆம்.

அப்படியென்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மாணவர் பதில் சொல்லவில்லை)

இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

ஆம் ஐயா..

நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது கடவுள் இல்லைஎன்று. இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.

ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதான் இப்போது பிரச்சினையே..ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

ஐயா.. வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?”

நிச்சயமாக உள்ளது.

அதேபோல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?”

நிச்சயமாக.

இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை.

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் என்பது ஓர் ஆற்றல். குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது. (Absence of heat is the cold). “வெப்பம் இல்லைஎன்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தான். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

சரி.. இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?”

ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.

நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு. அதை அளக்க முடியாது. இல்லையா?”

சரி தம்பி.. நீ என்னதான் கூற வருகிறாய்?”

ஐயா.. நான் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.

பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎

மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்தன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் வாழ்வு இனி இல்லைஎன்ற தன்மையே இறப்பு என்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்.பேராசிரியர் பதிலுரைத்தார்.

உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் தன் தலையை இல்லைஎன அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

அப்படியென்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ஒருவகையாஅனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை கொல்லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

யாராவது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் என்ன சொல்கின்றன?”

அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை என்று.

மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரின் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போனது!)

நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!

அது தான் ஐயா.. இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம்.

இறுதிவரைப் பின்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.