இருவரும் கண்ணாடி போல பளபளத்த வராண்டவிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தினார்கள் .
கதவை திறந்த ஸ்ரீநிதி அம்மாவிற்கு ஒரே ஆச்சரியம் . (பல மாதங்களுக்கு )
குடி வந்து ஏற தாள ஆறு மாதங்களுக்கு பின் இன்று தான் இருவரும் ஒரே நேரத்தில் வீடு திரும்பி இருக்கிறார்கள் . சந்தோசமாக இருவருக்கும் காபி , டிபன் , கொடுக்க அடுக்களைக்குள் விரைந்தாள் .
ஸ்ரீநிதி ... இன்று ஆபீஸ் பகுதியில் கரண்ட் கட் . எனவே வீட்டில் வேலை பார்க்கலாம் என வந்து விட்டேன் .
அப்படியா சுமன், carry on.... நான் நம் வீட்டு கிரகபிரவேச photos ஐ பிக்காசோ ஆல்பம் போடலாம் . என ரொம்ப நாள் try பண்ணினேன் . இன்று தான் நேரம் கிடைத்தது .
ஓ...... carry on என்றபடி தனது அறைக்குள் நுழைந்தான் சுமன்.
சுமன், நம்ம வீட்டு நுழைவாயில் ரொம்ப அழகாக இருக்குல்ல ......
உம்...உம்..உம்..உம்..
லான் நாம் நினைத்தபடி அமைந்து விட்டது .
ஆம் .....ஆம் .....ஆம் ....
ஹாலின் நடுவே அந்த வட்ட வடிவ சோபா.. ரியலி super .... பாரு சுமன் வந்தவர்கள் எல்லாம் அதையே ஆர்வத்துடன் பார்ப்பதை ......
யா .....யா....யா....
சுமன் உங்கள் நண்பர் பரிசளித்த அந்த கடிகாரம் .... வாவ .. போட்டோ எடுக்கும் போது சரியான நேரத்துக்கு வெளியே வந்து சத்தம் கொடுத்து போஸ் கொடுக்கிறது பார் அந்த குருவி .
உம் ... உம்.. உம் ......i also like it
கதவை திறந்து உள்ளே நுழைந்த ஸ்ரீநிதி அம்மா .. ஸ்ரீநிதி, மாப்பிள்ளை
இன்று தான் சீக்கரம் வந்திருக்கிறார் . அவருடன் பேசாமல் ,... ஏண்டி.
laptap ஐ கட்டி கொண்டு அழுகிறாய் ... என திட்டினாள்.
ஐயோ அம்மா இங்க laptap திரை ஐ பார் . நான் சுமனுடன் தான் chat ல் பேசி
கொண்டிருக்கிறேன் ..
கலிகாலம்... என முணுமுணுத்த படி தலையில் அடித்த படி சென்றாள். ஸ்ரீநிதி அம்மா .
No comments:
Post a Comment