Saturday, February 20, 2016

enninaivugalin e pathivu--yoga msg suriya namaskaram

      சூரிய நமஸ்காரத்தின் பயன்கள் ...

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.

 சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. 

வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது. 

நினைவாற்றல் அதிகரிக்கும்: உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. 

இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும். 


நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை.

 சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது. உடல் பொலிவடையும்: 

சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லது . வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம்.


 தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.

 தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது.

 சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது. 

வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும், நான்கு சதுர மீட்டர் இடம் தான்.

 சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும்.பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும்.



பிராணாயாமம்....பிராணன் என்ற சக்தியினை உடலில் இருத்தி பஞ்ச கோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை.


காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்கு கூற்றை உதைக்கும் குறியதுவாமே .....என திருமூலர் சொன்னது மாதிரி காற்றைப் பிடித்து ஆளும் மூச்சுப் பயிற்சியில் தொடங்கி மனதின் ஓட்டத்தையும் உடலின் ஆதார சக்தியும் ஒருமிக்கும் சுதர்சன கிரியா முதலான  தியானப் பயிற்ச்சி..

   ஆசனத்தின் பயன்கள் 

அசைவற்ற நிலை,சக்தியை உருவாக்குவதுடன் சேமிக்கவும் செய்கிறது.நரம்பு மண்டலத்தை பேணுகிறது.

உடலுக்கும், மனதுக்கும் பணி ஒய்வு அளிக்கிறது.

தற்சார்வையும், தன்னுள் ஆழ்வதையும் வளர்கிறது.

உடலை குளிர்விக்கிறது.உடல் உறுப்புக்களை பிசைந்து விட்டு இயங்க செய்கிறது.

நாடி நரம்புகளையும் தசைகளையும் ஒன்றாக இயக்குகிறது.இதயத்திற்கு நல்ல ஒய்வு கிடைப்பதுடன் மன அழுத்தம் முற்றிலும் நீங்குகிறது.


இவ்வளவு பயன் அளிக்க கூடிய சூரிய நமஸ்காரத்தையும், பிராணாயாமத்தையும், யோகாசனத்தையும் எளிதாகவும்,விருப்பமுடனும்,ஈடுபாட்டுடனும் ,தான் பெற்ற   பலன் பெறுக இவ் வையகம் என பரந்த மனப் பான்மையுடன் கற்றுத் தரும் இந்த தம்பதியர் வாழ்க வளமுடன்..  வளர்க .தொடர்க... அவர்களின் இந்த சிறந்த பணி...