Tuesday, November 21, 2017
Monday, November 20, 2017
Enninaivugalin e pathivu..tamil super avvai
#ஔவையின் தமிழ்ப்புலமை
ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.
ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.
கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த கீழ்க்கண்ட இரண்டு வரிகளைக் கவனித்தார்:
"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"
தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.
"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன்.
அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார்.
கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.
அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு கரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:
பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
என்பதாகும் அவ்வரிகள்.
இதையும் சேர்த்து முழுப்பாடலாக,
"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "
என்பதாகும்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது.
அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார்.
ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார்.
கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி
ஒளவையாரை நோக்கி,
‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ'
என்று சிலேடையாக ஒரு தொடரைச் சொன்னார்.
எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே இப்பாடலில் உள்ள கேள்வி.
நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும்.
"ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.
டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.
கம்பரின் குறும்பினை ஒளவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."
ஔவையார் பாடிய பாடலின் பொருள் விளக்கம்
தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

Sunday, November 19, 2017
En ninaivu galin e pathivu drama
அனைவருக்கும் வணக்கம்...பிரட்சனையில்லாத மனிதர்கள் யார்...பிரட்சனையை கண்டு பயப்படாமல் எதிர் கொண்டு தீர்த்து மகிழ்வதே வாழ்க்கை...இங்கு பிரட்சனையோடு வருபவர்களின் பிரட்சனையை தீர்த்து அவர்களை சேர்த்து வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்..அதுமட்டுமல்ல நேயர்களே..உங்களுக்கு ஆயிரம் பிரட்சனை இருந்தாலும் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு அடுத்தவர் பிரட்சனையை பார்க்க டி.வி.முன் அமர்ந்து நிகழ்ச்சி ரேட்டிங்கை அதிகப்படுத்தும் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்..உங்களுக்கு எங்களது நன்றி..
.இன்று ஒரு அபலைப் பெண் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
.நான்....வாங்கம்மா வாங்க..............என்ன கண்ணை கசக்கிட்டே வரீங்க...பாருங்க பெண்களோட நிலைமையே இது தான்..வீடியோ ஓடுது மேக்கப் களைஞ்சிடும் நினைக்காம கண்ண கசக்கிட்டு வராங்க பாருங்க இது தான் பெண்களோட இன்றய நிலமை..
ராஜம்....நான அழல மேடம். கண்ணுல தூசி
நான். .பாருங்க கண்ணீர கூட தூசி ன்னு சொல்றாங்க இது தான் பெண்கள்...தமிழ் பெண்கள்......வாங்க உட்காருங்க....சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரட்சனை
ராஜம்...எனக்கு ஒரு பிரட்சனையும் இல்ல மேடம்..
நான்....இல்லமா. இந்த நிகழ்ச்சிக்கு வந்துடீங்க...ஏதாவது சின்ன பிரட்சனைய சொல்லுங்க ..நாங்க அதை ஊதி பெருசாக்கி உங்களையும் பார்ப்பவர்களையும் நொந்து நூடில்ஸ் ஆக்கிடறோம்..
ராஜம்...ஒரு பிரட்சனையும் இல்ல மேடம்...
நான்....சரி உங்க வீட்டுகாரர் என்ன பண்றாரு
ராஜம்...அவர பத்தி பேசாதீங்க மேடம் ...ரொம்ப கொடும படுத்துவார் மேடம்...குடிச்சிட்டு வந்து அடிப்பார் சில சமயம் அடிச்சிட்டு போய் குடிப்பார் மேடம்..ஒரு நாள் மேடம் என் தாலி செயின அத்துட்டு ஓடிட்டார் மேடம்
நான்..என்ன செயின அத்துட்டு ஓடிட்டாறா..எத்தன பவுன் மா.....
ராஜம்....அது ஒரு மூணு பவுனு இருக்கும் மேடம்...
.நான்...மூணு பவுனா....அழகா ஒரு அட்டியல் பண்ணலாமே .இருங்கம்மா அவர கூப்பிட்டு விசாரிக்கலாம்..
.ராஜம்....வேண்டாம் மேடம் இப்ப நான ரொம்ப நிம்மதியா இருக்க மேடம்..அப்பறம் மேடம் என் செயின அத்துட்டு ஓடினார்ல மேடம் அப்ப நான் அருவாள தூக்கிட்டு பின்னால ஓடினேன் மேடம்.அவர் செயின வீசிட்டு போயிட்டார் மேடம்.. விட்ருங்க மேடம் நான இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கேன்...
நான்..இல்லம்மா.அவர கூப்பிட்டு விசாரிக்கலாம்...வாங்க சார்.உட்காருங்க..ஆமா..என்ன அனியாயம் சார்...கேட்க ஆளே இல்லேன்னு நினைப்பா குடிச்சிட்டு வந்து அடிச்சிருக்கீங்க..சரி..அது என்ன அடிச்சிட்டு போய் குடிச்சிருக்கீங்க...இந்த எக்ஸஸைஸ் பண்றதுக்கு முன்னாடி வாம்அப் பண்ணுவாங்களே அத மாதிரி...
சார்...மேடம் நான அவங்களை அடிச்சதே இல்ல...என்னா அது யாரோ...
.நான்...என்ன ராஜம் அவர் அடிச்சதே இல்லனு சொல்றாரே.
.ராஜம்...என் புருஷ குடிச்சிட்டு வந்து அடிப்பார் மேடம்.அடிச்சிட்டும் குடிப்பார் மேடம்..
நான்...சரி இந்த நிகழ்ச்சிக்கு வந்துட்டீங்க.உங்கள சேர்த்து வைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்..சொல்லுங்க சார் இவங்களோட வாழ விருப்பமா...
.சார்....எனக்கு விருப்பம் மேடம்...எங்கள சேர்த்துவைங்க மேடம்.
.நான்....என்ன ராஜம் நீங்க என்ன சொல்றீங்க.
.ராஜம்...வேண்டாம் மேடம்..
.நான் ..இங்க பாருங்க ராஜம் குடிச்சிட்டு வந்து மனைவியை அடிச்சா திருப்பி அடிக்கலாம்..ஏன்..தூப்பாக்கிய வைச்சு சுடக் கூட செய்யலாம்..இது தான் நான் இந்த நிகழ்ச்சியின் மூலம் சொல்லும் தீர்ப்பு..ஆனா.அவர் திருந்தி வந்திருக்கிறாரு ஏத்துக்கிறது தான் பண்பாடு..மன்னிக்கிறது சிறந்த குணம்..சொல்லுங்கம்மா...
.ராஜம்..இல்ல மேடம் அவரு குடிக்கிறாரா நிரந்தர வேல இருக்கா இல்ல வேற ஏதாவது பெண் தொடர்பு இருக்க..ஒண்ணும் தெரியாம எப்படி மேடம்.
.நான்...பாத்தீங்களா....எவ்வளவு திறமைய கேள்வி கேட்கறாங்க..இவங்களோட வாழ்றதுள உங்களுக்கு என்ன சார் பிரட்சனை..இந்த மக்கள சாட்சியா வைத்து அவங்க கேக்ற கேள்விக்கு பதில் சொல்லுங்க..
.சார்..மேடம் நான் ஒரு ஹோட்டல்ல வேலை செய்யறன்...குடிக்கிறது இல்ல மேடம் .தனியா தான் இருக்கேன்..எங்கள சேர்த்து வைங்க மேடம்..
நான்....இருங்க சார் ...உங்கள சேர்த்து வைப்பது தானே நிகழ்ச்சியின் நோக்கம்...அவசரபடாதீங்க....சொல்லுங்கம்மா...
ராஜம் அமைதியாக என்னை பார்த்தல்.....
சார்...மேடம் ஒரு சின்ன சந்தேகம்..
.நான்...என்ன என்ன சந்தேகம்..வெண்ண திரண்டு வரும் போது தாழி உடஞ்ச மாதிரி...நிகழ்ச்சியே முடிய போகுது இப்ப போய் சந்தேகம் அது இது னுட்டு.
.சார்...இல்ல மேடம் அவங்க பேரு என்ன மேடம்..
நான்..என்ன பேரு என்னவா....
.சார்...மேடம்.நான் இப்படி போயிட்டு இருந்தேன்.உள்ள சூட்டிங் நடக்கு அங்க ஒரு அம்மாக்கு கணவனா நடிக்கிறாயானு கேட்டாங்க மேடம் நானும் சரினு நடிக்க வந்த மேடம்.ஆனா நான சொல்றதெல்லாம் உண்மை மேடம்.எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் எங்கள சேர்த்து வைங்க மேடம்.
.நான்...கட் கட் .காமிரா ஆப்..என்ன சார் இந்த நிகழ்ச்சிக்கு வந்திட்டு உண்மையெல்லாம் பேசிட்டு..சரி பரவாயில்ல நம்ம எடிட்டர் நல்லா எடிட் பண்ணி தொகுத்து வழங்கிடுவார்..நீங்க போகலாம்..என்ன நேயர்களே.இன்றைய நிகழ்ச்சி பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.அடுத்த வாரம் இதே போல சந்திப்போம்..வணக்கம்..

Subscribe to:
Posts (Atom)