Friday, June 1, 2012

en ninaivugalin e -pathivu -1.6.2012--story

முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.
ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் : “ கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் . என்ன செய்யலாம் ? “
டாக்டர் ஆலோசனை கூறினார் : “ ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் ! 
முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.
முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார்திடிமென அவளிடம் “ அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே ! “ என்று கூறினார்.
அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை . “ நஸ்ருதீன் எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,” என்று கூறினாள்.
முல்லா பந்தாவாக எழுந்து , “ நான் போய் அதை எடுத்து வருகிறேன் “, என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
ஓஷோ : எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுனநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது

Thursday, May 31, 2012

en ninaivugalin e -pathivu privacy--images







en ninaivugalin e -pathivu privacy--1.6.2012

இறைவன் உடைந்தவைகளை,மிகவும் அழகாகப் பயன்படுத்துகிறான்....

உடைந்த மேகம், நல்ல மழையைத் தருகிறது.
உடைந்த நிலம், செழுமையான வயலாகிறது.
உடைந்த கதிர், நல்ல விதையைத் தருகிறது.
உடைந்த விதை, நல்ல செடியைத் தருகிறது.

பொறுக்க முடியாத வேதனையில், நீ உடைந்து போகும் போது,
வேறு ஏதோ ஒரு பெரிய சாதனைக்காக
உன்னை கடவுள் பயன்படுத்திக் கொள்ளப் போகிறான்
என்பதை கருத்தில் கொள்.

en ninaivugalin e -pathivu ---1.6.2012--use of sun

சூரிய ஒளி நமக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய வரம். சுட்டெரிக்கும் சூரியனால் நாமெல்லாம் மிகவும் கஷ்டப்பட்டாலும், அது இல்லாமல் ஒரு புல், பூண்டு கூட பூமியில் முளைக்காது. அதை விட இன்றைய நாகரிக உலகில் நம் மின்சாரத் தேவைக்கு பல வழிகளைக் கையாண்டு வருகிறோம். அதில் அணுமின சக்தியும் அடங்கும். ஆனால், இந்த அணு மின் சக்தியைப் பெற, நாம் பல பேரழிவுகளை எதிர் நோக்கி பயந்து கொண்டிருக்கிறோம். இருந்தாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையில் அதனை உற்பத்தி செய்யவும் முனைப்போடு செயலாற்றிக் கொண்டு வருகிறோம்.

இதற்கு மாற்று ஏற்பாடாக, மனிதனுக்கோ அலது வேறு ஜீவராசிகளுக்கோ சிறிதளவும் தீங்கு ஏற்படுத்தாத மின்சக்தியை உற்பத்தி செய்ய நாம் முயற்சி செய்து வருகிறோம். அந்த வகையில் நமக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது தான் இந்த சூரிய மின் சக்தி. நம் நாட்டில் வருடம் முழுவதும் இந்த சூரிய ஒளி போதும், போதும் என்கிற அளவுக்கு கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி சூரிய மின்சக்தியை நாம் முழு மூச்சாக செயல்பட்டு உற்பத்தி செய்தால், நம் மின் தேவையும் பூர்த்தி ஆகும். அணு உலை பற்றிய பயமும் போகும்.

சமீபத்தில் ஜெர்மனியில் இந்த சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார்கள். அங்கெல்லாம் சூரிய ஒளி வருடம் முழுவதும் கிடைப்பது அரிது. அங்கேயே இந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடிந்தால் ஏன் நம்மால் முடியாது. நிச்சயம் நம்மாலும் முடியும்.

இது பற்றிய ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பெர்லின்: 20 அணுமின்நிலைங்களில் உற்பத்தி செய்யும் அளவுக்கு சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது.ஐரோப்பிய நாடான ‌‌ஜெர்மன் தனது அணுமின் திட்டத்தை கைவிட்டு,தனது மின்தேவைக்காக புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கு மாறியுள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின்தேவையினை பூர்த்தி செய்கிறது.இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்திய‌ை பயன்படுத்த துங்கியுள்ளது.
இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும்சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது. இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட்மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது 20 அணுமின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட்ஆகும்) இதன் மூலம் தற்போதுநாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிஒளி சக்தி மூலம்பூர்த்தி செய்து ‌ஜெர்மன் சாதனை படைத்துள்ளது.
-நன்றி தினமலர்.

en ninaivugalin e -pathivu --sun stages

தமிழ் புத்தாண்டு பற்றிய பல கருத்துக்கள் இங்கு உலவுகின்றன. இன்று அது அரசியலாகவும் ஆக்கப் பட்டுவிட்டது. இது பற்றி நான் அறிந்த தகவலை நம் படுகை உறவுகளோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சித்திரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.Image

சித்திரை மாதத்தில் சூரியனின் நிலை.

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

en ninaivugalin e -pathivu --story

பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன்.

அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு.

மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.

நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள்.