Tuesday, July 24, 2012

en ninaivugalin e -pathivu -thagavalgal--dad-raguman




en ninaivugalin e -pathivu ---kamaraj story


அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி. .என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடுஎன்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயாஎன்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு.எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடாஎன்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னுதேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டிஐயா நீங்களும் வாங்கஎன்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது.இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்கன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....

en ninaivugalin e -pathivu -story

ஒரு ஆமை வேடன் ஒருவன் பிடித்தான். ஆமைக்கு சாவு பயம் வந்தது.அவன் அதை வீட்டிற்கு எடுத்து வந்து தண்ணீர் பாத்திரத்தில் போட்டான்.ஆமை சந்தோஷமடைந்தது.ஆஹா ..வேடன் நம்மை காப்பாற்றி விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தது. வேடன் அந்த பாத்திரத்திற்கு அடியில் நெருப்பு வைத்தான்.தண்ணீர் லேசாக சூடானதும் ஆமை மகிழ்ந்தது, ஆஹா.. தண்ணீ நல்லா வெதுவெதுப்பாக இருக்கு என்று ..

பிறகு..உம் இப்படி தான் தான் பலியாகப் போவது தெரியாமல் சில மனிதர்களும் இப்படி அர்ப சந்தோஷத்தில் இருப்பர்

en ninaivugalin e -pathivu -thagavalgal--quotes



en ninaivugalin e -pathivu - captain lakshmi shakal

மறைந்தார் கேப்டன் லக்ஷ்மி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ., படையில் இடம் பெற்று, இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக வடிவெடுத்த கேப்டன் லட்சுமி ஷெகல் காலமானார். சென்னையில் பிறந்த லட்சுமி ஷெகல், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று டாக்டரானார். பின்நாளில் ஐ.என்.ஏ., படையின் ஜான்சி ராணி ரெஜிமென்ட் பிரிவின் கேப்டனாக இருந்தார். 2004ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், கம்யூனிஸ்ட் ஆதரவோடு அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

97 வயதான அவர் நெஞ்சுவலி காரணமாக கடந்த புதன் கிழமையன்று கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மூன்று நாட்களாக கோமா நிலையிலேயே இருந்தவர், இன்று(24.7.2012) காலையில் மாரடைப்பு காரணமாக காலமானார். தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக அளித்துள்ளார் லெட்சுமி ஷெகல் என்பது குறிப்பிடத்தக்கது

en ninaivugalin e -pathivu ---tamil mozli special

 ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

en ninaivugalin e -pathivu -first tharkolai patai

உலகின் முதல் தற்கொலை படை - மாவீரன் சுந்தரலிங்கம் மற்றும் அவர் மனைவி வடிவு நாச்சியார்

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழகத்திலிருந்து பல சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும் உடமையும் தியாகம் செய்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்போராட்டத்தில் தங்கள் உயிரை பற்றி சற்றும் எண்ணாமல் எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்துள்ளனர் ஒரு வீர தம்பதியினர். ஆம் கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் தனது மனைவியுமான வடிவு நாச்சியாருடன் , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்துள்ளனர்.

இதுவே உலகம் அறிந்த முதல் தற்கொலை படை தாக்குதலாகும்.

Monday, July 23, 2012

en ninaivugalin e -pathivu -olimpic thagavalgal

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் 11 தங்கம் பெற்று இந்தியா அசத்தல் துவக்கம்

டெல்லி: சமோவாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியின் முதல் நாளில் 11 தங்கப்பதக்கங்களை பெற்று இந்தியா அபார துவக்கத்தை பெற்றுள்ளது.

சமோவா தலைநகர் ஏபியாவில் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி நேற்று துவங்கியது. போட்டியின் முதல் நாளிலேயே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்க வேட்டையை துவங்கிவிட்டனர். முதல் நாளின் முடிவில் இந்தியா 11 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களை வென்றது.

இப்போட்டி சீனியர், ஜூனியர், யூத் 3 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சீனியர் பெண்களில் 48 கிலோ எடை பிரிவில் சஞ்ஜிதா 154 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். 58 கிலோ பிரிவில் மினாட்டி சேதி 175 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோல சீனியர் ஆண்களில் 56 கிலோ பிரிவில் ரஞ்சித் 224 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.

யூத் பெண்களில் 48 கிலோ பிரிவில் அடோம் இந்துபாலா, 53 கிலோ பிரிவில் இரா தீக்ஷிதா, 58 கிலோ பிரிவில் தன்சானா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். யூத் ஆண்களில் 50 கிலோ பிரிவில் ஜம்ஜங் டேரு, 56 கிலோ பிரிவில் அருணா சந்தா ஆகியோர் தங்கம் வென்றனர்.

ஜூனியர் பெண்களில் 53 கிலோ பிரிவில் வெங்கட லட்சுமி, 58 கிலோ பிரிவில் சுமன்பாலா தேவி ஆகியோர் தங்கம் வென்றனர். ஜூனியர் ஆண்களில் 56 கிலோ எடை பிரிவில் எம்.எஸ்.கார்த்திக் தங்கம் வென்றார்.

இது தவிர சீனியர் பெண்களில் 53 கிலோ பிரிவில் திகினா கோபாலும், 58 கிலோ பிரிவில் சுமன்பாலா தேவியும், யூத் பெண்களில் 58 கிலோ பிரிவில் எஸ்.முனிராவும் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனியர் பெண்களில் 53 எடை பிரிவில் கத்திலா வெங்கட லட்சுமி வெண்கலப் பதக்கம் வென்றார்.

en ninaivugalin e -pathivu -google benefits

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10 வசதிகள் :

1) PIN TAB

* உங்கள் குரோம் உலவியில் TAB வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரே விண்டோவில் பல பக்கங்களை திறப்பதற்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
* இந்த TAB களை கையாள PIN TAB என்ற வசதி இங்கு உள்ளது. இந்த வசதியை பெற TAB மீது ரைட்க்ளிக் செய்து பாருங்கள்.
* இந்த PIN TAB வசதி மூலம் நம்முடைய TABஇன் அளவை குறைக்கலாம்.

2) PASTE AND GO/ PASTE AND SEARCH

* குரோமின் அட்ரஸ் பாரில் ரைட் க்ளிக் செய்தால் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
* இதில் ஏதேனும் URL காப்பி செய்து பேஸ்ட் செய்து விட்டு பின்னர் ENTER கொடுப்பதிற்கு பதில் இந்த வசதியை பயன் படுத்தினால் நாம் ENTER கொடுக்காமலே அந்த பக்கம் நமக்கு ஓபன் ஆகும்.

3) DRAG AND DROP DOWNLOADS

* இந்த வசதி மூலம் இணையத்தில் உள்ள படங்களை நம் கணினியில் சேமிக்க ரைட் க்ளிக் செய்து SAVE IMAGS AS என்று கொடுத்து தான் சேமிக்க வேண்டிய என்ற அவசியம் இல்லை.
* நமக்கு தேவையான படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தி இழுத்து நம் கணினியில் விட்டாலே போதும் அந்த படங்கள் நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

4) CALCULATOR

* கூகுள் குரோமின் அட்ரஸ் பார் கூகுள் SEARCH ENGINE ஆக உபயோகிக்கலாம் என்று அனைவருக்கும் தெரியும்.
* ஆனால் அதை சிறிய கணக்குகள் போதும் கால்குலேட்டராகவும் உபயோகிக்கலாம்.
* உதாரனத்திற்க்கு 1254*5 என்று நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்தால் அடுத்த வினாடியே அதற்க்கான விடை உங்களுக்கு வரும்.

5) RESIZE WEB FORMS

* நாம் இணையத்தில் பல தளங்களில் உறுப்பினராகி இருப்போம் அல்லது ஏதேனும் தளங்களில் FEEDBACK போடுவதற்கும் இந்த WEB FORMS கொடுக்கப்பட்டிருக்கும்.
* இந்த படிவங்களை கூகுள் குரோம் மூலம் சிறியதாகவும் பெரியதாகவும் ஆக்கலாம்.

6) TASK MANAGER

* நம் கணினியில் task manager என்று இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். CTRL+ALT+DEL கீகளை ஒருசேர அழுத்தினால் கணினியின் TASK MANAGER வரும்.
* இதில் எந்தெந்த வேலைகள் எவ்வளவு மெமரியை உபயோகிக்கின்றன என்றும் மற்றும் ஏதேனும் ப்ரோக்ராம் ஹாங் ஆகி நின்றால் இதனை உபயோகித்து அதை நிறுத்திவிடும்.
* இதே போன்று கூகுள் குரோமில் ஒரு TASK MANAGER வசதி உள்ளது. இது பிரவுசரில் இதே வேலையை செய்ய உதவுகிறது.
* SETTING- TOOLS - TASK MANAGER என்றும் செல்லலாம் அல்லது உங்கள் கீபோர்டில் SHIFT+ESC அழுத்தியும் இந்த வசதியை பெறலாம்.

7) ABOUT : MEMORY

* கூகுள் குரோமின் அட்ரஸ் பாரில் about:memory என்று டைப் செய்து என்ட்டர் கொடுங்கள்.
* உங்கள் பிரவுசரில் நீங்கள் திறந்துள்ள பக்கங்கள் எவ்வளவு மெமரியை எடுத்து கொண்டுள்ளன என்ற அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.

8) FULL SCREEN

* கூகுள் குரோமில் நீங்கள் தற்போது பார்த்து கொண்டிருக்கும் விண்டோவை FULL SCREEN மோடில் பார்க்க வேண்டுமேண்டுமா
* உங்கள் கீபோர்டில் F11 கீயை அழுத்தவும். உடனே உங்கள் ஸ்க்ரீன் பெரிதாக காட்டப்படும். மீண்டும் பழைய நிலைக்கு வர அதே கீயை திரும்பவும் அழுத்தவும்.

9) COPY TEXT ONLY

* நாம் ஏதேனும் இணைய பக்கத்தில் உள்ள தகவலை சேமிக்க நினைப்போம். ஆனால் அதை காப்பி செய்து நம் கணினியில் பேஸ்ட் செய்தால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தும்(படங்களோடு) நமக்கு வரும்.
* ஆனால் நமக்கு வெறும் எழுத்தக்கள் மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் முதலில் அந்த இணைய பக்கத்தை காப்பி செய்து கொள்ளுங்கள்.
* GMAIL, GOOLE DOC போன்ற இடங்களில் CTRL+SHIFT+V அழுத்துங்கள். நீங்கள் காப்பி செய்த பக்கங்களில் உள்ள எழுத்தக்கள் மட்டும் பேஸ்ட் ஆகி இருக்கும்.
* அதை காப்பி செய்து உங்கள் கணினியில் நீங்கள் சேமித்து கொள்ளலாம்.

10) APPLICATION SHORTCUTS

* நீங்கள் ஏதேனும் வலைதளத்தை தினமும் ஓபன் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த தளத்தின் URL டைப் செய்து ஓபன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
* அந்த தளத்திற்கு ஒரு SHORTCUT கீ வைத்து கொள்ளலாம். நம் STRAT MENU , QUICK LAUNCH, DESKTOP போன்ற இடங்களில் அமைத்து கொள்ளலாம்.
* இதற்க்கு SETTINGS- TOOLS - CREATE APPLICATION SHORTCUT என்பதை க்ளிக் செய்து இந்த வசதியை பெறலாம்.

en ninaivugalin e -pathivu -two wheeler safty

டூவீலர் திருட்டை தடுக்க புதிய தொழில் நுட்ப முறையில் மீட்டர் பாக்ஸ் பொறுத்தும் முறையை கும்பகோணத்தைச் சேர்ந்த மாணவர் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் விவேக்ராஜ் (23). கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., மெக்கானிக் படித்துள்ளார்.

இவர் டூவீலரில் சாவிக்கு பதில் கைவிரல் ரேகை மற்றும் ரகசிய எண்ணை பயன்படுத்தி இயக்கக்கூடிய வகையிலும், தானாகவே டூவீலர் பூட்டிக்கொள்ளும் வகையில் ஆட்டோமேடிக் லாக்கையும் கண்டுபிடித்துள்ளார். சாதனை கண்டுபிடிப்பு குறித்து விவேக்ராஜ் கூறியதாவது:டூவீலரில் உள்ள மீட்டர் பாக்ஸ் பகுதியில் சாவிக்கு பதில் கைரேகையை பதிவு செய்யும் கருவியை இணைத்து, குடும்பத்தில் உள்ளவர்கள் கைரேகையை அதில் பதிவு செய்ய வேண்டும்.

டூவீலரில் உரிமையாளர் அனுமதியுடன் ரகசிய எண்ணை பயன்படுத்தி அவரது நண்பர்களுக்கு மட்டும் அது தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த எண்ணையும், கைவிரல் ரேகையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள டூவீலரில் கைவிரல் ரேகை, ரகசிய எண் அறிந்தவர் தவிர மற்ற எவரும் டூவீலரை நகர்த்தக்கூட முடியாது.

மேலும், போர்க் லாக், பேக்வீல் லாக், பெட்ரோல் லாக் என மூன்று லாக்கரை அமைத்து, அவற்றையும் இதனுடன் இணைத்தால் அம்மூன்றும் டூவீலரை நிறுத்தியதும் லாக் ஆகிவிடும். இதனால், இந்த டூவீலரை உருட்டிச் செல்ல முடியாது. திருப்ப முடியாது. ஓட்டிச் சென்றால் சிறிது தூரத்தில் பெட்ரோல் தீர்ந்து டூவீலர் தானாக நிற்கும்.

டூவீலரை கைரேகை வைத்து, ரகசிய எண் கொடுத்து ஸ்டார்ட் செய்தால் மட்டுமே பிற லாக்கர் திறந்து டூவீலரை இயக்க முடியும்.இந்த முயற்சிக்கு காப்புரிமை பெற முயன்றுள்ளேன். இதை கண்டறிய எனக்கு 8,500 ரூபாய் செலவானது.

வியாபார ரீதியில், அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தினால் மிகக்குறைந்த விலையில் பயன்படுத்தலாம். டூவீலர் திருட்டையும் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்த கண்டுபிடிப்புக்கு அவரது கல்லூரியில் முதல் பரிசும், சென்னை ஐ.ஐ.டி.,யில் 76 கல்லூரிகள் பங்கேற்ற போட்டியில் மூன்றாம் பரிசும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

en ninaivugalin e -pathivu சிறுகதைகள்---காந்திஜி

காந்தியடிகள் பெங்களூரில் தங்கியிருந்தார். ஒரு நாள் ஒரு மங்களை ஒரு தட்டில் தேங்களாய், பழம், வெற்றிலைப்பாக்கு, பூ முதலியன எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தட்டை அண்ணலின் அடிகளில் வைத்து அடிகளைத் தொட்டு வணங்கி எதிரே நின்று கொண்டிருந்தாள். அண்ணல் கைகூப்பி அதை ஏற்றக்கொண்டார். அவள் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தாள். அண்ணல் மீண்டும் கைகூப்பி விடை கொடுத்தார். மறுபடி மூன்றாவது தடவையும் காந்தியடிகள் நமஸ்காரம் செய்தார். ஆனால் அவளோ, நகருவதாக இல்லை. அச்சமயம் ராஜாஜியும் அண்ணலுடன் கூட இருந்தார். காந்திஜி, ராஜாஜியிடம், ”இந்தப்பெண் ஏதாவது சொல்ல விரும்புகிறாளா? கேளுங்கள்” என்றார்.
ராஜாஜி அந்தச் சகோதரியிடம் கன்னடத்தில் பேசி அறிந்துகொண்டு ” இவளுக்குக் குழந்தை வேண்டும். நீங்கள் மகாத்மா. ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறாள்” என்று தெரிவித்தார். காந்திஜி சொன்னார். ”நான் ஒன்றும் மகாத்மா அல்லவே! ஆசீர்வாதம் எப்படிச் செய்வேன்?”


”நீங்கள் எவ்வளவோ பேருக்கு ஆசீர்வாதம் செய்து பலித்தும் இருக்கிறதாம். எனக்கு மட்டும் ஏன் ஆசீர்வாதம் செய்யக்கூடாது என்கிறாள் இவள்!”

”அப்படியா! எனக்கு ஒரு சக்தி இருக்கிறது! என்று இன்றுதன் தெரிந்துகொள்கிறேன்! ஆயினும் இவளிடம் சொல்லுங்கள் கிராமத்தில் இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனவே! ஒன்றைத் த்த்து எடுத்துக் கொண்டு ஏன் வளர்த்து மகிழக் கூடாது?”



”உறவினர்கள் குழந்தை, ஊரார் குழந்தைகள் எல்லாரிதமும் நான் பிரியமாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்ன இருந்தாலும் நம்முடையதுதானே நம்முடையதாகும்?”
இதைக்கேட்டு விட்டு அண்ணல் ”நான், எனது, பிறருடையது” என்ற மோகத்தைப்பற்றி சிறந்த உபதேசம் செய்தார். எதற்கும் அச்சகோதரி அசைந்து கொடுக்கிறவளாக்க் காணோம். இறுதியில் அண்ணல் ”ஆண்டவன் உனக்கு ஆண்குழந்தை அளித்தால் நான் தடுக்கவா போகிறேன்?” என்று சொன்னார்.
இதையே ஆசியாக்க் கொண்டு அச்சகோதரி போய்ச் சேர்ந்தாள்!
2.
 
 ”யங் இந்தியா” பத்திரிகையை அடிகள் ஏற்றுக்கொள்வதற்கு முன் ஒரு நாள் அதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதன் அப்போதைய ஆசிரியர் ஆர்.கே. பிரபுவும் அருகே இருந்தார். அடிகள் அவரிடம், ”இதற்குச் செய்திகள் எங்கிருந்து சேகரிக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
பிரபு: ”யங் இந்தியா”, பாம்பேகிரானிக்கிள்” இவற்றிற்கு மாற்றாகப் பல பத்திரிகைகளை வருகின்றன. அவற்றிலிருந்து கத்தரித்து எடுக்கிறேன்.
காந்திஜி: இந்த வேலையில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?”


 ‘இந்தப் பத்திரிகைக்கு வேண்டிய செய்திகள் தயாரிக்க அரைமணியைவிட அதிகமாவது அபூர்வம்தான்!” காந்திஜி வியப்புடன் சொன்னார்: ”நான் தென்னாப்பிக்காவில் இருந்த போது ”இந்தியன் ஒபினியன்” நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது மாற்றாக சுமார் 200 பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. நான் அவற்றை மிகவும் கவனமாய்ப படிப்பேன். அவற்றிலிருந்து ஏதாவது செய்தி எடுப்பதற்கு முன்பு இதனால் வாசகருக்கு உண்மையிலேயே பயன் உண்டு என்று தெரிந்துதான் எடுத்துக் கொள்வேன். பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்பவன் தன் பொறுப்பை மிகவும் கடமை உணர்வுடன் ஈடேற்ற வேண்டும். பத்திரிகைக் தொழில் என்ன? எல்லாத் தொழிலிலுமே இந்தக் கடமையுணர்வு தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சரியா, இல்லையா?
பிரபு சற்றே வெட்கத்துடன், ”ஆம் உண்மைதான். ஆனால் ”பாம்பே கிரானிக்கிள் ஆசிரியர் குழாத்தில் இருக்கும் என்குக அந்த வேலை செய்யவே வாரத்தின் நாள் எல்லாம் போய்விடுகின்றன. பிறகு இதை மிகவும் விரைவில் முடிக்க வேண்டி நேர்ந்து விடுகிறது.”
காந்திஜி சட்டென்று இதற்கெல்லாம் உங்களுக்கு சன்மானம் எவ்வளவு கொடுக்கப்படுகின்றது? என்று கேட்டார்.

        ஒரு பத்திக்கு பத்து ரூபாய்க் கணக்கில் கிடைக்கிறது.
    ஒரு பத்தி பத்து அங்குலம் தான் இருக்கும். அதுவும் பத்து பாயிண்டு எழுத்துக்கள் கொண்டது. ஆகவே கணக்குப் பார்த்தால் நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய் அவருக்குக் கிடைத்து வந்தது. காந்தி அடிகள் தனக்குள் கண்க்குப் போட்டுப் பார்த்துவிட்டு ”கிரானிக்கிளில் வேலை செய்வதற்கு எவ்வளவு கிடைகிறது?” என்று கேட்டார்.


 மாதம் நானூறு ரூபாய். காந்தி அடிகள் ஒரு கணம் தயங்கினார்.மேலே சொன்னார்: ”யங் இந்தியா” வுக்காக நீங்கள் பணம் வாங்கிக் கொள்வது சரி என்று படுகிறதா உங்களுக்கு? இந்தப் பத்திரிகை பணம் ஈட்டும் இதழல்ல என்ற நீங்கள் அறிவீர்களை அல்லவா? இது தேசபக்தியின் தொண்டுவேலை. இதன் மூலம் அதன் செலவுக்குக் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும்போது இதை நடத்துகிறவர்கள் பளுவைக் கூட்டுவது உங்களுக்கே சரியாகத் தோன்றுகிறதா?


 ”உரிமையாளர்கள் விரும்பிக் கொடுப்பதையே நான் வாங்கிக் கொள்கிறேன். நான் பிடிவாதமாக எதுவும் கேட்கவில்லையே!” காந்திஜி சொன்னார்:, ”சரிதான். இருந்தாலும் நானாக இருந்தால் ஒர் பைசா கூட வாங்கிக் கொள்ள மாட்டேன். உங்கள் முழு நேர வேலைக்குத் தகுதியாக ”பாம்பே கிரானிக்கிள்’ கார்ர்கள் ஊதியம் தந்து விடுகிறார்கள். ‘யங் இந்தியா’வுக்குச் செய்வது ஒழிந்த நேரத்தில் செய்கிற வேலை! முழு நேரத்துக்கும் ஒரு இடத்தில் சம்பளம் கிடைக்கும் போது இடையில் செய்யும் வேலைக்கும் ஊதியம் வாங்குவது சரியில்லை. அதை எதிர்பார்க்கவும் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படித்தானில்லையா?
காந்திஜி பிரபிவின் உள்ளத்தில் அறநெறியின் அருமைப் பாடம் ஒன்றைப் பதிய வைக்க முயன்றார். பிரபு அதன் புது ஒளியில் கொஞ்சம் திடுக்கிட்டார். அவர் மிகவும் பணிவுடம் தலையை மட்டும் அசைத்துவைத்தார், ஒத்துக்கொண்டதற்கு அறிகுறியாக.
3.

en ninaivugalin e -pathivu சிறுகதை

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான்.
“குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

en ninaivugalin e -pathivu சிறு கதை

தன் மகனை அழைத்த தந்தை, “நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்” என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான். 

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.
மகனைப் பார்த்து, “நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு” என்றார்.
மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.
மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.
“இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?” என்று கேட்டார்.
“இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது” என்றான் அவன்.
“அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?” என்று கேட்டார் அவர்.
“அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்” என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

 

en ninaivugalin e -pathivu அதிசய சிறு கதைகள்

 பாம்பைக் கண்டால் படையும்  நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !?

இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .


 உயிர் காக்கும் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங், துப்பாக்கி சுடுவதில் கில்லாடியாம். முதல் உலகப் போரின் போது எதிரிப் படையினர் ஒரே நேரத்தில் பத்துக்கும் அதிகமானோர் இவரை நோக்கி ஆயுதங்களுடன் வரவே இவரின் அருகில் இருந்த ஒரு வீரன் இவரை நோக்கி என்னிடம் உள்ள துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டுதான் உள்ளது வாருங்கள் அவர்களிடம் மண்டியிடுவோம் என்று அழைத்திருக்கிறார்.


பதில் அளித்த ஃப்ளெமிங் ஒரு குண்டு இருக்கிறதே அது போதும் நான் ஒரே நேரத்தில் ஒரு குண்டை வைத்து பத்து வீரர்களையும் வென்று விடுவேன் என்று தனது கைகளின் இருந்த அமிலப் பாட்டிலை நூறு அடிக்கு அதிகமான துரத்தில் வருபவர்களை நோக்கி வீசி குறி தவறாமல் சுட்டிருக்கிறார் அந்த அமிலப் பாட்டில் வெடித்து சிதறியதில் அந்த வீரர்கள் மட்டும் இல்லாது அதன் அருகில் இருந்த பல வெடிகுண்டு கிடங்குகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறி நானுறுக்கும் அதிகமான வீரர்கள் இறந்து போனார்களாம், அது மட்டும் இல்லாது குண்டடி பட்டு விழுந்த வீரர்களுக்குப் போர் முனையில் டாக்டராக இருந்தும் உயிர் காத்து தனது நாட்டிற்கு அரும்பணி செய்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . 

en ninaivugalin e -pathivu சிறு விடுகதை

பட்டணம் செல்ல ஒரு ராஜா புறப்படுகிறார் . அவருடன் 9 மனைவிகள் புறப்படுகிறார்கள் . ஒவ்வொரு மனைவியின் பின்னால் 9 குழந்தைகள் போகின்றன . ஒவ்வொரு குழந்தையின் பின்னால் 9 நாய்கள் செல்கின்றன . ஒவ்வொரு நாயின் பின்னால் 9 குட்டிகள் செல்கின்றன .

அப்படியானால் , ராஜாவுடன் போனவர்கள் மொத்தம் எத்தனை பேர் ? 

விடை--7380

en ninaivugalin e -pathivu போலியோ மருந்து விழிப்புணர்சி

கணினி வல்லுனர் ஒருவர் தனது குழந்தைக்கு போலியோ மருந்து கொடுக்க அழைத்து சென்றிருக்கிறார் . அங்கு வரிசையில் நிற்கும்பொழுது அழுகின்றக் குழந்தைகளை சமாதானம் செய்வதற்காக ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளுக்கு சிலர் பலர் புட்டிப் பாலும் கொடுத்திருக்கிறார்கள் . அப்பொழுது இவரின் குழந்தையும் அழுகத் தொடங்கவே இவரும் வேறு வழியின்றி அருகில் இருந்த டீ கடையொன்றில் பால்வாங்கி தனது குழந்தைக்கு கொடுத்து அதன் அழுகையை நிறுத்தியதாகவும் . ஒருவேளை அந்த கடை மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் தனது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்றார்.  .அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பால் கொடுத்ததில் இருந்து எவளவு நேரம் கழித்து மருந்து கொடுத்தீர்கள் என்று . அதற்கு அவர் கொடுத்தப் பதில் எனது கோபத்தை அதிகப்படுத்தியது . பால் கொடுத்து ஐந்து நிமிடத்தில் சொட்டுமருந்து கொடுத்துவிட்டார்கள் உடனே வீடு திரும்பிவிட்டேன் என்று கூறினார் .
னைவருக்கும் புரியும் விதமாக போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் இடங்களில் இந்த தகவலை தெளிவுபடுத்தும்  படங்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழிலும் எழுதி வைத்தால் நலமே !
 

en ninaivugalin e -pathivu ---thaththuvangal

ஒரு எறும்பு நினைச்சா, ஆயிரம் யானையை கடிக்கலாம். ஆனால், ஆயிரம் யானை நினைச்சாலும், ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!

ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.
-விவேகானந்தர்.


நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-ப்ராங்கின்.

 
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-தாகூர்.

 
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
-கண்ணதாசன்.

 
மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-பிளாட்டோ.

 
தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி விடுங்கள்.
-யாரோ.

 
நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-கன்பூஷியல்.



பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். -கவிஞர் கண்ணதாசன். 

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்.
-பல்கேரியப் பழமொழி.

 
எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு.
-சிங்சௌ.

 
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
-மாவீரன் நெப்போலியன்.

 
உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான். உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
-யங்.


பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.

en ninaivugalin e -pathivu -keyboard chords wheel


en ninaivugalin e -pathivu --magic


en ninaivugalin e -pathivu privacy- lord kannan


en ninaivugalin e -pathivu privacy-lord kannan


en ninaivugalin e -pathivu privacy-lord kannan


en ninaivugalin e -pathivu privacy-lord kannan


en ninaivugalin e -pathivu privacy-lord kannan


en ninaivugalin e -pathivu privacy-lord kannan


en ninaivugalin e -pathivu --kamaraj story

காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடுஎன்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயாஎன்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு.எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடாஎன்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னுதேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள்.