Thursday, December 16, 2021

Enninaivugalin e pathivu

 மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.


என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !


நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!


என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!


தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.


அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!


தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !


நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!


எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!


நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"


உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

Tuesday, December 14, 2021

Enninaivugalin e pathivu

 முத்து இல்லம் ' என்று அழகாக பொன் எழுத்துக்களால் பொறித்த வீட்டிற்கு நுழைந்தும் நுழையாததுமாய்...


" இப்போது திருப்தியா அலமேலு ! நீ நினைச்சது போல செஞ்சாச்சு " என்றான் ராஜா என்ற முத்துராஜன்.


"என்னங்க அப்படி சொல்லிட்டீங்க. எனக்கு மட்டுமா சந்தோசம் ! ஏன்? உங்களுக்குமில்லையா ?இல்லே  நம்ம மாலா, லீலா குழந்தைங்களுக்குமில்லையா ? என்னமோ எனக்காக மட்டும் இந்த காரியத்தை செய்தாற்போல சலித்துக்கொள்றீங்களே" சற்று அழுத்தமான பேசினாள் அலமேலு.


அன்றைய பொழுது என்றைக்குமில்லாத அளவுக்கு மிக மிகச் சுதந்திரமாய் மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. நேற்று வரை இருந்த உணவு கட்டுப்பாடு தளர்ந்தது. நேற்று வரை  அதாவது இந்த நாளையில் இந்த உணவு தான் இந்த வேளைக்குச் சாப்பிடவேண்டுமென்ற கட்டளை நீங்கியது. அளவு சாப்பாடு என்று ஒன்று அன்று முதல் அளவற்ற சாப்பாடாக மாறியது. டி.வி ஓடும் நேரம் ஒரு மணி நேரமாய் இருந்த சட்டம் அன்றிலிருந்து  எந்நேரமும்  ஓடத் துவங்கியது. கண்ணில் காட்டாத அல்லது காணாமல் போயிருந்த நொறுக்கு தீனிகள் அன்று கணக்கில்லாமல் தீர்ந்தன. மாலைநேர குட்டி தூக்கம் நீளமாக மாறின. சாயும்கால குழந்தைகளின் படிப்பு சீரியல் பார்ப்பதிலும், பாட்டு கேட்பதில் கழிந்தன. இதுவரை முகவரி தெரியாத வாயில் நுழையாத ஹோட்டல் சாப்பாடு வகைகள் வீடு தேடி வந்தன. இந்த அவுத்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் மறுநாள் பொழுது விடிவது கூட அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

காலையில் அந்த வீட்டு வாசலில் வழக்கம்போல பேப்பர் போடும் பையன் "சார்! பேப்பர். .. சார்.. பேப்பர் " என்றைக்குமே இப்படி கூப்பிடாதவன் அன்று மூன்று அழைத்தும் யாரும் வராத காரணத்தினால் அந்த தினசரி நாளிதழை வீட்டு வாசலில் தூக்கியெரிந்தான்.


அவனுக்கு அந்த வீட்டிலிருந்து எவ்வித பதிலும் வாராதது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நேற்று வரை இந்த வீட்டில் அந்த பேப்பர்கார பையன் வருவதற்கு முன்பே  அந்த வீட்டில் இருக்கும் பெரியவர் அதாவது முத்துராஜனின் அப்பா முத்துமணி காத்திருந்து அந்த தினசரியை கையில் தான் வாங்குவார். அது அவர் தினசரிக்கும் கொடுக்கும் மரியாதையா? என்று சரியாக தெரியவில்லை. இன்று அவர் வாசலில் இல்லாதது அவன் மனதை சற்று வருடியது. 


முத்து ராஜனின் நண்பர் நடேசன் வழக்கம் போல 'நடை மற்றும் தியான பயிற்சி' செய்வதற்கு தனது நண்பனுக்காக வீட்டிற்கு முன்பு காத்திருந்தான். அவர்கள் தினமும் இவைகளைச் செய்ய தவறுவதில்லை.              


" அவரு தூங்குறாரு, இனிமே தினமும் பயிற்சிக்கு வரமாட்டார். முடிஞ்சா வாரம் ஒரு நாள் அதுவும் ஞாயிறு கிழமை மட்டும் வருவார் " என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் வாசலில் இருந்த தினசரியையும், பாலையும் எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். 

வீட்டினுள் .. சமயலறையில் சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் குழந்தைகளுக்கு வேண்டியதை செய்துகொண்டும் மறுபுறம் தான் அலுவலகம் செல்வதற்கும் தயாராகிக் கொண்டிருந்தான் முத்து ராஜன். இந்த பரபரப்புக்கு காரணம் அனைவரும் அன்று நேரம் தாழ்ந்து எழுந்ததால் தான். கண்மூடித் திறப்பதற்குள் காலம் பறந்தது. எல்லா வேலைகளும் ஏனோதானோவென்று அரைகுறையாக நடந்தது.


இருசக்கரத்தில் அலுவலகம் சென்ற முத்து ராஜன் அன்று சீக்கிரமாகவே காரில் அவருடைய சக தொழிலாளி இரண்டு பேருடன் வீட்டிற்கு வந்து இறங்கினான். அவரை இருவரும் இருபக்கத்தில் கை தாங்களாக மெதுவாக வீட்டிற்குள் அழைத்து வந்து காற்றாடியை வேகமாக பறக்கவிட்டு கட்டிலில் படுக்க வைத்தனர். இந்த காட்சியை கண்ட அலமேலு "என்னங்க...." என்று துடிதுடித்துப் போனாள். கவனம் சிதறியதால் கை கால் உதறியது. அந்த நிகழ்வை கிரகித்துக்கொள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டாள்.

அவருடைய 'பாஸ் ' இன்னைக்கு லீவு. எல்லா வேலைகளும் இவன் மட்டுமே பார்த்தான். அதனாலே கொஞ்சம் பிரசர் அதிகமாயிருக்கும் என்று நினைக்கிறோம். அதை உறுதி செய்ய வரும்போது பக்கத்தில் இருந்த டாக்டரிடம் காட்டினோம். அவரும் பிரசர் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் இது ஆரம்பம் தான் என்றும் இப்போதிலிருந்து தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே சரியாகிவிடும் என்றும் சொன்னார்." என்றனர் அவர்கள்.


அவர்கள் பேச பேச அதை கேட்க கேட்க அவளின் உடல் தெம்பு குறைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவளுடைய உடலும் ஏறக்குறைய சோர்வாய்த்  தான் இருந்தது.

குடும்ப டாக்டரிடம் போனார்கள்..

அவர் அட்வைஸ் பண்ண தொடங்கி விட்டார்...

உங்கப்பா முதியோர் இல்லத்தில் நல்லா இருக்கின்றாரா?"

நல்லா நினைச்சு பாரு. அவரு உங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அதிகாலையிலே எழுந்து அவராலே முடிஞ்ச வீட்டு வேலைகள் செய்தது உங்களுக்கு உதவியா இருந்தார்.. அதனாலே எல்லா வேலையும் நிதானமா செய்தீங்க. அதே சமயத்தில் நீங்கள் எல்லோரும் காலையில் எழுந்து அதாவது உங்க மனைவி வீட்டு வேலைகள் பரபரப்பில்லாம செய்ததாலே உடம்பு பெருக்காம ஆரோக்கியமா இருந்துச்சு. இப்போ பெருத்திட்டா. நீயும் நடை, தியானம் செய்யாம விட்டதாலே உனக்கு இரத்த கொதிப்பு, மன அழுத்தம், அது மட்டுமில்லே எந்நேரமும் குழந்தைங்க டி.வி பார்த்ததினாலே கண்ணாடி போடவேண்டிய நிலைமை. அத்தனையும் தாண்டி பழமையான கட்டுப்பாடானான உணவு பழக்கம் உங்களின் உடல் நலத்தை நல்லபடியாக இருக்க உதவியது . அவர் உங்களுக்கு நல்ல பழக்கவழக்கத்தை உண்டுபண்ணினார். அது உங்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாக நினைசீங்க. ஒழுக்கம் உங்களுக்கு பாரமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. கடைசியாக உங்களுக்கு சொல்றேன். மருந்து ,மாத்திரை இல்லாம , உடம்பு கஷ்டம் இல்லாம இருக்கனும்ன்னு விரும்பினா இப்போவே உங்கப்பாவை முதியோர் இல்லத்திலிருந்து முத்து இல்லத்திற்கு அழைத்து வந்திருங்க. ஏன்னா, அவருடைய கண்டிப்பு உங்க வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. குழந்தைங்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. அது தான் நீங்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதையும்,  நீங்க செய்ய வேண்டிய கடமையும் ஆகும். இல்லே சாப்பாட்டுக்கு பதிலா நான் கொடுக்கிற மருந்து, மாத்திரை சாப்பிடுறதா இருந்தா இந்த மருந்து சிட்டையில் இருப்பதை வாங்கிக்கொண்டு சாபிடுங்க. முடிவு உங்கள் கையில் !" என்றார் ஆணித்தரமாக.


 

"அமாங்க, உடனே போவோம். மாமனாரை அன்புடன் அழைத்து வருவோம். கட்டுப்பாட்டுடன் உள்ள சுதந்திரம் தான் நீண்ட ஆரோக்கியம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்." என்று அவசரப் படுத்தினார்.


"ஐய்யா .. தாத்தா இனிமேல் நம்ம கூட இருக்கப் போகிறார் " என்கிற சந்தோசத்துடன் இருந்தனர்.

Enninaivugalin e pathivu

 வயதானதற்குப் பிறகு எதற்கு ப்ரைவசி???  


வயதான பிறகு கணவன் மனைவிக்கு ப்ரைவசி தேவைப்படாதா?


உண்மையில் வயதான பிறகுதான் பெரும்பாலான ஆண்கள் மனைவியைப் புரிந்துகொள்ளத் துவங்குகிறார்கள். மனைவியின் சின்ன சின்ன விருப்பு வெறுப்புகள் அவர்கள் கண்களில் படுகின்றன.


 எது செய்தாலும் மனைவியின் சௌகர்யத்தையும் கணக்கில் எடுக்கவேண்டும் என்று தோன்றுவதே வயதான பிறகுதான். அதற்கு முன் வரை எப்படியிருந்தாலும் சமாளித்துக்கொள்வாள் அவளுக்கெதற்கு ப்ரெஃபரன்ஸ் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் (சிலருக்கு) ஓடும்.


மனைவியை ஆண்கள் காதலிக்கத் துவங்குவதே ஐம்பது வயதிற்கு மேல்தான். மனைவியின் உடல் வனப்பு மறைந்து அன்பும் அக்கறையும் கண்ணில் படும் வயது அது.


கணவருக்கு வெல்லச்சீடை பிடிக்குமென்று கூட ஒன்றை இலையில் போடும்போதோ, எடுத்து வைத்துக் கொடுத்தாலோ, கிழங்களுக்கு இந்த வயசிலும் ரொமான்ஸ் பாரேன் என்று காதுபடப்‌ பேசாத இளையோர் அமையவேண்டும். இல்லையெனில் சுண்டிப் போவார்கள். 


தான் ஏதாவது கல்யாணத்தில் போய் சாப்பிட்டால், வீட்டிற்கு எதற்கோ அழைப்பதுபோல்  கால் செய்து உருப்படாமல் ஏதாவது பேசிவிட்டு,  சாப்பிட்டியா‌ என்று முடிக்கும் பெரியவர்களை எனக்குத் தெரியும்.


 எங்கேயாவது மனைவிக்குப் பிடித்த தின்பண்டங்களைப் பார்த்தால் வாங்கிக்கொண்டு வந்து அதை பகிரங்கமாகக் கொடுக்கமுடியாமல் திணறும் ஆண்கள் பலர்.

நேரடியாகக் கொடுக்க ஈகோ இடம் தராது. 


மற்றொரு விஷயம், சிறு வயதில் முகத்திற்கு நேராகப் பல விஷயங்கள் பேசியபோதும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ‌அதே பெண்ணில்லை அவள். பெண்களுக்கு ஆண்களை விட மனோ பலமும், குடும்ப விஷயத்தில் அனுபவமும் அதிகம். எனவே, இப்போது கன்னா பின்னாவென்று பேசினால் திருப்பிக் கேட்டுவிடுவாளோ என்று ஒரு தயக்கம். 


அப்பா அம்மா ரூம்தானே என்று பெற்ற மகனோ ‌மகளோ கதவைத் தட்டாமல் அவர்களது தனியறையில் நுழைவது அவர்களுக்கு சங்கடம் தரும்.


தனியறை இல்லாவிட்டாலும் கூட அவர்கள்  இருவரின் உரையாடலை கவனிப்பதையும், அதில் குறுக்கே நுழைந்து பதில் சொல்வதையும் பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை.


60 வயது வரை மனைவியை வீட்டில் விட்டுவிட்டு அலுலக வேலை என்று ஊர் ஊராகச் சுற்றிவிட்டு, வயதானபின் ஒருநாள் கூட மனைவியைப் பிரிய முடியாமல் தவிக்கும் பல பெரியவர்கள் உண்டு.


காமம், மற்றும் உடல் சார்ந்த விஷயங்களுக்காகத்தான் ப்ரைவசி என்றல்ல. அன்பையும் காதலையும் பரிமாறிக்கொள்ள  பெரியவர்களுக்கு ப்ரைவசி தேவைப்படுகிறது.


அதை மதிக்கும் இளைய தலைமுறை அமைந்தால் அது வரமாகும்.



Monday, December 13, 2021

Enninaivugalin e pathivu

 கவியரசு கண்ணதாசன் என்பவன் நுணுக்கமான வேலைப்பாடு தெரிந்தவன்.


நிர்வாணமாக இருந்த தமிழுக்கு விதவிதமான கவிதை ஆடையை அணிந்து அழகு பார்த்தவன்.


சிந்தனை என்று உ(ஒ)ளியால் தமிழை செதுக்கி சிற்பம் ஆக்கியவன்.


சங்கத்தமிழில் ரசித்து ரசித்துப் படிப்பவன் ருசித்து ருசித்து எழுதியவன்.


யாரும் அறியாத பெண்ணின் முழுமையான  மன ஆழத்தில் அடிவரை தொட்டவன்.


 அந்த அனுபவத்தை வரிகளில் அழகாக உரைத்தவன.


 இவ்வுலகத்தில் கவிஞர்கள் பலரும் உண்டு.


ஆனால் கவிஞரைப் போல் ஒருவரும்  இல்லை.

Enninaivugalin e pathivu

 கவிமொழி


கவியரசர்

கண்ணதாசனிடம்  ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் பணக்கார  நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஓர் காதல். 

நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், 

அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல நண்பரும் சம்மதித்தார். 


அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.


ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.


மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார்.


 ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற,...


 


கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.


அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்…


பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக - நான் 

பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக...


படித்ததில்

பிடித்தது

Enninaivugalin e pathivu

 கவிமொழி


கவியரசர்

கண்ணதாசனிடம்  ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் பணக்கார  நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஓர் காதல். 

நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், 

அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல நண்பரும் சம்மதித்தார். 


அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.


ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.


மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார்.


 ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற,...


 


கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.


அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்…


பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக - நான் 

பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக...


படித்ததில்

பிடித்தது

Enninaivugalin e pathivu

 நான் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்தபோது, அது எழுபத்தைந்து ஆகாதா என்று ஏங்கினேன்; ஆயிற்று.


ஆயிரம் வராதா என்று அமைதி இழந்து கேட்டது மனது; அதுவும் வந்தது.


அது லட்சம் வரை போயிற்று; அப்போதும் நிம்மதி இல்லை.


வந்த ஏதும் தங்கவில்லை.


‘செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான் என்று முடிவு கொண்டேன்.


பொருளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘வருவதும் வரும், போவது போகும்’ என்று சமநோக்குமுடிவு கொண்டேன், அந்த வகையில் நிம்மதி வந்தது.


ஆனால், லௌகீக வாழ்க்கையில் ஒரு நிம்மதி வரும்போது, ஒருதுன்பமும் கூட வருகிறதே. என்ன செய்ய?


பேதலித்த மனத்தைப் பார்த்து, ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று அழுதேன்.


‘இரண்டு மனம் வேண்டும் ‘ என்று இறைவனைக் கேட்டேன்.


உபதேசத்தில் இறங்கியிருக்கும் எனக்கே இன்னும் முழு நிம்மதி கிட்டவில்லை.


பகவத் கீதையின் தியானயோகம் என்னை செம்மைப்படுத்தி வருகிறது.


என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம். செத்த பிணத்தின் முன் இனி, சாகப்போகும் பிணங்கள் கதறி அழப்போகின்றன.


வீடு வரை உறவு


வீதி வரை மனைவி


காடுவரை பிள்ளை


கடைசி வரை யரோ?.


-ஆம்; கதை ஒருநாள் முடியப்போகிறது.


சிலர் அழுது முடிக்கப்போகிறார்கள்!


பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள்


கீதையில் கண்ணன் சொல்வது போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான், மனநிம்மதி சாத்தியமாகும்.


எனது வாழ்க்கையிலேயே இதற்கான அனுபவங்கள் உண்டு.


முதலில் நான் மனதாரக் காதலித்த பெண் எனக்குக் கிடைக்கவில்லை.


நான் கவலைப்பட்டேன்.


நிம்மதி இழுந்தேன்.


பிறகு திருமணம் பேசும்போது, நான் குறிப்பிட்ட பெண் எனக்குக் கிடைக்கவில்லை.


நான் மீண்டும் நம்பிக்கை இழந்தேன்.


‘விரும்பியது கிடைக்காததால், கிடைத்ததை விரும்புய என்ற பழமொழிபடி கிடைத்ததை விரும்பத் தொடங்கி, செயற்கையான நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.


கண்ணதாசன்

Enninaivugalin e pathivu

 கண்ணதாசனும்

ஆங்கில புலமையும்,,,


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர் திரு.வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர். மிகச் சிறந்த திறமைசாலி. தன்னுடைய சில வழக்குகள் விஷயமாக அவரை சந்திக்க செல்வார் கவியரசு கண்ணதாசன். வழக்கறிஞரின் மனைவி நன்கு படித்தவர். 


ஆங்கில அறிவு உள்ளவர். ஒரு முறை கவிஞர் வழக்கறிஞரைச் சந்திக்க சென்ற போது கதவு மூடியிருந்தது. யாரோ வெளியில் நிற்பதறிந்து


 "ஹூ இஸ் தட்" (Who is that)

 என்று ஆங்கிலத்தில் கேட்டார் வக்கீலின் மனைவி .


"ஆன் அவுட் ஸ்டாண்டிங் பொயட் இஸ் ஸ்டாண்டிங் அவுட் (An outstanding poet is Standing Out) 


என்று பதில் கொடுத்தார் கவிஞர் கண்ணதாசன். 


வெளியில் வந்த வக்கீல் மனைவி "பரவாயில்லையே, தமிழில் தான் கவிதை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். ஆங்கிலத்திலும் புலமை உள்ளதே" என்று வியந்தார். 


அப்போது அவர் தான் படித்த ஆங்கில கவிதையின் இரண்டு வரிகள் தன்னை மிகவும் கவர்ந்ததாக கவியரசரிடம் அதை கூறினார். 


அந்தக் கவிதையில், போரிலிருந்து திரும்பிய ராணு வீரன் போர்க்களத்தையே நினைத்து தூங்காமல் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தான். 


தன் கணவனை படுக்கக் சொல்லிவிட்டு இந்த வரிகளைக் கூறினாராம் ராணுவ வீரனின் மனைவி .


"ஸ்லீப் யுவர் ஐஸ்....ரெஸ்ட் யுவர்ஹார்ட்" 

(Sleep your eyes , Rest your heart)


என்பதே அந்த வரிகள்.கவிஞரின் மனதில் அந்த வரிகள் மிக ஆழமாகப் பதிந்தது. அந்த நேரத்தில் ஒரு படத்திற்கு பாடல் ஒன்று எழுத வேண்டி வந்தது.


அவரது மனதில் பதிந்த அந்த வரிகள் அன்றைய படத்தின் சூழலுக்கு தக்கவாறு இருந்ததால் அப்படியே பாடலாக வெளிப்பட்டன.


தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும

Enninaivugalin e pathivu

 நாம் - முதல் தலைமுறை

ததை + தாய் - இரண்டாம் 

தலைமுறை

பாட்டன் + பாட்டி - மூன்றாம் 

தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் 

தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் 

தலைமுறை

சோயோன் + சேயோள் - ஆறாம் 

தலைமுறை

பரன் + பரை - ஏழாம் ஏழாம் 

தலைமுறை

பரன் + பரை - பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 

வருடங்கள் என்று கொண்டால், ஏழு 

தலைமுறை - 480 வருடங்கள்.

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..

(கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள்) 

ஆக, பரம்பரை பரம்பரையாக என்று 

சொல்வதன் பொருள் ஈரேழு, 

பதினான்கு தலைமுறையாக என்று 

பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி 

உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் 

சிறப்பு!..

Enninaivugalin e pathivu

 நாம் - முதல் தலைமுறை

ததை + தாய் - இரண்டாம் 

தலைமுறை

பாட்டன் + பாட்டி - மூன்றாம் 

தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் 

தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் 

தலைமுறை

சோயோன் + சேயோள் - ஆறாம் 

தலைமுறை

பரன் + பரை - ஏழாம் ஏழாம் 

தலைமுறை

பரன் + பரை - பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 

வருடங்கள் என்று கொண்டால், ஏழு 

தலைமுறை - 480 வருடங்கள்.

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..

(கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள்) 

ஆக, பரம்பரை பரம்பரையாக என்று 

சொல்வதன் பொருள் ஈரேழு, 

பதினான்கு தலைமுறையாக என்று 

பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி 

உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் 

சிறப்பு!..

Enninaivugalin e pathivu

 *ஒழுக்கத்தை இதைவிட எளிமையாக கூற முடியுமா?*


அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், 


“செல்லம்!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”


பொண்ணு  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் “நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.


அப்பா சொன்னார், “இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”


மகள் சிரித்தாள். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.


“ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். 


ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

Enninaivugalin e pathivu

 ஆட்டுக்கல் தான் அது வெறுமனே

மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் 

காலத்தில் அதுதான் மழைமானி. 

வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் 

ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் 

மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள்

நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் 

அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற 

மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா 

என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு 

முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். 

இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு 

சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின்

ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை

‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குப்படி 

18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை

முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை

“பதினு” மழை பெய்திருக்கிறது எனத் 

தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்குத் 

தயாராவார்கள்.

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் 

தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. 

விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

“பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

“அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

“கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் 

கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு 

குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் 

இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் 

இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே

"மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். 

இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு 

நீர் இருந்தது அதில் ஒரு துளி கூடக் 

குறையவும் இல்லை கூடவும் இல்லை

என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். 

அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், 

நிலையானது, அளவு மாறாதது என்கிறார்