சூரியனின் சூடு பட்டு
பூமியில் வேர் விட்டு
உலகை அழகாக்கும் சோலை போல
காலங்களின் சூடு பட்டு
கடமைகளில் வேர் விட்டு
மனதை மகிழ்விக்கும் ஒவ்வொரு
மாதாந்திர கூட்டங்களும்
மறுப்பதற்கில்லை
நல்லெண்ணெய் சேர்த்தால்
இதயத்திற்கு நல்லது.
.நல்லெண்ணங்களை சேர்பதால்
இதயமே நல்லது என்ற
தெளிவை ஏற்படுத்துகிறார்கள் மறுப்பதற்கில்லை.....
செய்ய விரும்புவதை செய்வது
மட்டும் சுதந்திரமில்லை
செய்ய விரும்பாததை செய்யாமல்
இருப்பதுவும் சுதந்திரமே....
சமூக சூழல் எப்படி இருந்தாலும்
தரம் தாழாமல் சுதந்திரமாக
இவ்வமைப்பு நடத்தப் படுகிறது...
.மறுப்பதற்கில்லை
கடமை என்ற மூன்றெழுத்தில்
இம் மும்மூர்த்திகளின் மூச்சிருக்கிறது.
அதனால் வெற்றி மேல் வெற்றி
வந்து சேர்கிறது..ஆனால் கிடைத்த
வெற்றியின் பெருமை
உறுப்பினரையே சேரும் என
அவர்கள் கூறுவதில்
பெருந்தன்மை இருக்கிறது.
EGO..வை ..YOU GO...என துரத்திவிட்டவர்கள் .
..மறுப்பதற்கில்லை...
விட்டில் பூச்சியாக சேரும் உறுப்பினர்களையும்
நிகழ்ச்சிகளில் பங்கு பெற வைத்து
விமானமாக்கி விடுவார்கள்....
.மறுப்பதற்கில்லை... 1983 ஆம் ஆண்டு குறைந்த உறுப்பினருடன்
தொடங்கப்பட்டு இன்று 1800க்கும்
மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.
..இவர்களின் உழைப்பின் வியர்வையால்
வியர்வை வேர் வைக்கப் பட்டிருக்கிறது...
.மறுப்பதற்கில்லை
பெற்றோரையும் பெரியோரையும் மதிப்போம்..
.நமது எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு உதவுவோம்
என்று இவ்வாண்டு ஆக கொண்டு
34 வது ஆண்டு விழாவை எதிர் நோக்கி
விருட்ஷமாக வளர்ந்திருக்கிறது.
நம் பெருமைக்குரிய அமைப்பு..
.மறுப்பதற்கில்லை
இவ்வமைப்பு மேன் மேலும்
சீரோடும் சிறப்போடும் பெருமை பெற
உறுப்பினர்களின் சார்பில் வாழ்த்துகிறேன்...
. வே .முத்துலெட்சுமி