அரும்பெரும்
கலைகள் அனைத்தும் கற்று-பின்
வரும்
மணவாளன் வளமே வாழ்வென
தன்னைத்
தனதை தவிர்த்து மாறி
அன்னை
வடிவில் அன்பை உணர்ந்து
சேயாய்
சதியாய் தாயாய் வாழும்
ஓயா
இல்லற அலைகளின் வீச்சில்
எத்தனை
அயர்வு, எத்தனை மகிழ்வு
எத்தனை
பொறுப்பு, எத்தனை சிலிர்ப்பு
இதை
விடுத்து
சூதும்
வாதும் சூழ்ந்திடும் உலகில்
ஓதும்
சாத்தான் வேதம் என்னும்
நடைமுறை
உணர்ந்து நாலும் தெரிந்து
அடைகாப்பது
போல பொருளைப் பேணி
அலைந்து
திரிந்து அரும் பணியாற்றி
கலையை
ரசிக்க கணமும் இன்றி
தாயை
சதியை சேயை தேற்றி
வாயைப்
பன்முறை அழுத்தி மூடி
வேண்டாம்
சாமி ஆணாய்ப் பிறவி
மீண்டும்
பெண்ணாய்ப் பிறந்திட
அருள்
செய்..........