Tuesday, April 3, 2018

Enninaivugalin e pathivu..porselvi speech

வாழுகின்ற வார்த்தைகள்.
.                   *vs*
வீழுகின்ற வார்த்தைகள்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு,

"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..

"எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி

டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..

*சாகும் வரை, வாழும் வரை* என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் *சாகும் வரை* என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் *எதிர்மறை எண்ணம்* எழுகிறது. ஆனால் *வாழும் வரை* என்ற சொற்களில் ஆறுதல் தரும் *நேர்மறை எண்ணம்* ஏற்படுகிறது.

சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்று வாதாடலாம். ஆனால்....

சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...

அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாக பேசலாம்.

அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளை தவிர்க்கலாம்.

*Every word has its power choose them carefully.*

உடலுக்கு *#Insulin* எவ்வளவு முக்கியமோ,
மனதுக்கு *#இன்சொல்லும்* அவ்வளவு முக்கியம்.

மா.பொற்செல்வி பட்டிமன்ற பேச்சாளர்

*"மனம் கலங்காதிருக்க..."*

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம்கலங்கவில்லை..

❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக இருந்த போதிலும் *சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்கஷ்டப்படுத்திய போதும் *குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்வெட்டிய நிலையிலும் *சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில்தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்க வில்லை

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்க வில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*
ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏




Enninaivugalin epathivu....pattimandram notes

ஒரு வரி உண்மைகள்....

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!

*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!

*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!

*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!

மறுக்கமுடியாத சில  உண்மைகள் !!!

மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

👄👩🏼👖👠👜

தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;

தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!

😇🤡😇🤡

OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!

🍿🥛🍻🥃

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை !

😺😺😽👶

ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

😅😆🤠😆

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.

அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.

ஆணாதிக்கச் சமூகம் !

💃🏼👯‍♂🕺🏻👗

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?

💿📽📡📽

முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.

இப்போது மழை நாட்கள் மட்டுமே !

⛈☔💦☔🤷🏼‍♀🏃🏼‍♀👨‍👦🏃🏼‍♀

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம் !

💯🈁📶🔈

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் !

💥🖥⚡💥

யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள் !

🤰🏼🙎🏼👨‍👩‍👦‍👦🙎🏼

நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.

📞📲📱

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும் !

⛄😥⛄😥

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம் !!
"நீண்ட தொலைவில் இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாகத்திறந்து முன்பக்கத்திலேயே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வர சென்றுவிட்டாள் மனைவி.

"அந்தநேரம் அவளின் கணவன்
நல்ல பசியோடு மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"வெயிலில் வந்ததால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் காலில் தட்டிவிட விழுந்துவிடுகிறான். இரண்டு குடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது
அறிவு வேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது?
வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

தூக்கி வந்த குடத்தை இடுப்பிலிருந்து இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்று கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வரேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தைகள் பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்.

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரச்சினை எவ்வளவு பெரிய முடிவை எடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு
இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
வாருங்கள் பார்ப்போம்...

அவன் குடம்தடுக்கி விழுந்து,
தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது
அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுடம்  தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள் வந்தவுடன் மன்னிப்பு கேட்டுவிட்டு, நாமே போய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி,

நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன்.
நீ எவ்வளவுதூரத்தில்இருந்து
இந்ததண்ணீரைக்கொண்டுவருகிறாய்?
என்னை மன்னித்துவிடு.
கொடு, நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள்.
"ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர் போனா போகட்டுங்க.
நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு.
நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட.
நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!

கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை.
இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.

*புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை*நன்றி.

மா.பொற்செல்வி பட்டிமன்ற பேச்சாளர்

🕺🏻🤹🏼‍♂🕺🏻🤹🏼‍♂

"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!

💃🏼👫💃🏼👫

காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன் !

🙏🙏🙏🙏

மா.பொற்செல்வி பட்டிமன்ற பேச்சாளர்