யோகா
மனித உடலையும்
மனத்தையும்
இனைக்கும்
அன்பாக
இது கலை அல்ல
வாழ்வில் நிலை
ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத்தேடினாலும்... உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும்... உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகா பயிற்சிகள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிக சுலபமாய் கையாள வழி ஏற்படுத்தி கொடுக்கும்.
அத்தகைய யோகாவை கொரானா காலத்திலும் நாங்கள் பயன் அடைய வழி வகை செய்த எங்கள் குரு திரு.அறிவுடை நம்பி சார் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.
கடந்த கொரானா காலத்திலும்,விடாது முயற்சி செய்து ,இருநூறு நாட்கள் யோகா வகுப்பை நடத்திய நமது குருவுக்கும்,சத்ய வாணி மேடம்,சுந்தர் சார்,வாணி மேடம்,கௌதம் சார்,திலகா மேடம் அனைவருக்கும்,முக்கியமாக கூகுள் மூலம் வகுப்பை நடத்த வழி காட்டிய சந்திரசேகரன் சார் அவர்களுக்கும் யோகா குடும்பத்தின் சார்பாக நனி நன்றிகள்.
சவால் என்ற வார்த்தையிலேயே வாசல் இருக்கிறது என நன்கு உணர்ந்த ,உணர்வித்த,அனைத்து குருக்களுக்கும் வணக்கங்கள்..
இவ்வளவு நாள் யோகா பண்ணி விட்டேன்.இன்னும் தொடர்ந்து பண்ணணுமா என ஆசிரியரிடம் கேட்டான் மாணவன்.அதற்கு ஆசிரியர், விமானம் கஷ்டப் பட்டு டேக் ஆப் ஆகி பறந்து கொண்டு இருக்கு.சிரமம் இல்லாமல் பறப்பதால் இன்ஜினை ஆப் செய்யலாமா எனக் கேட்டார்.அது போல நாமும் வாழ்நாள் முழுவதும் யோகாவையும் ஒரு அங்கமாக,மதிக்க வேண்டும்.
யோகா செய்யாத முதுமை, வியாதிகளின் மேய்ச்சல் நிலம்.காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிய ஓவியம் .
யோகா நாம்
ஓய்ந்து விடாமல்,
காய்ந்து விடாமல்,
தேய்ந்து விடாமல்,
சாய்ந்து விடாமல்,
மாய்ந்து விடாமல்,
பார்த்துக் கொள்கிறது.
எனவே,தினமும் நம் புலவர் கூறுவது போல் யோகா செய்வோம்,உடல் நலம் பெறுவோம்.வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்..
யோகா குடும்பத்தினர் சார்பாக
வே.முத்துலெட்சுமி.