Saturday, November 19, 2011

PRIVACY-கவலையைப் போக்க சில வழிகள்;


கவலையைப் போக்க சில வழிகள்;
1.இன்றும், நாளையும்
2.நடப்பது நடக்கட்டும்
3.போலிக் கவலைகள்
4.விரோதிப்பது விவேகிகளின் செயலல்ல
5. அன்றே மறப்பது நன்று
6.நிஜமும் பிரமையும்
7.போதும் என்ற மனம்
8.காரணம் இல்லாத மனகிலேசம்
9.பழி வாங்கும் உணர்ச்சியும் கோபமும்
10.இனியவை செய்யுங்கள்
11.மனம் போல் வாழ்வு.
12.சுய விமர்சனம் தேவை
13.களைப்படையாமல் இருக்கச் சில வழிகள்
14.தூக்கமின்மை ஒரு வியாதியா?
15.பணம் வந்தால் கவலை போய் விடுமா?
16.செய்யும் தொழிலை நேசியுங்கள்
17.பிரார்த்தனையும், வழிபாடும்.  
வரவிருக்கும் ஃப்ளாக்குகளில் ஒவ்வொரு தலைப்பையும் பற்றி விரிவாகக் கூறுகிறேன்.

PRIVACY-கவலையைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்;


கவலைப்படும் போது நம்மை அறியாமல் ந்ம் மனத்தில் ஒரு திகில் தோன்றி விடுகிறது,இந்த திகில் தான் நோய்கள் ஏற்படவும், ஏற்கனவே உள்ள நோய்கள் கடுமையாகவும் காரணம்.

வாழ்க்கையின் முதல் விரோதி கவலை எந்த காரணம் கொண்டும் கவலையை அண்ட விடாதீர்கள்.
சரி எப்படி அண்ட விடாமல் இருப்பது. தொடர்ந்து நான் எழுதும் ஃப்ளாக் கைப் படியுங்கள்.

PRIVACY-கவலையைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்;


நரம்புத்தளர்ச்சி
வயிற்றுப்புண்(அல்சர்)
இரத்த அழுத்தம்
அஜீரணம்
நெஞ்சு எரிச்சல்
தூக்கமின்மை
மயக்கம்
தலைவலி
வாதங்கள்
மேற்கூறிய நோய்களால் அவதிப்படுவோரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், அவைகளுள் நிறையபேர், கவலைக்கு உட்பட்டவராகவே இருப்பார்கள்.
கவலையினால் இரத்த அழுத்தம் அதிகமாகி இரத்தக்கொதிப்பு,இதய நோய் போன்றவை ஏற்படுகின்றன.
கவலை மிகுதியாகும் போது தேவைக்கு அதிகமான ஜீரண நீர் சுரந்து குடலிலும் இரப்பையிலும் புண்களை ஏற்படுத்துகிறது.
கவலையினால் தூக்கமின்மை ஏற்படுகிறது. அதுவே தலைசுற்றல், வாந்திக்கு காரணமாகிறது.

மனதும் உடலும் ஒன்றே என்பதை அறிந்து, நோயாளிகளின், உடலை மட்டுமல்ல, மனத்தையும்  சொஸ்தப்படுத்த வேண்டும்.
இதையே வள்ளுவர்---
நோய்நாடி  நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்றார். அதாவது,
முதலில் நோயை இன்னது என்று அறிய வேண்டும். பின் நோயின் காரணத்தை அறிந்து மருத்துவம் பார்க்க வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருள்கள் குடல் நோயை ஏற்படுத்துவதில்லை.உங்களைச்சாப்பிடும் கவலையே குடல்புண் ஏற்படக்காரணமாகிறது.

PRIVACY-கவலையைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்;


கவலையைப் பற்றிய  சில அடிப்படை உண்மைகள்;
 நவீன வாழ்க்கையில் வேகம்,பரபரப்பு,கவலை, உணர்ச்சி மோதல்,பிரச்சினைகள், இன்னும் எத்தனை.. எத்தனையோ;

எண்ணிய படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.செயல் படும் எந்த வாழ்க்கையிலும் பிரச்சினைகள் தோன்றவே செய்யும்..

பண்டித நேரு அவர்கள் “பிரச்சினைகள் தோன்றுவது உயிர்துடிப்பின் அறிகுறிஎன்றார்.பிரச்சனைகளைச் சந்தித்து வெற்றி கொள்வதற்குப் பதிலாக பெரும்பாலோர் கவலையில் மூழ்கிப் போகிறார்கள்.

கவலை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக அதுவே பெரும் பிரச்சினையாகி, நம் வாழ்க்கை இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.மேலும் நோயாளியாக்கி  செயல் குன்றச் செய்துவிடுகிறது.
 

PRIVACY-கவலை,கவலை,கவலை.


ஏட்டுச் சுரைக்காய்- கறிக்கு உதவாது.----ஏட்டில் எழுதப் 
பட்ட சுரைக்காயைப் பார்த்து ரசிப்பதோடு நின்று விடாமல்
அதைப் பயிராக்கி. காய்த்த பின் பறித்து சமைக்கும் போது
தான் கறிக்கு உதவும்.எனவே,தொடர்ந்து நான் எழுத
இருக்கும் கவலை என்ற ஃப்ளாக்கில் சொல்லப் பட்ட
விஷயங்களை ரசித்து படித்து, படித்தவற்றை சிந்தித்து சீர்
தூக்கிப் பார்த்து,நடைமுறைப் படுத்தினால் பயன் நிச்சயம்
கிடைக்கும்.

Friday, November 18, 2011

PRIVACY-சாப்ட்வேர் வல்லுனர்களே

இந்தியனின் அறிவு மதிப்பை
இவ்வுலகிற்கு அறிந்திடச் செய்தது
இனியவர்களே..நீங்களன்றோ!!

வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகமின்றி
வரி கட்டும் வலியோர் நீங்களன்றோ...

எட்டு மணி நேர வேலை என்பது
எட்டாக் கனியே...இருப்பினும்
எளிதாய் (டேக் இட் ஈஸி) எடுப்பவர் நீங்களன்றோ...

மதம்,சாதி போன்ற கட்டுப்பாட்டை
மறக்கடிக்க செய்தது நீங்களன்றோ..

அதிக ஊதியம் என்றாலும்,
அசராத உழைப்பாளி நீங்களன்றோ..


வெயிலின் கொடுமை அறிந்திருக்க மாட்டீர்கள்,இருப்பினும்
வெளித் தெரியா மனஅழுத்தத்தின் கொடுமையறிந்தவர் நீங்களன்றோ..

கண்ணிமைக்காமல் அதிக நேரம்
கணினியில் வேலை செய்பவர் நீங்களன்றோ..


 அந் நாளில் உழைப்புக்குப்பின் ஒய்வு எடுப்பது அவசியம்
இந்நாளில் உழைப்பின் இடையே ஒய்வு எடுப்பது அவசியம்.
எனவே,சாதிக்கப் பிறந்தவர்களே. உழைப்பினிடையே ஒய்வு எடுங்கள். 

சாப்ட்வேர் வல்லுனர்களே....சாப்பாட்டில் கவனம் வையுங்கள்
சாதிக்க  உடம்புடன்  ஒத்துழையுங்கள்..

கடைசியில் ஒன்று
 சாப்ட்வேர் வல்லுனர்களே
உங்களுக்காக,உங்கள் குடும்பத்துக்காக
நேரம் ஒதுக்குங்கள்;
தேடிய பணத்தை தேர்வு செய்து செலவிடுங்கள், சேமியுங்கள்


வாழ்க  வள்முடன்

Thursday, November 17, 2011

PRIVACY-Children’s page






ஓ நீ பாலமுருகன் 
இல்லையா? பால் முருகனா? பால்
விளையாட கிளம்பி விட்டாயா.....
ஐயோ,இந்த அம்மா ஆபீஸ் போற அவசரத்தில் பால், தயிர், தோசை மாவு, போன்றவற்றை வைப்பது போல என்னையும் ஃப்ரிஜ் யில் வைத்து விட்டார்களே!!!!!!!!!!!!!!!!!!!

தம்பி , இது   புல்லாங்க்குழல். இதில்  இருந்து  வரும்  ஓசையே  நாதம்  எனப்படும் .இது போல்  நாதஸ்வரம் , மத்தளம் ,போன்ற  கருவியிலிருந்தும், நாதம்  வெளிப்படும் .
நமது வாத்தியங்கள்  என்னென்ன  தெரியுமா அன்பு, ஆசை, கனவு, லச்சியம் , திறமை , துடிப்பு , மகிழ்ச்சி, ஆகியவை.
இவற்றை நாம்  சரியான நேரத்தில் , சரியான படி வாசித்து  வாழ்க்கை என்ற   ஓர் " இசை  கச்சேரி'ஐ" symphony "   நிர்ணயிப்போம் .