கவலை என்னை வாட்டுகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றான் சிஷ்யன்.
குரு ஒரு குடுவை நீரில் ஒரு கை உப்பை போட்டு கலக்கி குடி என்றார்.அவனால் குடிக்க இயல வில்லை. குமட்டுகிறது..என்றான்.
குரு ஒரு கை உப்பை அருகிலுள்ள குளத்தில் போட்டார்,பின் இந்த நீரை குடி என்றார்.குடித்தான்.
குரு: உப்பு கரிக்கிறதா?
சிஷ்யன்:.இல்லை, குருவே.இவ்வளவு பெரிய குளத்தில் ஒரு கை உப்பு எப்படி தெரியும்?
.
.
குரு:சரியாகச் சொன்னாய்.
உன் மனத்தையும் குளத்தைப்போல் விசாலமாக வைத்துக் கொள். கவலைகள் கரைந்து விடும்.குடுவையைப் போல் வைத்திருந்தால் மனம் வாடத்தான்(கரிக்கத்தான்) செய்யும்.
No comments:
Post a Comment