இன்று குழந்தைகள் தினம். நாம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுப்பதுடன் நேரத்தின் அருமை,பணத்தின் அருமை, உறவுகளின் அருமை ஆகியவற்றையும் கற்றுக் கொடுப்போம். 14—11—2011
பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகளை யாருடனாவது ஒப்பிட்டு குறைத்து மதிப்பிட்டே வருகிறார்கள்.ஏன்????????????
தாழ்வாக உணர்ந்தால் தான் ஒரு உந்து சக்தி பிறந்து அது வெற்றியை நோக்கி குழந்தைகளை விரட்டிச் செல்லும் என நினைத்தனர்.
ஒரு கட்ட்த்தில் அப்படி ஒப்பிடுவதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் அப்படி மற்றவர்களுடன் ஒப்பிடும் பழக்கத்தை குழந்தைகள் விடமுடியாதபடி செய்து விடுகின்றனர்.
மற்றவரை உயர்வாக நினைத்து இல்லாத சிறகுகளை கட்டிக் கொண்டு படபடக்கிறீர்கள்.அவரை விட உயர்ந்த இடத்தை யடைய போராடி வென்றால் ,வேறு ஒருவர் இன்னும் முன்னே நின்று பழிப்பு காட்டுவார்
.எனவே,தயவு செய்து குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் பழக்கத்தை தவிப்போம்.
No comments:
Post a Comment