Monday, November 14, 2011

PRIVACY-story


தபாலில் வந்த மணமகளின் போட்டோக்களும், ஜாதக குறிப்புகளும்,மேஜையின் மேல் கிடந்த்து.கையில் தேனீர் கோப்பையுடன் புகைப்படங்களை ஆராய தொடக்கினாள்  விஜி.

புகைப்படங்களில் இருப்பதில் யார் என் மருமகள்? இல்லை இல்லை மறுமகள் என யோசித்தபடி பார்வையிடத் தொடங்கினாள்.

மகன் மோகன் அம்மா உன் விருப்பம் போல் தேர்வு செய் என முழு சுதந்திரம் கொடுத்தவுடன் இன்னும் பொறுப்பாக,கவனமுடன் மறுமகளை தேட தொடங்கினாள். 
விஜியைப் பொறுத்தவரை அவளும் இந்த வீட்டுப் பெண்ணே..
பக்கத்து வீட்டு பங்கஜமும், அவள் மருமகளும் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள். அது போலவே, இருக்கணும் என நினைப்பாள்.
ஒருவழியாக சுமதியை மோகனுக்கு திருமணம் செய்து வைத்தாள்.
சுமதி, மாமியார் எதைச் சொன்னாலும் அதற்கு தலைகீழாகத்தான் சொல்வாள்; தலைகீழாகத் தான் செய்வாள்.
 விஜி தன் மகளிடம்,. இந்த காலப் பெண்களுக்கு ஆரஞ்சு சுளைகள் புருஷன்மார்கள்னா, ஆரஞ்சுதோல் மாமியார்மார்கள். பழம் வாயில் போகும், தோல் குப்பைக்கு போகும்,அன்பை புரிந்து கொள்ள தெரியவில்லையே.....என புலம்பத் தொடங்கினாள்.
 மகளும் அம்மாவை சமாதானப்படுத்த,அம்மா உன் மகளும் இந்த காலப் பெண் தானே? நானும் என் மாமியாரை,மாமியாராகத் தானே முதலில் நினைத்தேன், அவர்கள் பாசத்தை இப்போது தானே புரிந்து அம்மாவாக இல்லை அதற்கு இணையாக நினைக்க தொடங்கியிருக்கிறேன்,
 மேலும்,சுமதியை மருமகளாகவே நினை.மருமகள்,மறுமகள் ஆகக் கூடாது.ஏன் தெரியுமா? உன் மகனுக்கு தங்கைமுறையாகி விடும்,நான் தான் ஒரு மகள் இருக்கிறேனே!! உன் புகழ் பாட,உன் மேல் அன்பைக்கொட்ட.. இன்னொரு மகள் எதுக்கு உனக்கு.
பங்கஜம் ஆண்டி வீட்டில் அவர்கள் மருமகள் முன்னரே தெரிந்த குடும்பம். அதனால் சீக்கீரம் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டனர்.சுமதியும் ஒரு நாள் புரிந்துகொள்வாள் அம்மா,
இன்னொரு முக்கியமான விஷயம் எப்போதும் உறவுகளை கற்பனைகளோடு, அணுகாதீங்க;யதார்த்தமாக அணுகுங்க..சரியா என்று ஒரு பெரிய லெச்சரே கொடுத்தாள்.
தன் மகளா இவ்வளவு தெளிவாக பேசுவது..எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டாளே..என பெருமித்த்துடன், மறுமகளை இல்லை இல்லை.. மருமகளைப் பார்க்க புறப்பட்டாள்.

No comments:

Post a Comment