Saturday, November 19, 2011

PRIVACY-கவலையைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்;


நரம்புத்தளர்ச்சி
வயிற்றுப்புண்(அல்சர்)
இரத்த அழுத்தம்
அஜீரணம்
நெஞ்சு எரிச்சல்
தூக்கமின்மை
மயக்கம்
தலைவலி
வாதங்கள்
மேற்கூறிய நோய்களால் அவதிப்படுவோரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், அவைகளுள் நிறையபேர், கவலைக்கு உட்பட்டவராகவே இருப்பார்கள்.
கவலையினால் இரத்த அழுத்தம் அதிகமாகி இரத்தக்கொதிப்பு,இதய நோய் போன்றவை ஏற்படுகின்றன.
கவலை மிகுதியாகும் போது தேவைக்கு அதிகமான ஜீரண நீர் சுரந்து குடலிலும் இரப்பையிலும் புண்களை ஏற்படுத்துகிறது.
கவலையினால் தூக்கமின்மை ஏற்படுகிறது. அதுவே தலைசுற்றல், வாந்திக்கு காரணமாகிறது.

மனதும் உடலும் ஒன்றே என்பதை அறிந்து, நோயாளிகளின், உடலை மட்டுமல்ல, மனத்தையும்  சொஸ்தப்படுத்த வேண்டும்.
இதையே வள்ளுவர்---
நோய்நாடி  நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்றார். அதாவது,
முதலில் நோயை இன்னது என்று அறிய வேண்டும். பின் நோயின் காரணத்தை அறிந்து மருத்துவம் பார்க்க வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருள்கள் குடல் நோயை ஏற்படுத்துவதில்லை.உங்களைச்சாப்பிடும் கவலையே குடல்புண் ஏற்படக்காரணமாகிறது.

No comments:

Post a Comment