Sunday, November 13, 2011

PRIVACY-டென்ஷன்


ஒரு எலாஸ்டிக் பட்டையை இரு புறமும் இழுத்துப் பிடித்தால் அந்த டென்ஷன் தாங்காமல் இரு முனைகளும் ஒன்றை ஒன்று எட்டிவிட வேண்டும் என துடிக்கும். கையை எடுத்தவுடன் முனைகள் ஒன்றுடன ஒன்று மோதும். அப்புறம்??????????
இரு முனைகளும் செயலற்று கிடக்கும்.
இப்படி வெளிசக்தியால் உந்தப்பட்டு, இலக்கில் போய் விழுவதால் என்ன பயன்?
இழுக்கப்பட்ட எலாஸ்டிக் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்? ஒரு கட்டத்தில் அதன் தன்மையை இழக்கும்.பிறகு, லேசாக இழுத்ததுமே பொட்டென்று அறுந்து விடும்.
உறுதியில்லாத சிலர் இப்படித்தான் டென்ஷன் தாங்காமல் தங்கள் இலக்கை எட்டுவதற்கு பதிலாக இதயத்தைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் போய் விழுகிறார்கள்.  

No comments:

Post a Comment