கவலையைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்;
எண்ணிய படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.செயல் படும் எந்த வாழ்க்கையிலும் பிரச்சினைகள் தோன்றவே செய்யும்..
பண்டித நேரு அவர்கள் “பிரச்சினைகள் தோன்றுவது உயிர்துடிப்பின் அறிகுறி” என்றார்.பிரச்சனைகளைச் சந்தித்து வெற்றி கொள்வதற்குப் பதிலாக பெரும்பாலோர் கவலையில் மூழ்கிப் போகிறார்கள்.
கவலை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக அதுவே பெரும் பிரச்சினையாகி, நம் வாழ்க்கை இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.மேலும் நோயாளியாக்கி செயல் குன்றச் செய்துவிடுகிறது.
No comments:
Post a Comment