Friday, November 18, 2011

PRIVACY-சாப்ட்வேர் வல்லுனர்களே

இந்தியனின் அறிவு மதிப்பை
இவ்வுலகிற்கு அறிந்திடச் செய்தது
இனியவர்களே..நீங்களன்றோ!!

வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகமின்றி
வரி கட்டும் வலியோர் நீங்களன்றோ...

எட்டு மணி நேர வேலை என்பது
எட்டாக் கனியே...இருப்பினும்
எளிதாய் (டேக் இட் ஈஸி) எடுப்பவர் நீங்களன்றோ...

மதம்,சாதி போன்ற கட்டுப்பாட்டை
மறக்கடிக்க செய்தது நீங்களன்றோ..

அதிக ஊதியம் என்றாலும்,
அசராத உழைப்பாளி நீங்களன்றோ..


வெயிலின் கொடுமை அறிந்திருக்க மாட்டீர்கள்,இருப்பினும்
வெளித் தெரியா மனஅழுத்தத்தின் கொடுமையறிந்தவர் நீங்களன்றோ..

கண்ணிமைக்காமல் அதிக நேரம்
கணினியில் வேலை செய்பவர் நீங்களன்றோ..


 அந் நாளில் உழைப்புக்குப்பின் ஒய்வு எடுப்பது அவசியம்
இந்நாளில் உழைப்பின் இடையே ஒய்வு எடுப்பது அவசியம்.
எனவே,சாதிக்கப் பிறந்தவர்களே. உழைப்பினிடையே ஒய்வு எடுங்கள். 

சாப்ட்வேர் வல்லுனர்களே....சாப்பாட்டில் கவனம் வையுங்கள்
சாதிக்க  உடம்புடன்  ஒத்துழையுங்கள்..

கடைசியில் ஒன்று
 சாப்ட்வேர் வல்லுனர்களே
உங்களுக்காக,உங்கள் குடும்பத்துக்காக
நேரம் ஒதுக்குங்கள்;
தேடிய பணத்தை தேர்வு செய்து செலவிடுங்கள், சேமியுங்கள்


வாழ்க  வள்முடன்

No comments:

Post a Comment