Thursday, March 15, 2012

en ninaivugalin e-pathivu -jokes-march

"இனி ஒரு விதி செய்வோம்னு தலைவர் முழங்கறாரே... எதுக்காம்?" "எல்லா விதிமீறல்களையும் செஞ்சுட்டாராம்....
புதுசா செய்யறதுக்காம்!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மரம் ஏறத் தெரியும்னு சொன்னாரேன்னு, என் கணவரை தென்னை மரம் ஏறச் சொன்னது தப்பாப் போச்சு!" "ஏன்....
கீழே விழுந்துட்டாரா?" "இல்லை.... இறங்கத் தெரியாதுன்னு மரத்து மேலயே உட்கார்ந்திருக்கார்!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"போகாதே... போகாதேன்னு நவக்கிரக சன்னதியில நின்னு தொண்டர்கள் எதுக்கு கோஷம் போடறாங்க?"
"தலைவரோட ராசிக்கு சனி எட்டுல போறாராம்... அதை நிறுத்தறதுக்குத்தான் போராட்டம் நடத்தறாங்க!"

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"சாராயம் காய்ச்சின புத்தி தலைவரை விட்டுப் போக மாட்டேங்குது!" "ஏன், என்னாச்சு?"
" 'ஊழல்'னு சொல்றதுக்குப் பதிலா 'ஊறல்... ஊறல்'னே சொல்றாரே!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"என்னது... அவரு மூணு சுயசரிதை எழுதியிருக்காரா..?" "ஆமாம்... அவருக்கு 'ஸ்பிலிட் பர்சனாலிட்டி' நோய் இருக்கே..!"

en ninaivugalin e-pathivu -march -2012-greetings

en ninaivugalin e-pathivu animation

en ninaivugalin e-pathivu --joke -march

நீதிபதி: ஏம்பா. இவ்வளவு பெரிய திருட்ட நீ மட்டும் தனியாவா செஞ்ச?
குற்றவாளி: ஆமா ஐயா. இப்ப காலம் கெட்டுக் கிடக்குது. யாரையும் நம்ப முடியல...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி இந்த லெட்டரை உங்க அக்காகிட்ட கொடு" "அதுக்கு வேற ஆளை பாரு"
"ஏன்டா, உங்க அக்கா நல்லாத்தானே இருக்கா!"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"எந்த ஐட்டம் கேட்டாலும் இல்லைன்னு சொல்றே, அப்புறம் என்ன எழவுக்கு மெனுகார்டை கொடுத்தே?"
"ஒவ்வொரு ஐட்டத்தோட பேரையும் சொல்லி, இல்லைன்னு சொன்னா எனக்கு வாய் வலிக்குமே சார்."

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"
"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும்,
அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்! கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..
மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...
மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அய்யா, அப்ப எல்லா மனைவிமார்களும் இப்படிதான் போல!

Tuesday, March 13, 2012

en ninaivugalin e-pathivu Team Hot Wheels - The Yellow Driver's World Record Jump

en ninaivugalin e-pathivu -jokes march-2012

"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"
"நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."

=============================================================================================

காதலி: நம்ம காதல் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு....
காதலன்: அய்யய்யோ.. அப்புறம் என்ன ஆச்சு..?
காதலி: பையன் வீட்டு வேலையெல்லாம் நம்ம அப்பா மாதிரியே நல்லா செய்வாரும்மான்னு
சொல்லி சமாளிச்சிட்டேன்....

=============================================================================================

"இந்த ஹோட்டல் காஸ்ட்லி ஹோட்டல்னு எப்பிடி சொல்றே?"
"காசில்லாமல் ஒரு தோசை சாப்பிட்டால் பத்தி கிலோ அரிசி மாவாட்டி தரணுமாம்."

=============================================================================================

"எங்க ஊரு போலீஸ், திருட்டு போன மறுநாளே திருடனை பிடிச்சுடுவாங்க..."
"இதென்ன பிரமாதம், எங்க ஊர் போலீஸூக்கு திருட்டு போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்"

=============================================================================================

ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது.
சரி, அப்ப நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..

சரி!!! இது எப்படி இருக்கு!!!!

"விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!" "அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!"

========================================================================================================

"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"

========================================================================================================

"உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!" "அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"

========================================================================================================

"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்." "யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!"

=======================================================================================================

"நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு" "எப்படி சொல்றே?" "விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான் . இது என்ன காலம்?
மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...!

லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை..
கீதா: என்ன வியாபாரம்? லதா: சேமியா வியாபாரம்.

"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா?
"ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."

நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?
நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!

"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு." "எப்படி சொல்றீங்க?"
"வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."

மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்...
சுமதி: ஏன்?.. மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது..

"அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?" "அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு."

"ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?" "நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே!"

வந்தவர்: என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்.
டாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க?
வந்தவர்: பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல...

"நான் நீச்சல் கத்துக்கேறன்.." "எங்கே...?" "தண்ணியிலதான்...!"

"பூக்காரி பொண்ண கட்டினது தப்பா போச்சு.." "ஏன்?" "பின்ன.. தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா..."

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேனேஜர்: டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்? வேலைக்கு வந்தவர்: ஒன்று.. மேனேஜர்: ஒன்றா.. எப்படி? வேலைக்கு வந்தவர்: நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தோழி: இரவில் உன் குழந்தை அழுதால் யார் எழுந்திருப்பார்கள்! தாய்: கட்டிடத்திலுள்ள அனைவருமேதான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மகனிடம் தந்தை, யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?" "சரி, டா டி"

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?
மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க..

en ninaivugalin e-pathivu -jokes march-2012

en ninaivugalin e-pathivu animation