Saturday, August 18, 2012
en ninaivugalin e -pathivu --vivekanandar
விசுவநாதர் – புவனேஸ்வரி தம்பதிக்கு 1863 ஜனவரி 12 அன்று பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாதர்.
சிறு வயதிலிருந்தே எது பற்றியும் ஆய்ந்து அறிகின்ற போக்கு நரேந்திர நாதருக்கு இருந்தது. ராமகிருஷ்ணரின் சீடராகச் சேர்ந்தார் நரேந்திரர்.
மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக நரேந்தர் திகழ்ந்தார். அதனால் நரேந்திர நாதருக்கு ‘விவேகானந்தர்’ என்று ராமகிருஷ்ணர் பெயர் சூட்டினார். இந்தப் பெயரே நிலை பெற்றுவிட்டது.
1885 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணர் மறைந்ததும், விவேகானந்தர் யாத்திரையை மேற்கொண்டார். காசி, லக்னோ, ஆக்ரா, பிருந்தாவனம், ஹத்ராஸ், ரிஷிகேஷ், பிரானாகோர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
மற்றொரு முறை விவேகானந்தர் யாத்திரை புறப்பட்ட போது ராமேஸ்வரத்திற்கு வந்தார்.
இந்த யாத்திரைதான் விவேகானந்தரின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கும், உலக மேதைகள் இந்திய தேசத்தின் வலிமையைப் புரிந்து கொள்வதற்கும், இந்து மத்த்தின் மேன்மையை உலக மதவாதிகள் தெரிந்து கொள்வதற்கும் காரணமாயின.
அப்போது இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.
அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார்.
விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது.
நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.
விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது.
அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார்.
முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார்.
அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.
உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.
இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும்.
பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள்.
அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.
இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார்.
அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர்.
இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.
செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது.
அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர்.
அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது.
பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர்.
இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ‘சகோதர சகோதரிகளே!’ என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார்.
ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார்.
அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது;
அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார்
மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது.
அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள்.
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது,
“அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன;
வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன.
அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார்.
விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம்,
அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது…. அவற்றில் அந்தப் பெண்ணும் இருந்தாள்.. அந்தப் பெண் யார்?
மெட்காப் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசியதைக் கேட்டு, அவரைத் தனிமையில் சந்திக்க முயன்றாள். அது முடியாமல் போயிற்று!
சிகாகோவில் விவேகானந்தர் நான்கு நாட்கள் முழங்கிய போதும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு விவேகானந்தரைத் தனிமையில் சந்தித்து விட வேண்டும் என்று விரும்பினாள்; அப்போதும் அதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை!
அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர்.
அத்தனை இடங்களுக்கும் அந்தப் பெண் வந்தாள்; விவேகானந்தரின் முழக்கத்தைக் கேட்டாள்;
அப்போதும் அவளுக்கு விவேகானந்தரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.
‘செயின்ட் லாரன்ஸ்’ என்ற நகரில் உள்ள தீவுப் பூங்காவில் விவேகானந்தர் ஐம்பது நாட்கள் ஓய்வெடுத்தார் அப்போதும அந்தப் பெண் அந்தத் தீவுப் பூங்காவிற்கு ஒவ்வொரு நாளும் வந்தாள்
. இருப்பினும் விவேகானந்தரை அவளால் தனிமையில் சந்திக்க இயலவில்லை.
விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.
அந்தப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி விவேகானந்தர் தங்கியிருக்கும் இடத்திற்குச்சென்று தனிமையில் அவரைச்சந்திக்க அந்தப் பெண் முயன்றாள்.
இருப்பினும் அவளுடைய முயற்சி பயன் தரவில்லை!
அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் பாரீசுக்கு புறப்பட்டார். அமெரிக்க விமானத்தளத்தில் வைத்து ந்தப் பெண் விவேகானந்தரை மடக்கி விட்டாள்!
“தங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்”
என்றாள்.
கூட்டத்திலிருந்து விலகிய விவேகானந்தர், “சொல்லு! தாயே! என்றார்.அந்தப் பெண்ணுக்கோ இருபது வயது இருக்கும்…அப்போது விவேகானந்தருக்கு முப்பது வயது…அந்தப்பெண்ணோ நவ நாகரீக மங்கை…விவேகானந்தரோ முற்றும் துறந்த முனிவர்…
எதற்காக விவேகானந்தரை விரட்டி விரட்டி அந்தப் பெண் பின் தொடர்கிறாள்?
மீண்டும், “சொல்லு தாயே!” என்றார் விவேகானந்தர்.
“நான் மெட்காப் நகரில் நடந்த மகளிர் மாநாட்டில் இருந்து உங்களைக் கவனித்து வருகிறேன்.. தனிமையில் சந்தித்துப் பேச பலமுறை மயன்றும் முடியாமல் போயிற்று.. இனியும் காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டேன்.
அமெரிக்க இளைஞர் பலர் என் அழகில் மயங்கி, என்னை அன்றாடம் சுற்றி வருகின்றனர. ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச்சுற்றி வருகிறேன்..” என்று தயங்கினாள்.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே” என்றார் விவேகானந்தர்.
“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்கு குழந்தை பிறக்கும்..
அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேசுவதற்கு அலைந்து கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண்!
“தாயே! எனக்கு முப்பது வயது! உனக்கோ சுமார் இருபது வயது இருக்கலாம்.
நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்து, இருபது வயதைத் தொடுகின்றபோதுதான் அந்தக் குழந்தை அறிவு மிக்கதா? இல்லையா? என்பது தெரியும்.
அதற்குப் பதிலாக நீ என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே!” என்றார் விவேகானந்தர்.
இந்தப் பதிலைக் கேட்டு அந்தப் பெண் விக்கித்துவிட்டாள்.ஆம்!
காணுகின்ற பெண்களை எல்லாம் தாயாக்க் கருதியவர் விவேகானந்தர் என்பது அப்போதுதான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது!
1893-ல் விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இப்போதும் நினைவுபடுத்த வேண்டிய நிலையில்தான் உலகமும், இந்தியாவும், தமிழகமும் இருக்கிறது.
சிகாகோவிலிருந்து உலகில் பல நாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1897 ஜனவரியில் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லுக்கு வந்தார்.
அவர் வருவதை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குந்தக்கல் வந்து காத்திருந்தார்.
கப்பலில் வந்து இறங்கிய விவேகானந்தர் தம் பாதங்களை முதன்முதலில் தம் தலையில் வைத்து விட்டுத்தான் மண் மீது பட வேண்டும் என்றார் மன்னர்.
ஆனால் மனித நேயம் கொண்ட விவேகானந்தர் அதற்கு இணங்கவில்லை.
உலக முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்து மதத்தின் மேம்னையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படுகிறது.
சிகாகோவில் பேசிவிட்டு விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்தில் வந்த இறங்கினார். அதுவும் எந்த மன்னர் தமது அமெரிக்கப் பயணத்திறகுக் காரணமாக இருந்தாரோ, அந்த மன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில்தான் விவேகானந்தர் இறங்கினார்.
விவேகானந்தர் ஒரு காலைப் பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம் இன்றும் ‘குந்துக்கால்’ என்று அழைக்கப்படுகிறது.
சென்னையில் விவேகானந்தர் தங்கிய இடம் ‘விவேகானந்தர் இல்ல’மாகக் காட்சியளிக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட, விவேகானந்தரின் சீடராக நிவேதிதா இருந்ததும்.
நிவேதிதா – தேவியின் சீடராக மகாகவி பாரதியார் வாழ்ந்ததும் சிறப்பு மிக்கவைகளாகும்.
en ninaivugalin e -pathivu ---univercity thagavalgal
எல்லோருக்கும் பல பல்கலைக் கழகங்கள் பற்றி தெரியும் . ஆனால் எப்பொழுது
தொடங்கப் பெற்றது என்றுக் கேட்டால் யாருக்கும் தெரியாது .அதிலும் உலகத்தில்
பழமைவாய்ந்த பல்கலைக் கழகம் எது என்றுக் கேட்டால் அவளவுதான் . இனி
உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் உலகின் மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக்
கழகம் மொரோக்கோ நாட்டின் கருயின் நகரில் இருக்கிறது . இந்தப் பல்கலைக்
கழகத்தை 859-லே தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
en ninaivugalin e -pathivu --thagavalgal
வாத்தியார் புள்ள மக்கு , போலிஷ் புள்ள திருடன் என்று அதுபோல் உலகத்தில்
அனைவரையும் மிகவும் வியப்பில் ஆழ்த்திய உலகப்புகழ் பெற்ற மிக்கி மவுஸை
வடிவமைத்த வால்ட்டிஸ்னிஎலியைக் கண்டால் நடுங்கிவிடுவார் என்றால்
பார்த்துகொள்ளுங்கள்
. இவர்தான் இப்படியென்றால் இவரையும் மிஞ்சியவர் ஒருவர் இருந்தார் . இன்றும் அனைவர்க்கும் பெரும் சவாலாக விளங்கும் கால்குலஸ் முறையைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டனுக்கு உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி கொண்டவராம் .
இப்பொழுதெல்லாம் இயற்கையாக இறப்பவர்களைவிட செயற்கையாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் அதிலும் விபத்துகளினால் கூட்டம் கூட்டமாக உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டிருகிறது .
இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்று விபத்துக்கள் அதிகமாக எந்த நாளில் ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிக்கிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் .
என்னதான் செம்மொழி தமிழ் மொழி என்று மாநாடும் போட்டு பேசினாலும் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி பதினான்காவது இடத்தில்தான் இருக்கிறதாம் .

en ninaivugalin e -pathivu ---பேசும் சிலைகள்
சிலைகளைக் கூட ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான்
அமைத்திருகிறார்கள்
இப்படிதான் ஒரு முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள்
அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள் அமைக்கப்படிருந்ததாம் .
அதைப்
பார்த்து வியந்துபோன ஒரு வழிப்போக்கன் அந்த நாட்டவரிடம்
எதற்க்காக ஒவ்வொரு
குதிரையையும் ஒரு கோணத்தில் வடிவமைத்து இருகிறிர்கள் என்றுக் கேட்க அதற்கு
பதில் தந்த அந்த நாட்டவர் .
குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின்
சிலையில்,
குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால்
அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம் என்றும் !
முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம் என்றும் !
குதிரையின் நான்கு கால்களும் தரையில்
பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம் என்றும்
பதில் அளித்தாராம் .
இதற்குப் பெயர்தான் பேசும் சிலைகளோ என்று
ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு கடந்து சென்றானாம் அந்த வழிபோக்கன் .
en ninaivugalin e -pathivu ---alien story
என் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் பத்து வயது மகள்
டிமோ. மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது. ஜன்னல் வழியே சில்லென்ற
காற்றும், ஏதோவொரு பூவின் வாசமும் மிதந்து வந்தது. நான் மிகுந்த
குழப்பத்திலிருந்தேன். இரண்டு நாட்களாய் மண்டைக்குள் குடைச்சல். என் மனைவி
மேலியனிடமும் சரியாக பேசவில்லை. என் வீட்டு நாயின் குரைப்புச் சத்தம்
அவ்வப்போது கேட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தூக்கமின்றி பின்னிரவில்
வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் நடந்தபோது நான் கண்ட சில
விநோதங்கள்தான் இதற்கெல்லாம் காரணம். என்னுடைய முப்பது வருட வாழ்க்கையில்
அன்றுதான் அந்த விநோதமான கால்தடங்களை தோட்டத்தில் பார்த்தேன்.
முதலில் ஏதோவொரு மிருகத்தின் கால்தடமென்றே நினைத்தேன். மிருகங்களை பற்றிய ஆராய்ச்சியில் பத்துவருட அனுபவமுள்ள என்னால் அந்த கால்தடத்திற்கு எந்தவொரு மிருகமும் காரணமில்லை என்று உறுதியாக நம்ப முடிந்தது. அப்படியெனில்….. அந்த தடங்களை புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
என்னுடைய கணினியின் டிஜிட்டல் நூலகத்தை ஆராய்ந்தபோது நூறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கால்தடமொன்றின் புகைப்படம் கிடைத்தது. அந்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் நான் எடுத்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் ஒத்துப்போனதை கண்டவுடன் துள்ளிக்குதித்தேன். என் சந்தேகம் சரிதான். ஒரு வேற்றுகிரக வாசியின் கால்தடம்தான் நான் தோட்டத்தில் பார்த்தது.
வேற்றுகிரக வாசியை உயிருடன் பிடித்துக்கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துகொடுக்கும். என் மகளை தேசத்தின் மிகச்சிறந்த பள்ளியில் சேர்க்கலாம். என் மனைவிக்கு மிக உயர்ந்த பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கலாம். சிறகு முளைத்து பறக்க ஆரம்பித்தன என் கனவுகள்.
ஏலியனை பற்றி இணையத்தில் ஆராய்ந்ததில் ஏலியன்கள் பலமற்றவர்கள் என்ற செய்தி மனதிற்கு தெம்பூட்டியது.
உடனே செயலில் இறங்கினேன். என்னிடமிருக்கும் இரவுக்கேமிரா மூலமாக தினமும் தோட்டத்தை நோட்டமிட ஆரம்பித்தேன். நான்கு நாட்களுக்கு பின் அந்த வினோத உருவம் மெதுவாய் என் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மரத்தின் மீது விறுவிறுவென்று ஏறி பழம் பறித்து தின்ன ஆரம்பித்தது தெரிந்தது. மிகவும் குள்ள உருவம்.உடம்பில் ரோமங்கள் இல்லை. பெயர்தெரியாத ஏதோ ஒன்றால் இடுப்பை மறைத்திருந்தது. முகத்தில் இரண்டு கண்கள் இருந்தன. மூக்கு நீண்டிருந்தது. தலையில் மட்டும் கொஞ்சம் முடியிருந்தது. ஆச்சரித்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியும் ஒரு ஜீவனா? நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.
மறுநாளிருந்து அந்த ஏலியனை பிடிக்க திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். இந்த குள்ள உருவத்தை பிடிக்க திட்டம் தேவையா என்று மனதிற்குள் தோன்றினாலும் நூறு வருடங்களுக்கு முன்பு அதாவது 2100ம் ஆண்டு ஏலியனுக்கும் என் முன்னோருக்கும் நடந்த மிகப்பெரிய போரில் ஏலியன்களால் உயிரிழந்த “தியாகிகள் சரித்திரம்” புத்தகம் நினைவுக்கு வந்தது. ஏலியன்கள் நம் போன்று உடல்வலிமை இல்லாவிட்டாலும் நிறைய ஆயுதங்கள் வைத்திருப்பதாக அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தது. ஒருவேளை இந்தக் குள்ளனும் ஏதேனும் ஆயுதம் வைத்திருந்தால்? மனதிற்குள் பலவாறு சிந்தனைகள் ஓடியது. முடிவில் அறுக்க முடியாத இழைகளால் ஆன வலையை வீசி பிடித்துவிட தீர்மானித்தேன்.
தோட்டத்து மரமொன்றின் உச்சியில் அந்த வலையை இலைகளுக்கு இடையில் மறைவாக விரித்தேன்.
அந்த வலையானது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இன்று இரவு அந்த ஏலியன் மரத்தில் பழம் தின்ன வரும்போது அவனை ஒரே அமுக்காக அமுக்கிவிடலாம். அதன்பிறகு இந்த தேசத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் நானும் ஒருவன்.
வீட்டு பால்கனியில் அமர்ந்து உயர்ரக பைனாகுலர் மூலமாக அந்த மரத்தை கவனிக்க ஆரம்பித்தேன். என் அருகில் வந்து நின்றாள் டிமோ. அவளுக்கு இது வியப்பாகியிருக்க வேண்டும். தினமும் இரவானால் தனக்கு கதை சொல்கின்ற அப்பா இன்று ஏதோ விந்தையாக செய்கிறாரே என்று தோன்றியிருக்க வேண்டும்.
“அப்பா என்ன செய்றீங்க?” என்றவளை அணைத்துக்கொண்டே சொன்னேன்.
“இன்று உனக்கு ஒரு ஏலியனை பரிசாக தரப்போகிறேன்” என்னைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் தந்துவிட்டு உறங்க போய்விட்டாள் டிமோ.
இரவின் இரண்டாம் பாதியில் எதிர்பார்த்தபடியே அந்த உருவம் மெல்ல மரத்தில் ஏறத்துவங்கியது. பழத்தை பறிக்க கையை நீட்டும் சமயத்தில் ரிமோட்டை இயக்கினேன். வலை விரிந்து அந்த உருவத்தை மொத்தமாக அமுக்கியது.
அங்கும் இங்கும் கையை அசைத்து ஏதேதோ செய்தது அந்த ஏலியன்.
வீட்டிலிருந்து இறங்கி வேகமாக ஓடிச்சென்று வலையை தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து வீட்டினுள் போட்டேன். மிரட்சியான ஒரு பார்வையுடன் ஒடுங்கி இருந்தது அதன் உடம்பு.
உறங்கிக்கொண்டிருந்த டிமோவும்,என் மனைவி மேலியனும் சத்தம்கேட்டு எழுந்து வந்தார்கள்.
“இதுதான் ஏலியனா அப்பா” என்றாள் என் மகள் வியப்புக்குறையாமல்.
“ம் இதுதான் ஏலியன்” பெருமையுடன் சொன்னேன்.
“இந்த ஏலியன் எங்கிருந்து வந்திருக்கிறதப்பா?” ஆர்வமிகுதியில் கேட்டாள் டிமோ.
“இது Earth எனப்படும் கிரகத்திலிருந்து வந்திருக்கிறது. இனி நாம்தான் இந்த வெப்டியூன் கிரகத்தின் மிகப்பெரும் பணக்காரர்கள்” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தேன்.

en ninaivugalin e -pathivu -story
நரேனுக்கு அந்த மின்மடலை வாசித்ததும் வியர்த்து விறுவிறுத்து விட்டது.
இதை எப்படித் தன் மேலதிகாரியிடம் சொல்லப் போகிறோம் என்கிற பதட்டத்தில உடல்
கூட லேசாக நடுங்கியது.
அவன் அந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமே ஆகிறது. ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவத்தில் அதைத் தொடங்கிய ரவிசங்கர் இன்று பலரும் போற்றும் அளவுக்கு அதை பெரிய இடத்துக்கு கொண்டு வந்துள்ளதைக் கொண்டாடாத பத்திரிகைகள் இல்லையெனலாம்.
அப்படிப் பட்ட நிறுவனத்தில் அதுவும் எம்டியிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் பதவியில் தான் இருப்பதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதமே. பொறுப்புக்களைச் சரிவரச் செய்ய வேண்டுமென்கிற அக்கறையோடு ஒரு பதட்டமும் எப்போதும் தன்னோடு ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை நரேனுக்கு.
அவனது மேற்பார்வையில் இருந்த ப்ராஜக்ட் முடிவடையத் தாமதமானதில் அதிருப்தி கொண்ட அந்த வெளிநாட்டுக் கஸ்டமர் அடுத்து கொடுக்கவிருந்த சுமார் ஒரு கோடிக்கான ப்ராஜக்ட் ஆர்டரை ரத்து செய்வதாக மெயிலின் வாசகங்கள் கூறின. ஒருவாறாக சுதாகரித்துக் கொண்டு அடுத்த அறையிலிருந்த ரவிசங்கருக்கு அதை ஃபார்வர்ட் செய்தான். பின் வியர்வையை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.
“வாங்க நரேன் வாங்க. இப்பதான் உங்க மெயிலைப் பார்த்தேன்.”
கூலாகப் பேசும் ரவிசங்கரை பிரமிப்புடன் பார்த்தான்.
“என்ன பாக்குறீங்க. எப்படி இந்த மாதிரி டென்ஷனில்லாம இருக்கிறேன்னா” லேசாகச் சிரித்த ரவிசங்கர், “முதல்ல உட்காருங்க” என்றார்.
“ஆடிப் போயிட்டா மாதிரி தெரியுது. தண்ணியைக் குடிங்க முதல்ல”
நொந்து வந்த தன்னை ரிலாக்ஸ் செய்ய உதவும் மேலதிகாரி இன்னும் இன்னும் உயர்வாகத் தெரிந்தார்.
“பாருங்க நரேன். இதெல்லாம் நாம சமாளிக்க வேண்டிய சவால்கள். ஒவ்வொரு முனையிலிருந்தும் கத்தி போல பிரச்சனைகள் பாய்ந்து வந்த படிதான் இருக்கும் கேடயத்தை தயாராப் பிடிச்சிருந்தும் கூட. சரி, இந்த ப்ராஜக்ட் முடிய இன்னும் எத்தனை நாள் ஆகும்? தாமதத்துக்கான காரணங்களை சரியா அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி எடுத்துச் சொன்னீர்களா இல்லையா?”
“சொன்னேன் ரவி.” முதலாளியானாலும் அதிகாரியானாலும் யாவரும் யாவரையும் பெயர் சொல்லி அழைப்பதே அங்கு வழக்கம். அந்தக் அலுவலகத்தில் நரேனைக் கவர்ந்த பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.
சரியான காரணங்களை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதை நரேன் சொல்லச் சொல்ல முகத்தில் எந்த மாறுதலுமின்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் ரவிசங்கர்.
“இது போன்ற நல்ல கஸ்டமர்களை நாம் இழக்க நேரிட்டால் அது பெரிய நட்டம்தான். முடிந்த வரை ப்ராஜக்டைத் துரிதப் படுத்தி தற்போது வாய்தா வாங்கியிருக்கும் தேதிக்கு முன்னதாகவாவது அனுப்பப் பாருங்கள். அடுத்த ஆர்டரைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டாம். அவர்களது கோபம் தணியட்டும்.அப்புறமாக முயற்சிக்கலாம். ஏன் நீங்களே நேரில் கூட போய் பேசிக்கலாம்.”"
“அதெப்படி ரவி,அதற்குள் நம்ம போட்டிக் கம்பெனிகளில் யாராவது முந்திக் கொண்டால்.. ஒரு கோடி… பரவாயில்லையா?”
“பொருள் வரும் போகும், பரவாயில்லை.நாம் ஊக்கத்துடன் உழைத்து மறுபடி ஈட்டிட இயலும். ஆனால் பெயர்..” எனச் சொல்லும் போதே தொலைபேசி ஒலிக்க அதை ஒரு கையால் எடுத்து “ஹலோ” என்றவர் அவரது மேசையில் அவரைப் பார்க்க இருந்த புகைப்படச் சட்டம் ஒன்றை அவனைப் பார்க்கத் திருப்பி வைத்தார். ஆள்காட்டி விரலால் தட்டி கண்களாலேயே பேசினார் அதைப் பார்க்குமாறு. அதில் கைப்பட எழுதப் பட்ட சில குறள்கள். அவர் விரல் சுட்டிய இடத்தில்:
“உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடமை
நில்லாது நீங்கி விடும்.”
தொலைபேசி உரையாடல் நீண்டு செல்ல அதைத் தவிர்க்க இயலாத ரவிசங்கர் ‘நீங்கள் சென்று உங்கள் வேலையைத் தொடரலாம்’ என்பது போலத் தலையசைத்து விடை கொடுக்க நரேன் மறக்காமல் குறள் இருந்த சட்டத்தை அவரை நோக்கித் திருப்பி வைத்தான். திரும்பி நடக்கையில் கூடவே அவனுக்கு நினைவுக்கு வந்தது:
“வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.”

en ninaivugalin e -pathivu ---good small story
ஜனனி மீண்டும் ஒரு முறை அந்தப் பரிட்சை பேப்பரை எடுத்துப்பார்த்தாள்.
கணக்கின் குறுக்கே ஒரு சிவப்புக்கோடு போட்டிருந்தது. மார்ஜினில் ஒரு பெரிய
பூஜ்யம் போட்டிருந்தது. ஜீரோ போட்டால் தப்பு என்று ஜனனியின் நான்கு வயது
மூளைக்குத் தெரியும். ஆனால் ஏழு இண்ட்டு இரண்டு, பதினாலு எப்படித்தப்பு?.
அதுதான் அவளுக்குப் புரியவில்லை.
அரைநிமிஷம் சும்மாயிராது ஏதாவது விஷமம் செய்துகொண்டிருக்கும் கை. எதையாவது கேட்டுக்கொண்டிருக்கும் வாய். கடல் ஏன் நீலம்?மரம் ஏன் பச்சை?ஜிகினா பேப்பர் எங்கிருந்து வருகிறது?மழையில் நனையும் மாட்டிற்கு சளி பிடிக்குமா?கம்ப்யூட்டருக்கு எப்படி எல்லாம் தெரியும்? கடவுள் என்பவர் கம்ப்யூட்டரா?
ஜனனியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது தேன் கூட்டில் கல்வீசுவது போல. ஒரு கேள்விக்குப்பதில் சொன்னால் அத்தோடு ஓயாது.
சரம்சரமாய் கேள்வி கிளம்பும். அது எதையாவது ஆரம்பித்தால், ‘கொஞ்சம் சும்மாயிரேன்மா என்பார் அப்பா.இப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா’ என்பார் அம்மா.
ஆனால் தாத்தா பதில் சொல்லுவார்.சலித்துக் கொள்ளாமல் சொல்வார். சளைக்காமல் சொல்வார். அந்த நிமிடங்களில் அவரே குழந்தையாகிவிட்டது போன்ற குதூகலத்துடன் சொல்வார்.
கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்வி கேட்காமலே பதிலைக் கண்டுபிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தார். வித்தியாசமாக யோசி, விடை கிடைக்கும் என்று சொல்லித் தந்தார். வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் எல்லாம் எப்படி வித்தியாசமாகத் தெரியும் என்று கற்றுக் கொடுத்தார். கால்குலேட்டரில் 7-ஐ தட்டிதலைகீழாகப்பிடித்து ட என்பார். 3-ஐத் தட்டி E என்பார். ஜீரோவை ஓ என்பார் 1-யை ஒன்றுஎன்பார்.
தாத்தாவைக் கேட்டால் தெரியும்.அந்தக் கணக்கு எப்படித் தப்பு?.
பரிட்சைப் பேப்பரைப் பார்த்ததும் தாத்தா படபடத்தார். ஜீரோவா, என்னடி இது?என்னடி கேட்டிருந்தாங்க?கொஸ்டின் பேப்பரைக் கொண்டா பார்க்கலாம். கேள்வித்தாளை வாங்கி உரக்கவே படித்தார்.
‘ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள்
இரண்டு வாரத்திற்கு எத்தனை நாட்கள்?’
ஜனனியின் விடைத்தாளைப் பிரித்து பார்த்தார். ஜனனி 7 x 2 என்று
எழுதியிருந்தது.
கணக்கின் குறுக்கே டீச்சரின் சிவப்புகோடு. பக்கத்து மார்ஜினில் பெரிதாய் பூஜ்யம்.
“தப்பா தாத்தா? எப்படித்தப்பு ”
“அதாண்டிஎனக்குப்புரியலை?”
தாத்தா மறுநாள் ஆபீஸிற்கு லீவு போட்டார். ஜனனியுடன் பள்ளிக்கு வந்தார். கணக்கு டீச்சரைத் தனியே சந்தித்துக் கையோடு கொண்டு வந்திருந்த பரிட்சைத்தாளைப் பிரித்துக் காண்பித்தார்.
“இதிலே என்ன தப்பு மேடம்”
“தப்புதான்”
“அதான் எப்படி…”
டீச்சர் கையை உயர்த்திப் பேச்சை நிறுத்தினாள்.
“சொல்றேன். இதே கணக்கை கிளாஸ்ல ஒர்க் பண்ணி காண்பிச்சிருக்கோம்.”
“என்னென்னு ?”
“ஒரு வாரத்திற்கு ஏழுநாட்கள். அப்படியானால் இரு வாரத்திற்கு 2 x 7 = 14.”
“ சரி. 7 x 2 = 14 என்று குழந்தை எழுதினால் அதுதப்பா?”
“ தப்பதான். வகுப்பில் எப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அப்படித்தான் எழுதணும். 2 x 7 = 14 என்று சொல்லிக் கொடுத்திருக்கும் போது 7 x 2 = 14 என்று எழுதியது தவறு தான்.”
“டீச்சர் இது அநியாயம்!” என்று இரைந்தார் தாத்தா.
“நான் பிரின்சிபல்கிட்டே புகார் செய்வேன்.”
“ப்ளீஸ், டூ இட் ”என்றாள் டீச்சர் அலட்சியமாக.
பிரின்சிபல் அணிந்து கொண்டிருந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டு கிட்டப்பார்கைக்கு அணிந்து கொள்ளும் கண்ணாடியை அணிந்து கொண்டு, கேள்வித்தாள், விடைஎழுதின பேப்பர் இரண்டையும் மாறி மாறிப் பார்த்தார்.
தாத்தா சொன்னதை முழுவதும் காது கொடுத்துக் கேட்டார். “கொஞ்சம் இருங்க, விசாரிக்கிறேன்” என்றார்.
ஜனனியின் கணக்கு டீச்சருக்கு அழைப்புப் போயிற்று. அழைப்பை எதிர்பார்த்திருந்தாலோ என்னவோ, டீச்சர் வகுப்புக் கணக்கு நோட்டுடன் வந்தார்.
“என்னம்மா, இது?” என்றார் பிரின்சிபல்.
“சார், நாம் வகுப்பில் இந்தக் கணக்கைப் போட்டுக் காட்டியிருக்கிறோம்.”
பிரின்சிபல் மேஜை மீது நோட்டை விரித்துப் போட்டார் டீச்சர்.
“ஆனால் இந்த ஸ்டூடண்ட் அதைப் போலப் பரீட்சையில் எழுதவில்லை.”
“அதனால் 7 x 2 =14 என்பது தவறாகிவிடுமா?” என்றார் தாத்தா ஆத்திரமாக.
“அப்படியில்லை சார். இது ஒரு மாணவர் வகுப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதைக் கண்டறிதற்காகக் கொடுக்கப்பட்ட கணக்கு” என்றார் டீச்சர்.
‘’ ஐ ’ஆம்சாரிசார். உங்கள் பேத்தி வகுப்பில் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. நீங்கள் கொஞ்சம் கண்டித்துவையுங்கள்” என்றார் பிரின்சிபல்.
நாற்காலியை விருட்டென்று பின்னால் தள்ளிக் கொண்டு எழுந்தார் தாத்தா.
பள்ளிக்கல்வி அலுவலரைப்பார்க்க இரண்டு மணிநேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. காரிடாரில் போட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கட்டுக்கட்டாக காகிதங்கள் கையெழுத்திற்காக அவரது அறைக்குள்போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா. வேலையெல்லாம் முடித்துவிட்டு வெளியே கிளம்பும் முன் உள்ளே அழைத்தார் அதிகாரி.
“அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. ஐந்துநிமிடத்தில், சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிங்க சார்” என்றார் ஆரம்பிக்கும்போதே.
நடந்ததை அவசர அவசரமாகச் சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. பாதியிலேயே இடைமறித்த அதிகாரி.
“இந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி யெல்லாம் எங்க ஆளுகைக்குள் வராது சார்” என்றார்.
“அது இருக்கட்டும் சார். ஆனா இது அநியாயம்னு உங்களுக்குத் தோணலையா?”.
“எது?”
“சரியான விடை எழுதினாலும் சைபர் போடறது?”
“உங்க குழந்தை எழுதினது முற்றிலும் தப்புனு சொல்ல முடியாது. பார்ஷியலி கரெக்ட்.”
தாத்தாஅரை நிமிடம் யோசித்தார்.
“இது பார்ஷியலி கரெக்ட்னு எனக்கு நீங்க ஒரு கடிதம் எழுதித்தர முடியுமா?”
“எதை, ஏழு இரண்டு பதினாலுங்கறதையா”
“அப்படியில்லை சார். முதல்ல இது ஆவுட் ஆஃப்மைஜுரிஸ்டிஷன். என் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம். இரண்டாவது, முடிவுகள் மாத்திரமல்ல, வழிகளும் சரியாய் இருக்கணும்னு காந்திஜியே சொல்லியிருக்கிறார்
இல்லையா?”
மந்திரிவரை இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டுமா என்று தாத்தாவால் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வளவு உயர்மட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், ஜனனியின் அப்பாவுடனும், அம்மாவுடனும் பேசிவிடுவது நல்லது என்று தோன்றியது.
இவ்வளவு தூரம் போராடியதற்கே, அவர்கள் என்னைக் கேட்காமல் ஏன் செய்தாய் என்று கோபப்படலாம். இதனுடைய நல்லது கெட்டது எங்கள் குழந்தை மீதுதானே விடியும் என்று சண்டைக்கு வரலாம்.
ஆனால் குழந்தைக்கு அப்பட்டமாக ஒரு அநியாயம் நடக்கும்போது, அதைப் பார்த்துக் கொண்டு ஒதுங்கிக்போகிற அளவிற்கு இன்னும் உணர்ச்சிகள் மழுங்கிப்போய்விடவில்லை. எனவே ராத்திரி சாப்பாட்டு மேஜையில் விஷயத்தை மெல்லப் போட்டு உடைத்தார்.
“அவ டீச்சர் சொல்றது தப்பாயிருக்கலாம்பா, ஆனா அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே பரீட்சையிலே எழுதறத்துக்கு இவளுக்கு என்ன கேடு?”
என்றார்அப்பா.
“சரி, எழுதல்ல, அதுதப்பா?”
“ஏன்அவஎழுதல்ல?” என்றாள் அம்மா.
“அவளையே கூப்பிட்டு கேளு.”
“ ஜனனி,” என்றுஅதட்டலாக அழைத்தார் அப்பா.
“யெஸ்டாடி” என்று ஓடி வந்தது குழந்தை.
“ஒரு வாரத்திற்கு ஏழுநாள். இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள்?”
டீச்சர் கொடுத்த கணக்கை அப்பா ஏன் கேட்கிறார் என்று புரியாது திகைத்த ஜனனி, “பதினாலு” என்றது சற்றுத் தயங்கி.
“எப்படி”
“ஏழு இண்ட்டு இரண்டு இஸ் ஈக்வல் டு பதினாலு.”
“ஏழு இண்ட்டு இரண்டு எப்படி? ஒரு வாரத்திற்கு ஏழு நாள், அப்போ இரண்டு இன்ட்டு ஏழு தானே?”
“இல்லே தாத்தா, ஒரு வாரத்தில ஒரு சண்டே, ஒரு மண்டே, ஒரு ட்யூஸ்டே. இப்படி ஏழநாள். இரண்டு வாரத்திலே, இரண்டு சண்டே, இரண்டு மண்டே…” என்று விரல் விட்டது ஜனனி.
“ஸோ, ஏழுநாள், ஒவ்வொன்றும் இரண்டு தடவை அதான் ஏழு இண்ட்டு இரண்டு.”
“ கிரேட்” என்று கூவினார் தாத்தா.
“இது வித்தியாசமான சிந்தனை. மொத்த கிளாஸும் டீச்சர் போட்டுக் கொடுத்தபாதையிலே குதிரைக்கு பட்டை கட்டின மாதிரி போறச்சே,
மூளையை உபயோகிக்க நீ கணக்குப் போட்டிருக்க பாரு. இது கிரியேட்டிவிட்டி! இது புத்திசாலித்தனம்! என்று உற்சாகத்தில் பூரித்தார் தாத்தா.
“சந்தோஷப்படாதீங்கப்பா. இது கவலைப்பட வேண்டிய விஷயம்.”
“என்னடா சொல்றே?”
“இது பெண் குழந்தை. ஞாபகம் வைச்சுக்குங்க. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை, பின்னால பெரியவளானா நிறைய கேள்விகேப்பா. இதுநாள் வரைக்கம் நடைமுறையில இருக்கிற சம்பிரதாயங்கள். நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பாள்.
வித்தியாசமா சிந்திக்கறதினாலேயே காயம்படுவா. ஊரோடு உலகத்தோட, ஒத்து வாழாம இருந்தா அவளுக்கும் அவஸ்த். மற்றவர்களுக்கும் இம்சை.”
“அதனால?”
“ஏய், டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்குப் போடு. அதிகப் பிரசங்கித்தனமெல்லாம் பண்ணாதே” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார் அப்பா.
ஜனனியை வைத்த கண் வாங்காமல் அரை விநாடி பார்த்த தாத்தா, தாவி அவளை அணைத்துக் கொண்டார்.
அவர் இமையில் ஈரம் பளபளத்தது.

en ninaivugalin e -pathivu ---story
சோழப் பேரரசனாய் வாழ்ந்த
முசுகுந்த சக்கரவர்த்தி முற்பிறவியில் கயிலை
மலையில் குரங்காக வாழ்ந்தான். அப்பொழுது குளிராலும் பயத்தாலும் நடுங்கிய
குரங்கு, ஓர் இரவு முழுவதும் சிவராத்திரி அன்று தன்னையறி யாமல் வில்வ
மரத்து இலைகளை உதிர்த்துப் போட்டுக் கொண்டே இருந்தது. அது மரத்தினடியில்
இருந்த சிவ
லிங்கத்தின்மீது விழுந்தது. சிவபெருமான் குரங்கை இறங்கி வரச் சொன்னார். கீழே இறங்கி வந்த குரங்கு ஈசனின் திருவடி பணிந்தது; தவறு செய்து விட்டதற்காக மன்னிப்பு வேண்டியது.
சிவபெருமான் குரங்கை ஆதரவாய்த் தடவிக் கொடுத்து, ""நீ சிவராத்திரி அன்று எம்மை அர்ச்சித்திருக்கிறாய். இந்தப் புண்ணியத்தின் பலனாக உனக்கு மனிதப் பிறவி வழங்குகிறேன்! பூவுலகில் சோழர் குடியில் அரசனாய்ப் பிறந்து பேரரசனாவாய்'' என்று ஆசீர்வதித்தார்.
ஆனால் அந்தக் குரங்கோ, ""எனக்கு அரச பதவி வேண்டாம். தங்கள் பாதத்தின் அருகே இருந்தாலே போதும்'' என்றது.
""யாராயிருந்தாலும் செய்த நல்வினை- தீவினைகளுக்குரிய பலனை அனுபவித்தே ஆகவேண்டும். இது உலகப் பொதுநியதி'' என்றார் சிவபெருமான்.
""அப்படியாயின் தங்களை மறவாதிருக்க இதே குரங்கு முகத்துடனே பிறக்கவாவது அருள் புரிக'' என்றது குரங்கு. அப்படியே அருள் பெற்றது. குரங்கு முகத்து டன் பிறந்து ஆட்சி புரிந்தவனே முசுகுந்த சக்கரவர்த்தி! முசு என்றால் குரங்கு.

en ninaivugalin e -pathivu ---சக்தி பீடங்கள்
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி சிவபெருமானுக்கு மனைவி ஆனார். தட்சன்
பலவிதமான பராக்கிரமங்களைக் கொண்டவன். இறைவனான சிவ பெருமானைவிட தானே
உயர்ந்தவன் என்ற இறுமாப்பும் கர்வமும் உடைய வன். சிவபெருமான் தனது மருமகனாக
இருந்தும் அவருக்கு மதிப்பளிப்பது இல்லை. தான் என்ற அகம்பாவம் தட்சனிடம்
மேலோங்கி இருந்த காலகட்டம்.
அப்போது தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான். இந்த யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைத்தான். உலகிலுள்ள அனைத்து சித்தர்கள், அரசர்கள், பெரும்புலவர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுத்தான். இப்படி எல்லாருக்கும் அழைப்பு விடுத்து யாகத்தை நடத்த தட்சன் ஏற்பாடு செய்தபோதும், தனது மருமகனான சிவ பெருமானையும் மகள் பார்வதியையும் அழைக்க வில்லை. இவ்விஷயம் தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் எட்டியது. இறைவனை அழைக்காமல்- மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நாம் மட்டும் எப்படிச் செல்ல முடியும் என்ற விவாதம் எழுந்தது. உடனே தேவ சபை கூடியது. சிவ பெருமானை அழைக்காதது பற்றி விவாதித்தனர். இறுதியாக பிரம்ம தேவன் உட்பட யாருமே தட்சன் நடத்தும் யாகத்தில் கலந்து கொள்வ தில்லை என முடிவெடுத்தனர்.
ஆனால் தட்சன் யாகம் ஆரம்பித்த வுடன், "தட்சன் சிவபெருமானைவிட செல்வாக்கு படைத்தவன்- முன்கோபக் காரன். நாம் யாகத்தில் கலந்து கொள்ளா விட்டால் நம்மைப் பழி வாங்கி விடுவானோ என்று பயந்து, பிரம்மன் உட்பட தேவர்கள், முனிவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் ஒவ்வொரு வராக நழுவிச் சென்று தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட நிலையில் பார்வதி தேவி தனது தகப்பன் நடத்தும் யாகத்தின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, பிறந்த வீட்டுப் பாசம் காரணமாக அந்த யாகத் தில் கலந்து கொள்வது என்று முடிவு செய்தாள். தனது கணவரான சிவபெருமானிடம் உத்தரவு கேட்டாள்.
""நம்மை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நீ செல்லக்கூடாது'' என்று சிவபெருமான் தடுத்தார். பெருமானின் கட்டளையையும் மீறி பிறந்த வீட்டின் பெருமையை எண்ணி பார்வதி தேவி தகப்பன் தட்சன் நடத்தும் யாகத்திற்குச் சென்றாள்.
அதனால் மனம் வருந்திய பார்வதிதேவி, தீயில் வீழ்ந்து உயிர் துறந்தாள். இதை அறிந்த சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு தட்சனின் யாகத்தை அழித்ததோடு, இறந்து கிடந்த பார்வதியின் உடலைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அதன் உக்கிரத்தால் உலகங்கள் யாவும் அதிர்ந்தன. இந்த நிலை நீடித்தால் அனைத்து உலகங்களும் அழிவது உறுதி என்று அஞ்சிய தேவர்கள் மகாவிஷ்ணுவைச் சரணடைய, அவர் தனது சக்ராயுதத்தால் பார்வதி தேவியின் உடலை அறுத்து பூமியில் வீழ்த்தினார். அப்படி பார்வதி தேவியின் உடற் பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்கள் எனப்பட்டன. அவ்வகையில் 51 சக்தி பீடங்கள் இருப்பதாகச் சொல்வர்.

en ninaivugalin e -pathivu --மகாபாரதக் கதைகள்
சிந்து நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் ஜயத்ரதன். அவன் வளர வளர, தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறருக்குத் துன்பம் இழைப்பதைப் பெரும் மகிழ்ச்சியாகக் கருதினான்.
சிந்து மன்னன் விருத்த க்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால் அவனைக் கண்டிக்கவில்லை.
திருமணம் செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் மாறலாம் என்று எண்ணிய தந்தை, அவனுக்கு துரியோதனன் தங்கை துச் செள்ளையைத் திருமணம் செய்து வைத்தான்.
தந்தையின் எதிர் பார்ப்பு வீணானது. திருமணத்துக்குப்பின் ஜயத்ரதன் கொடுமை எல்லை கடந்து போயிற்று.
"இத்தகைய கொடி யவனுக்குக் கேடு நேருமே! யாரிடமா வது சிக்கித் தலை அறுப்புண்டு சாகக் கூடுமே! இனி இவனைத் திருத்தவும் இயலாது. இவன் சாகாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்ன வழி?' என்று ஆய்ந்தான். "தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று ஒரே மகனைக் காப்போம்' என முடிவு செய்தான்.
காட்டின் நடுவே "சியமந்தம்' என்ற குளம் இருந்தது. அதன் கரையெங்கும் மரங்கள் வானூற ஓங்கி வளர்ந்திருந்தன. வெயில் நுழைய முடியாத சோலையாக அது இருந்தது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.
"என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இடுபவனின் தலை நொறுங்க வேண்டும்' என்று இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.
பல ஆண்டுகள் தவம் செய்தான்; வரமும் பெற்று விட்டான். தவத்தை முடிக்க வேண்டிய தருணம். அந்த சமயத்தில் எதிர் பாராத நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவை ஜயத்ரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான்.
இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அர்ஜுனன், "ஜயத்ரதனைக் கொன்றே தீருவேன்' என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறுநாள் மாலை அர்ஜுனன் ஓர் அம்பால் ஜயத்ரதனின் தலையை வெட்டிக் கொன்றான்.
உடனே கண்ணன், ""அர்ஜுனா! அந்தத் தலையை நிலத்தில் பட விடாதே! மேலும் மேலும் அம்பு தொடுத்து சியமந்தகத் தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக் கும் இவன் தந்தையின் கையில் விழச் செய்'' என்றான்.
கண்ணன் சொன்ன படியே அர்ஜுனன் செய்தான். ஜயத்ரத னின் தலை, தவம் செய்து கொண்டிருந்த அவன் தந்தையின் கையில் விழுந்தது. எதிர்பாராது விழுந்த மையால் துணுக்குற்ற தந்தை, தன் மகன் தலையைக் கீழே போட்டான்.
அவன் பெற்ற வரம் பலித்து விட்டது. "என் மகன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்' என்பது தானே அவன் பெற்ற வரம்!
இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிரிழந்தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.
en ninaivugalin e -pathivu --metro train--ideo
சென்னையில் மெட்ரோ ரயில் போடலாம் என கடப்பாறையை எடுத்தாலும் எடுத்தார்கள்,
டோட்டல் சென்னையே திக்குமுக்காடிப்போயிருக்கிறது.
திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயிலின் ஒவ்வொரு ப்ரகாரத்தையும் அடிப்பிரதக்ஷனம் செய்துவிட்டு வரும் நேரத்தைவிட 1400 cc காரில் அமுக்கோ அமுக்கென்று அமுக்கினாலும் அஷோக் பில்லரிலிருந்து வடபழனி சிக்னலை வந்தடையும் நேரம் அதிகம்.
கிண்டி அலெக்ஸாண்டர் ஸ்கொயர் சைதாப்பேட்டை இங்கெல்லாம் காரில் இருந்தபடி முடிவெட்டும் சலூன், சட்டையைக் கழட்டிக்கொடுத்தால் பானெட்டின் மேல் வைத்து இஸ்திரி செய்து கொடுப்பது, ஆர்டர் எடுத்துக்கொண்டு போய் பருப்பு வாங்கி பொங்கல் செய்து காரில் கொண்டு வந்து சுடச்சுட செர்வ் செய்வது போன்ற பலப்பல மொபைல்/இம்மொபைல் ஐடியாக்கள் தோன்றுகிறது.
மெட்ரோ ரயில் ஓய்யாரமாக ஓட ஆரம்பித்தவுடன் அதில் செல்லப்போவது யார் என்று இன்னும் யாரும் முடிவு செய்யவில்லை. பயணச்சீட்டு விலை ஏ.சி. பஸ்ஸுக்கு நிகராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி. பஸ்களின் "தினசரி சவாரிக்கள்" ஐ.டி கம்பெனியின் கழகக் கண்மனிகளும், கொஞ்சம் மூச்சுவிடும் நடுத்தர வர்கத்தினரும் மட்டுமே.
சென்னையின் குறுகிய சாலைகளில் குறுக்கே ஓடும் பைக்குகளுக்கு நிகராக கார்கள் அதிகம் பார்க்கத்துவங்கியிருக்கிறோம். கடந்த பதினைந்து வருடங்களாகவே ஏறுமுகத்தில் இருந்தாலும், சமீப காலத்தில் கார்கள் பன்மடங்கு விற்கத்துவங்கியுள்ளன. ஒன்னரை லட்சத்து நேனோ, மூன்றேகால் லட்சத்தில் ஆல்டோ, நாலேகாலுக்கு ஐ10, ஐந்தரைக்கு ஃபிகோ, ஆறே முக்காலுக்கு ஸ்விஃப்ட் என்று லட்சம் கார்கள் இந்தப்பக்கமும், அந்தப்பக்கம் 8.75 % ஸ்டேட் பாங்கும், 11.75% லிருந்து 12.75% வரை ஐசிஐசிஐ முதலான வங்கிகளும் அனிவகுத்து நிற்க, கையிலிருந்து ஒரு பைசா கொடுக்காமல் ஏ.சி போட்டுக்கொண்டே காரை திரும்ப ஓட்டி வரலாம். மாதக் கடைசியில் சம்பளம், ஐயப்பன் கோயிலில் சந்தனத்தை உள்ளங்கையில் கொஞ்சூண்டு குச்சியை வைத்து தேய்த்துவிடுவார்களே, அந்த மாதிரிதான் எல்லாப் பிடித்தங்கள் போக வரும்.
அதுமட்டுமல்லாது, நாலு பேர் செல்லக்கூடிய காரில் ஒருவர் மட்டும் அலுவலகம் செல்வது டைட்டானிக் கப்பலின் லைஃப் போட்டில் டிக்காப்ரியோவை ஏற்றிச் செல்லாத உவமைக்கு ஒப்பாகும்.
மெட்ரோ ரயிலில் பயணித்தால், கார் இன்ஸ்டால்மெண்ட் + பெட்ரோல் செலவைவிட குறைவாகவே ஆகும் என்று உணர்ந்தால் நல்லது.
சாலைகளில் கார்த்தடங்கள் குறையும். இடம் கிடைக்கும். பெட்ரோல் செலவு குறையும். பெட்ரோல் தட்டுப்பாடு குறையும். நேரம் மிச்சமாகும்.
அதுசரி, பூமிக்கு அடியிலும் மேலும் செல்லப்போகும் இந்த ரயிலினால், சென்னையின் தினசரி போக்குவரத்து சீரடையுமா ? மூக்கில் இன்னொரு துளையிட்டால் ஆஸ்துமா குணமாகுமா ? அனேகமாக இரண்டுக்கும் ஒரே விடைதான்.
இதோ அடுத்த வருடம் ஓட ஆரம்பிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும் என்ற முக்கியமான கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, இந்தியப் பிரஜைகளின் ஜனநாயகக் கடமையான "நம்பிக்கை"யை மட்டும் வருங்காலத்தின்மீது வைப்போம்.
நம்பினோர் கைவிடப்'படார் !'

en ninaivugalin e -pathivu --Why does this still image appear to move?
Why does this still image appear to move?
One explanation is that the color white turns the receptors on our retinas on, while the color black shuts them off. Having white and black in close proximity, and in certain arrangements, makes them flicker between on and off. The changes from on to off and on again are interpreted by the brain as motion.
Another theory holds that our retina sections aren't flicking off and on, they're perceiving color changes. It's been noticed that, when black and white are striped, and those stripes move in different directions - for example the stripes are oriented differently in each of four sections of a grid - the eyes see illusory colors. The curves that we see around the dots might serve as different angled black and white lines, and we might see color changes that we interpret as motion.
Friday, August 17, 2012
en ninaivugalin e -pathivu -----”மகிழ்வித்து மகிழ்”
”மகிழ்வித்து மகிழ்”
தினமும் நன்றாக சிரிக்க வேண்டும்.நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்க வேண்டும்.
ஒரு கிராமத்தில் வசிக்கும் வேலன் தனது செருப்பை கழட்டி விட்டு வயலில் இறங்கினான்.இதனைப் பார்த்த நகரத்தில் வசிக்கும் அவனது நண்பர்கள் இருவர் அவனது ஒரு செருப்பை ஒழித்து வைத்து விளையாட நினைத்தனர்.ஆனால் நண்பர்களில் ஒருவன் இதற்கு சம்மதிக்க வில்லை....அதற்குப்பதில் செருப்புக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் காய்ன்யை வைக்க சொன்னான். அதைப் போல வைத்தனர்.வேலனும் செருப்பு அணியும் போது ரூபாயைப் பார்த்து மகிழ்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்தினான்...
பிறர் படும் சிரமத்தை பார்த்து சிரிக்க கூடாது..பிறர் படும் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதே உண்மையான மகிழ்ச்சி தரும்.

en ninaivugalin e -pathivu ---திருக்குறள் கதை..
”அறிவுடையார் எல்லாம் தமக்குரியர்”
திருக்குறள் கதை..
இரு குதிரை வீரர்கள் குதிரை ஓட்டப்பந்தயத்தில் பங்கெற்க விரும்பினர். ஜெயிப்பதற்காக அவர்கள் ஒரு மந்திர வாதியை அணுகினர். அவரும் ஒரு மத்து, ஒரு வாரியல் ,ஒரு செருப்பு, போன்றவற்றை மந்திரித்து கொடுத்தார்.இருவரும் இருவேறு இடங்களில் நடந்த போட்டியில் பங்கெடுத்தனர்.ஒருவர் ஜெயித்தார், ஒருவர் தோற்றார்.தோற்றவரிடம் மந்திரவாதி காரணம் கேட்டார்.
ஐயா,நீங்கள் சொன்ன மாதிரி குதிரையை முதலில் மத்தால் அடித்தேன்..அது நன்றாக ஓடியது.சுமார் 50 கி.மீ.ஸ்பீடில் ..பிறகு வாரியலால் அடித்தேன்.அது 100கி.மீ.ஸ்பீடில் ஓட தொடங்கியது..நான் அந்த வேகத்தில் கீழே விழுந்து விட்டேன்..என்றான்.
வெற்றி பெற்றவன் சொல்லத் தொடங்கினான்.
ஐயா,எனக்கும் அதே நிலைமை தான். குதிரை ஓடிய வேகத்தில் நானும் கீழே விழுந்துவிட்டேன். ஆனால் நான் தாங்கள் கொடுத்த செருப்பால் என்னை அடித்து ,குதிரையை விட வேகமாக ஓடி அதில் ஏறி விட்டேன்.அதனால் வெற்றி பெற்றேன் என்றான்.

Thursday, August 16, 2012
en ninaivugalin e -pathivu ----GREAT THOUGHTS
3main rules in a relationship:
1.Don’t Lie
2.Don’t cheat
3.Don’t make promises you can’t keep.
When a girl
tells you about her problems,
It does not
mean that she’s
complaining it means
She trusts
you.
I don’t need
any one in
my life who
does n’t want to be
there.
Learn to
appreciate what you
have, before time
makes you appreciate
what you had.
Life doesn’t
get easier, you
just get stronger!
When you
are a mother you
are never really alone
in your thoughts.
A mother always has
to think twice
--once for her
herself and once
for her child.
Life doesn’t
get easier. You just
get stronger!
God is taking
care of
you, even when
it seems like
your all alone;
Believe me God
is working hard
behind the scences
of your life,
You can
never make the
same mistake twice
because the second time
you make it it’s
not a
mistake, it’s a
choice.
Tuesday, August 14, 2012
Sunday, August 12, 2012
en ninaivugalin e -pathivu 2005 க்குப் பின் நடந்த நிகழ்வுகள்
ராஜி வீட்டு கிரகப்பிரவேசம்
நன்றாக நடந்தது...என்னால் தான் முழுமையாக ஈடுபட முடியவில்லை.எல்லாம் இறைவன் செயல்...
தன்வீன் பெயர் விடும் விழா
சிறப்பாக நடந்தது..பாட்டு மாமி என்ன தவம் செய்தனை பாடலை பாடினார்கள்..என்ன தவம் செய்தனை ராஜி என்று...
மணி நிச்சய தார்த்தம்
நன்றாக நடந்தது..எல்லாரும் வந்து சிறப்பித்தார்கள் ..கடவுளுக்கு நன்றி
மணி திருமணம்
நன்றாகநடந்தது. என்னால் மனதை கட்டுப் படுத்த முடியவில்லை..என்ன செய்ய ..எல்லாம் அவன் செயல்
தன்வீன் முதல் பிறந்த நாள்
சென்னையிலேயே நடந்தது..நன்றி
ஈஷாந்த் பெயர் விடும் விழா
நன்றாக நடந்தது..இறைவனுக்கு நன்றி
ஈஷாந்த் பிறந்த நாள் விழா
சென்னையிலேயே நடந்தது..திருச்செந்தூர் செல்ல எனக்கு மனது கஷ்டமாக இருந்தது..
மணி வீட்டு கிரகப்பிரவேசம்
நன்றாக நடந்தது..என்னை கவனிக்க முடியாமல் இரண்டாவது மாடி என கவலை....வாழ்க்கையை கழிக்க ஏதாவது கவலை வேண்டுமல்லவா
பிரேம் திருமணம்
நினைத்தமாதிரி நன்றாக நடந்தது..கடவுளுக்கு நன்றி..
பிரேம் வீட்டு கிரகப்பிரவேசம்
நன்றாக நடந்தது...என்னை சாப்பிட்டாயா என கேட்க ஆளில்லாமல்
முகிலன் பெயர் விடும் விழா
நன்றாக நடந்தது..

en ninaivugalin e -pathivu --achcham,madam,naanam,payarpu
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன?
------------------------------ -----------------------
அச்சம்
----------
------------------------------
அச்சம்
----------
அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.
மடம்
----------
தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.
நாணம்
----------
சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம்.
பயிர்ப்பு
----------
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

en ninaivugalin e -pathivu ----jokes
ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:
"ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு"
"ஐந்து"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?"
"எட்டு"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு."
"ஜேக்"
என் நண்பன் என்னிடம் கேட்டான் காதலுக்கும் நட்புக்கும் என்ன் வித்தியாசம்.நான் சொன்னேன் காதலன்,காதலி என்றூ சொன்னால் உதடுகள் ஒட்டாது.
நட்பு,நண்பன்,நண்பேன்டா என்றூ சொல்லிபார் உதடுகள் கூட ஒட்டும் என்றூ சொன்னேன்.உடனே அவன் என்னை மெரீனா கடற்கரைக்கு அழைத்து
சென்றான் ,அங்கே சென்றூ பார்த்தால் காதலனும் காதலியும் இனைந்தால் உதடு ஒட்டும் என்றூ சொல்கிறான். என்னிடம் எந்த பதிலும் இல்லை.
ரொம்ப சிம்பிள்.
உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு டைப் பண்ணி, ஒரு இடைவெளி விட்டு, உங்க பேர டைப் பண்ணுங்க.
அப்புறமா ஒரு இடைவெளி விட்டுட்டு,
உங்களோட காதலன் அல்லது காதலி பேர டைப் பண்ணுங்க.
இந்த S M S யாருக்கு அனுப்பனும் தெரியணுமா?
கொஞ்சம் கீழ வாங்க............
*
*
*
*
வேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கு அனுப்பனும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு…. எப்படி?
பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?
சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில்இருந்துசனிக்கிழமை வரை..?
சைக்கிள்ல போனா ‘சைக்கிளி’ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?
டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது
டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.
போலீஸ்: நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?
ஒருவர்: ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
போலீஸ்: அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!
ஒருத்தர் பஸ்ஸில் பயணப்படும் போது திடீரென் ஓட்டுனர் பிரேக் போட அவர் முன்னால்
நின்ற பெண்மீது இடித்துவிட்டார்.. அவர் சுதாகரித்துக்கொண்டு எழும்முன்...
பெண் : ஏய், நீ என்னப்பண்ணிக்கிட்டிருக்க..?????
நம்மாளு: பஞ்சாப் யூனிவர்ஸிட்டில் பைனல் இயர் B.E.
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..
சூரியன் எப்எம் ல வேலைக்குசேர்ந்தது தப்பா போச்சுபா..
ஏன்...
சம்பளம் கேட்டா , கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்கிறான்
பிச்சக்காரங்க கூட அஞ்சு பைசா வாங்க மாட்டாங்க.
ஆனா AIR CEL, AIR TEL, HUTCH இவங்களுக்கெல்லாம் என்ன கஷ்டமோ தெரியல, ஒரு
மெசேஜுக்கு அஞ்சு பைசா வாங்கறாங்க.
கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா
எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?
திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.
டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.
"ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு"
"ஐந்து"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?"
"எட்டு"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு."
"ஜேக்"
என் நண்பன் என்னிடம் கேட்டான் காதலுக்கும் நட்புக்கும் என்ன் வித்தியாசம்.நான் சொன்னேன் காதலன்,காதலி என்றூ சொன்னால் உதடுகள் ஒட்டாது.
நட்பு,நண்பன்,நண்பேன்டா என்றூ சொல்லிபார் உதடுகள் கூட ஒட்டும் என்றூ சொன்னேன்.உடனே அவன் என்னை மெரீனா கடற்கரைக்கு அழைத்து
சென்றான் ,அங்கே சென்றூ பார்த்தால் காதலனும் காதலியும் இனைந்தால் உதடு ஒட்டும் என்றூ சொல்கிறான். என்னிடம் எந்த பதிலும் இல்லை.
உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?
உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?ரொம்ப சிம்பிள்.
உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு டைப் பண்ணி, ஒரு இடைவெளி விட்டு, உங்க பேர டைப் பண்ணுங்க.
அப்புறமா ஒரு இடைவெளி விட்டுட்டு,
உங்களோட காதலன் அல்லது காதலி பேர டைப் பண்ணுங்க.
இந்த S M S யாருக்கு அனுப்பனும் தெரியணுமா?
கொஞ்சம் கீழ வாங்க............
*
*
*
*
வேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கு அனுப்பனும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு…. எப்படி?
கடி தத்துவங்கள்
மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?
சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில்இருந்துசனிக்கிழமை வரை..?
சைக்கிள்ல போனா ‘சைக்கிளி’ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?
டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது
டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.
போலீஸ்: நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?
ஒருவர்: ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
போலீஸ்: அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!
ஒருத்தர் பஸ்ஸில் பயணப்படும் போது திடீரென் ஓட்டுனர் பிரேக் போட அவர் முன்னால்
நின்ற பெண்மீது இடித்துவிட்டார்.. அவர் சுதாகரித்துக்கொண்டு எழும்முன்...
பெண் : ஏய், நீ என்னப்பண்ணிக்கிட்டிருக்க..?????
நம்மாளு: பஞ்சாப் யூனிவர்ஸிட்டில் பைனல் இயர் B.E.
ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..
சூரியன் எப்எம் ல வேலைக்குசேர்ந்தது தப்பா போச்சுபா..
ஏன்...
சம்பளம் கேட்டா , கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்கிறான்
பிச்சக்காரங்க கூட அஞ்சு பைசா வாங்க மாட்டாங்க.
ஆனா AIR CEL, AIR TEL, HUTCH இவங்களுக்கெல்லாம் என்ன கஷ்டமோ தெரியல, ஒரு
மெசேஜுக்கு அஞ்சு பைசா வாங்கறாங்க.
கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா
எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?
திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.
டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.
Subscribe to:
Posts (Atom)