Saturday, January 25, 2014

enninaivugalin e pathivu my daughter's family

enninaivugalin e pathivu story

தன் வாழ்க்கை   மட்டும்  தான்  துன்பம்   நிறைந்து   இருப்பதாக  சமையல்கார  தந்தையிடம்   குறைபட்டு   கொண்டாள்  மகள் .

...
அதற்கு  சமையல்கார  தந்தை   ஒரு பானையில்  கேரட்டும்   தண்ணிரும் ,இரண்டாவது   பானையில்  முட்டையும்  தண்ணீ ரும்,   மூன்ரவது  பானையில்  காப்பி கொட்டையும்  தண்ணீ ரும் போட்டு  கொதிக்க  வைத்தார் ...

தண்ணீர்  கொதித்தவுடன்  கேரட்  பலமிழந்து  மிருதுவாகி  விட்டது .....

தண்ணீர்    கொதித்தவுடன்  முட்டை  உள்ளே   திரவ  வடிவத்தில்  உடைந்து  விடுவது போல  இருந்த  பகுதி  கெட்டியாகி  விட்டது ....

தண்ணீர்    கொதித்தவுடன்   காப்பிக்கொட்டை  தண்ணீரை யே   மாற்றி  சுவையாகி   விட்டது .....


பார்   மகளே  நீயும்  காப்பிக்கொட்டை  போல   உனக்கு  துன்பம்  வரும்  போது   உன்னையும்  உன்னை  சுற்றி  இருக்கும்  சூழ் நிலையையும்  மேலானவையாக   ஆக்கி கொள்ள வேண்டும் ...

என்று  அறிவுரை   கூ றினார் ...... 



enninaivugalin e-pathivu thathuvam

உண்பதற்கு                              முன்        உழை
பேசுவதற்கு                             முன்       கவனி
செலவுசெய்வதற்கு              முன்        சம்பாதி
எழுதுவதற்கு                          முன்        யோசி
இறப்பதற்கு                              முன்        வாழ் ........

enninaivugalin e pathivu valkai thathuvam

அனுபவங்களுக்கு உடம்பு மனது இரண்டையும் உட்படுத்து....தன்னை திரும்பி போடுவதன் மூலம் தான் பூமி சூரியனிடம் அனுபவம் பெறுகிறது....சரி தானே...


அம்மா சொன்னதெல்லாம் சரியாகத் தான் இருக்கு என எண்ணத் தொடங்கும் சமயத்தில் ,நீ சொல்வதெல்லாம் தவறு என சொல்ல மகள் ரெடியாக இருக்கிறாள் ....இது தான் உண்மை


Photo




இறக்கத்   தான்  பிறந்தோம்    அது  வரை ,இரக்கத்தோடு   இருப்போம் ....

enninaivugalin e pathivu myblogs add

Friday, January 24, 2014

enninaivugalin e pathivu patikka veentiyathu

1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது - புகழ், பழி
3. போனால் வராதது - மானம்,உயிர்
4. தானாக வருவது - இளமை, முதுமை
5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,
6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்
8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்
9. அழிவை தருவது - பொறாமை, கோபம்
10. எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு
11. கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்
12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது
13. வருவதும் போவதும் - இன்பம், துன்பம்
14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று
15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு
17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
18. மிகக் கொடிய நோய் - பேராசை
19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
20. கீழ்தரமான விஷயம் - பொறாமை
21. நம்பக்கூடாதது - வதந்தி
22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
23. செய்யக்கூடாதது - தவறுகள்
24. செய்ய வேண்டியது - உதவி
25. விலக்க வேண்டியது - விவாதம்
26. உயர்வுக்கு வழி - உழைப்பு
27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு

enninaivugalin e pathivu image super

Photo: சாதரணமா இருக்கிற கத்திரிக்கோலை ஒரு கலைஞன் என்னமாதிரி பாவிச்சிருக்கான் என்னு பாருங்க..

உருவாக்கம் என்பது ஒரு கலை..

enninaivugalin e pathivu joke

சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது,

எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.

என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....? .... நெஞ்சம் பதறியது.

என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ... நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி, பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.

ஈரமான முயலைப் பார்த்ததும்

"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்' என மனதிற்குள் நினைத்து என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.

நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்,

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.

எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.

எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,

"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,

ப‌க்கத்து வீட்டுக்காரர்,

"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டது."என்றார்

"அப்படியா...!!!??"

"ஆமாம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, எவனோ ஒரு லூசுப்பய ... நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்"

enninaivugalin e pathivy space ship two


Wednesday, January 22, 2014

enninaivugalin e-pathivu kurattaiyai kuraika

குறட்டையை குறைக்க:
 
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
 
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.
 
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.
 
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். 



குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.
 
அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.


 காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.
 
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.
 
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார்  சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர்  டாக்டர் ரவிராமலிங்கம்.