சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது,
எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....? .... நெஞ்சம் பதறியது.
என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ... நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி, பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்' என மனதிற்குள் நினைத்து என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.
நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
பக்கத்து வீட்டுக்காரர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டது."என்றார்
"அப்படியா...!!!??"
"ஆமாம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, எவனோ ஒரு லூசுப்பய ... நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்"

No comments:
Post a Comment