Tuesday, April 24, 2012

en ninaivugalin e -pathivu -cell phone--safety

செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள். காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.
தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.
செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

en ninaivugalin e -pathivu --summer tips

உஷ்… உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதேஇப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்விஇதோகோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்
கோடைகாலத்தில்அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன்சமையல்வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.
முதலில்உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள்மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்புசிவப்பு மற்றும், “பளிச்வண்ணங்கள்சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால்உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல்நீர்த்தாரைநீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.
*வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும்பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர்குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம்தலைவலிஉடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.
குடிநீரில்சீரகம் கலந்து கொதிக்க வைத்துஆறியபின்அருந்தலாம்.
கோடையின் வெப்பத்தை குறைக்கமோரே அருமருந்தாகும். மதிய வேளையில்மோரில் நீர் கலந்துஅதனுடன் சீரகம்கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.
கோடை காலத்தில்டிபன் அதாவது தோசைபூரிபரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும்கேழ்வரகுகம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால்,உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
மதிய உணவில் அதிகக் காரம்புளி சேர்க்காமல்நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
பறங்கிக்காய்பூசணிக்காய்சுரைக்காய்வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும்வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.
மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரைபகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
வெயில் தாக்காமலிருக்கதலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போதுமுகம்கைகால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால்சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
கோடை வெப்பத்தில்அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,”ஏசி’ அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல்அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.
சர்க்கரை நோயாளிகள்கோடை காலத்தில்அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.
வெளியே செல்லும் போதுகறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.

en ninaivugalin e -pathivu --elango super man

சிறு வயது முதல் தமிழ் மீடியத்திலேயே படித்து வந்த அந்த இளைஞருக்கு(இளங்கோ) ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவராக வந்தார். அடுத்து பிளஸ் 2விலும் நல்ல மதிப்பெண்கள் (மாவட்டத்தில் முதல்) எடுத்ததை அடுத்து, லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தார்.
ஆங்கிலம் பேசவேண்டும் என்கிற தணியாத ஆவல் காரணமாக, ஆங்கிலத்தில் பேசும் மாணவர்களுடன் தமது நட்பை – அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ – இவர் வளர்த்துக்கொண்டார். பின்னர், கல்லூரியில் நடைபெறும் இலக்கியம் தொடர்பாக நிகழ்ச்சிகள், நாடகங்கள், அனைத்திலும் தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்வார். அவருக்கு இருந்ததெல்லாம் ஒரே ஒரு லட்சியம் தான். ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெறவேண்டும். அதற்காக எந்த அவமானத்தையும் அவமதிப்பையும் இவர் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்.

இதெல்லாம் ஒரு விஷயமா? இதென்ன பிரமாதம்? அப்படின்னு தானே கேக்குறீங்க. ம்….. சொல்ல மறந்துட்டேனே அந்த இளைஞருக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. அவர் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி.

ராபர்ட்  அந்த காலேஜ்ல ராகிங் ஸ்பெஷலிஸ்ட்.

ஒரு நாள்  இளங்கோ கண்ணுல மாட்டுனாரு. “ஏய்…இங்கே வா…”ன்னு கூப்பிட்டான்.
“நான் இங்கே இருக்கேன். கரெக்டா பார்த்து வா” – அதுலயும் ஒரு நக்கல்.
நம்மாளு போனாரு.
“Tell me senior”
“ஏய்… என்ன இங்கிலிஷ்ல பேசுறே? தமிழ் தெரியாதா உனக்கு?”
“Yes… i know senior”
“அப்போ தமிழ்ல பேசு”
“No senior. I am speaking in English because you know English and understand it senior. Isn’t it?”
“என்ன மறுபடியும் இங்கிலிஷ்ல பேசுறே… தமிழ் தெரியும்ல? ஒழுங்கா தமிழ்லயே பேசு…”

With Mr Elango4r  “வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு… வாழவே பிடிக்கலைன்னு சதா புலம்பிகிட்டே இருப்பவரா நீங்க?” ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு

“சரி.. நீ இங்கிலீஷ்ல பெரிய எக்ஸ்பர்ட் தான். பெரிய ப்ரொஃபசர் தான்… ஒத்துக்குறேன். நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு”
“உங்க அம்மாவை நீ பார்த்திருக்கியா?”
“………..” (மௌனம்)
“உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த உங்கம்மா எப்படியிருப்பாங்க தெரியுமா?”
“………..” (மௌனம்)
“உன் அப்பா எப்படியிருப்பார்?”
“………..” (மௌனம்)
“இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரம் இதெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா?”
“………..” (மௌனம்)
“ரெயின்போ, மலை, அருவி, நதி, போன்ற இயற்கை காட்சிகள் எப்படியிருக்கும்னு தெரியுமா?”
“………..” (மௌனம்)
“சரி… அதையெல்லாம் விடு. நீ எப்படியிருப்பேன்னு உனக்கு தெரியுமா? உன் முகம் எப்படியிருக்குன்னு உனக்கு தெரியுமா?”
“………..” (மௌனம்)
“தெரியாதில்லே… உன் முகமே உனக்கு எப்படியிருக்கும்னு தெரியாது. நீ என்ன இங்க்லீஷ்ல டிகிரி படிச்சு, இங்கிலீஷ்ல பேசி கிழிக்கப்போறே? நீ வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போறே?


நம்ம ஹீரோ மௌனத்தை உடைக்கிறார். ராபர்ட்டிடம்…”முதல்ல நீ கையை கொடு… ஜஸ்ட் வான்ட் டு ஷேக் மை ஹாண்ட்ஸ் வித் யு….”
“டேய்… முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… சமாளிக்காத”
“நோ… நோ… நீ கையை கொடேன். அப்புறம் சொல்றேன்”
வேண்ட வெறுப்பாக ராபர்ட் கைகளை நீட்ட, அழுத்தமாக அவரது கைகளை பற்றி குலுக்குகிறார் நம்ம ஹீரோ.
பின் டிராப் சைலன்ட்டாக இவர் சொல்லப்போவதை மொத்த கூட்டமும் பார்த்து கொண்டிருக்கிறது.
“முதல்ல உனக்கு நான் நன்றி சொல்லனும்னு ஆசைப்படுறேன். தேங்க் யூ வெரி மச். எனக்கு இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நீ சொன்ன மாதிரி தற்கொலை எண்ணம் வந்திருக்கு. ‘பார்வையில்லாம எதுக்கு இந்த உலகத்துல வாழனும்? பேசாம செத்துடலாம்’னு யோசிச்சிருக்கேன். ஆனா, உன்னை பார்த்ததும், இந்த நிமிஷத்துல இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். நான் வாழ்ந்து காட்டுறேன். என்னால என்ன முடியும்னு சாதிச்சு காட்டுறேன். உன்னை மாதிரி மிருகங்களே வெட்கமில்லாம இந்த உலகத்துல நடமாடும்போது நான் எதுக்கு சாகனும்?”


அன்றைக்கு நம்ம ஹீரோவின் மனதில் கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய லட்சியத் தீ…. இன்று வரை எரிந்துகொண்டிருக்கிறது.

நம்ம ஹீரோ லயோலா கல்லூரியில் பி.ஏ. படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்றபின்பு, அங்கேயே முதுகலைப் பட்டப் (எம்.ஏ.) படிப்பில் சேர்ந்தார். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. பின்னர் சென்னை பல்கலைகழகத்தில் ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு M.Phil முடித்தார். பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் தான் பயின்ற சென்னை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக பணி.


பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் ரேமண்ட்ஸ் ஷர்டிங் & ஷூட்டிங் விளம்பரங்களில் ஆங்கிலத்தில் கணீரென்று ஒலிக்கும் குரல் (Prince Jewellery Panagal Park, Raymonds the Complete Man) இவருடையது தான்!



en ninaivugalin e -pathivu privacy---confitense

வெற்றி பெறுபவர்கள் - வித்தியாசமான வேலைகளை செய்வதில்லை. செய்யும் வேலைகளை வித்தியாசமாக செய்கிறார்கள். செய்யும் வேலைகளை உண்மையிலேயே நல்ல முறையில் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வேலை சந்தோசம் அளிப்பதாக இருக்க வேண்டும். மனது மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நீச்சல் வீரனாக இருந்தாலும், நீச்சல் அடிக்கும் குளத்தில் முழங்காலுக்கும் கீழ் தண்ணீர் இருந்தால் எப்படி நீந்துவது? அந்த தண்ணீர் போலத்தான் மனதும். நாம என்னதான் திறமையுடன் இருந்தாலும், மனதுக்கு உவகை அளிக்கக் கூடிய வகையில் ஒருவர் வேலை பார்க்கும் சூழல் இல்லையெனில், அவருக்குத் திறமை இருந்தும் என்ன பயன் இருக்க கூடும்?

ஒரு சிலர் நிலைமை படு மோசம்..... சாவி கொடுத்த பொம்மை கதை தான்.

ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு முறை நோயாளி ஒருவருக்கு  டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார். நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.
“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”
“ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”
“போதும் நிறுத்திடலாம். அந்த ஆள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”
 படிச்சதும் படக்குன்னு சிரிப்பு வருதா? கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா நாமளே கூட, ஒரு கால கட்டத்துக்கு அப்புறம் இப்படித்தான் வேலை பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று நாம் கூறுபவர்கள் நாம் செய்யும் ஒரு சில வேலையை பார்க்கும்போது, இந்த நர்சைப் போலத் தான் நம்மை பார்க்கின்றனர்.
ஏன், எதுக்குன்னே தெரியாம , நாள் ஆக ஆக, அப்படியே மனசு ஒரு வேலைக்கு பழக்கமாகி , அங்கேயே செட் ஆகிடும். பழகும்போது ரொம்ப ஆர்வமா இருக்கும் ஒரு விஷயம், பழகப் பழக - அதில் எக்ஸ்பெர்ட் ஆகி, அதன் பிறகு இறங்கு முகம் ஆரம்பிக்கும். என்ன தான் நாம் ஆர்வமாக, பொறுப்பாக ஒரு வேலையைப் பார்த்தாலும், இதுதான் அந்த வேலையின் உச்சம் என்று யாரோ ஒருவர் கூறி விட்டாலோ, அல்லது நமது மனது ஒப்புக்கொண்டு விட்டாலோ, அதைத் தாண்டி யோசிக்க மாட்டோம்....

I am the champion. I can Win - இதை மட்டுமே திரும்ப திரும்ப நினையுங்கள். இந்த இரு வாக்கியங்கள், மனதுக்கு புது பலம் கொடுக்கும். சோர்வடையும் நிலைமையில் , இந்த வாக்கியங்கள் கொடுக்கும் சக்தி அளவிட முடியாதது.

en ninaivugalin e -pathivu --thathuvangal

மூதறிஞர் ராஜாஜி 

* குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குளத்திற்குப் போனால், தெளிந்த நீரை மேலாக எடுத்துவருவது தான் சிறந்தது. அதை விடுத்து, குளத்துக்குள் இறங்கி கலக்கினால் சேறு மேலே வந்து விடும். அதுபோல பக்தியிலும் மிதமான நிலையே போதுமானது.

* மிதமிஞ்சிய சமய அறிவு, மற்றவருடன் வாதங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதால் மூளையைக் குழப்பிக் கொள்ள நேரிடும். நம்முடைய அறிவு சிற்றறிவு. கடவுளோ பேரறிவாளராக இருக்கிறார். அதனால், நம்முடைய அறிவைக் கொண்டு அவரை அளக்க முடியாது.

* தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் போன்று கடவுள் மறைந்து விளங்குகிறார். அவரைக் காண வேண்டுமென்று விரும்பினால் உள்ளத்தைப் பக்தியால் கடைய வேண்டும். தத்துவ ஞானத்தை வளர்த்துக் கொண்டால் புலமை தான் வளருமே ஒழிய, ஞானம் உண்டாகாது.

* பக்தியில் உறுதியாக நில்லுங்கள். எளியதியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மனம் ஒன்றி இறைவனை வழிபடுங்கள். கடவுளின் பூரண அருளை நிச்சயம் பெற்று மகிழ்வீர்கள்.

ரமண மகரிஷி :

* அருளின் உயர்ந்தவடிவம் மவுனமாக இருப்பதாகும். வலிமையற்ற மனம் படைத்தவர்களுக்கு மவுனமாக இருக்க முடியாது.

* நான் யார் என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே.

* குப்பையை ஆராய்வதால் பயன் விளைவதில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்வதாலும் பயன் இருக்கப் போவதில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள்.

* இறைவன் நமக்குள் இருக்கிறான் என்று தெளிவாக உணர்ந்தவர்கள் தவறு செய்வதில்லை. செய்தாலும் வருந்தி தங்களைத் திருத்திக் கொள்வார்கள்.

* அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டான். "நான்' "எனது' என்று எண்ணிக்கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தகாலத்திலும் ஆண்டவனை அடையவே முடியாது.

* ரயில் ஓடும் போது சுமையை நாம் தூக்க வேண்டியதில்லை. அதுபோல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்தபின் உலகியல் பிரச்னைகள் நம்மைத் தீண்டுவதில்லை.

* அரைகுறையாக ஆண்டவனை நம்புவதால் ஒருபயனும் இல்லை. முழுமையான சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.


en ninaivugalin e -pathivu -amazing photo


en ninaivugalin e -pathivu -amazing images