Friday, January 22, 2016

enninaivugalin e pathivu--new geetha upathesam

எது  சேர்  செய்யப் பட்டதோ  அது   நன்றாகவே  சேர்செய்யப் பட்டது,
எது  சேர்  செய்யப் படுகிறதோ  அது   நன்றாகவே    சேர்செய்யப்  படுகிறது,
எது  சேர்  செய்யப்  பட இருக்கிறதோ  அதுவும்  நன்றாகவே  சேர்செய்யப்  படும்..

உன்னுடையது  எதை இழந்தாய் ?
எதற்காக நீ  அழுகிறாய்?
எதை நீயாக (சொந்தமாக) பதிவு செய்தாய் ,அதை நீ  இழப்பதற்கு
எதை நீயாக (சொந்தமாக) பதிவு செய்தாய் ,அதை நீ  வீணாகுவதற்கு
எந்த பதிவை நீ எடுத்துக் கொண்டாயோ ,அது  இங்கிருந்து எடுக்கப் பட்டது ....
எந்த  பதிவை  நீ  கொடுத்தாயோ  அது  இங்கேயே  கொடுக்கப் படுகிறது .

எந்த பதிவு  இன்று  உன்னுடையதோ  அது நாளை  மற்றொருவருடையதாகும் .
மற்றொரு நாள்  அது  வேறொருவருடையதாகும் ..
இந்த  மாற்றம்  உலக  (பேஸ்  புக்) நியதியாகும் ...

Thursday, January 21, 2016

enninaivugalin e pathivu--keyboard lessons.

Piano Notes:
The Pianist's Most Necessary Note Repertoire

Notice that many notes (in this case, 7 notes) can be written and played in either bass clef or treble clef. People tend to be confused about this. Hopefully, this illustration helps alleviate any such confusion.

Bass Clef


Treble Clef


Major scales: C-Major

F Major

B-flat Major

E-flat Major

A-flat Major

D-flat Major

G-flat Major

C-flat Major

Key of F (sing along to establish proper rhythm): 

Mary had a little lamb,
His fleece was white as snow,
And everywhere that Mary went,
The lamb was sure to go.

He followed her to school one day,
Which was against the rule,
It made the children laugh and play
To see a lamb at school.

And so the teacher turned it out,
But still it lingered near,
And waited patiently about,
Till Mary did appear.

"Why does the lamb love Mary so?"
The eager children cry.
"Why, Mary loves the lamb, you know."
The teacher did reply.[8]

"Twinkle" in key of C (sing along to establish proper rhythm):

Wednesday, January 20, 2016

What key is my song in? Find the key of a song. Takes only minutes to le...

enninaivugalin e pathivu--உங்கள் வாழ்வு வளம் பெற

உங்கள்  வாழ்வு  வளம் பெற

1.நானே  பெரியவன்  நானே சிறந்தவன்  என்ற அகந்தையை விடுங்கள் .

2.அர்த்தம் இல்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

3.எந்த விஷயத்தையும் பிரட்சனைகளையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள் .

4.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக  வேண்டும் என உணருங்கள்.

5.நீங்கள்  சொன்னதே  சரி  செய்ததே சரி என வாதாடாதீர்கள் .குறுகிய மனப் பான்மையை  விட்டொழியுங்கள் ..

6. உண்மை எது பொய் எது என்று  விசாரிக்காமல் இங்கே  கேட்டதை அங்கே ,அங்கே கேட்டதை இங்கே  சொல்வதை விடுங்கள் ..

7.மற்றவர்களை விட உங்களை எப்பொழுதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்

8.தேவைக்கு  அதிகமாய்  ஆசை படாதீர்கள் .

9.கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

10.உங்கள் கருத்துக்களில்  உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் .

11. மற்றவர் கருத்துக் களை  செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் .

12.எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்  உண்டோ  இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்காதிர்கள் .

13.மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இதமாக  இனிய சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

14.அவ்வபோது  நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள் .

15. பிரட்சனை எற்படும் போது அடுத்தவர் இறங்கி  வர வேண்டும்  என காத்திருக்காமல் நீங்களே  பேச்சை துவக்க முன் வாருங்கள்.

Sunday, January 17, 2016

enninaivugalin e pathivu. kavithai about SBDC

ஒரு நீர் குமிழி உடைவதை  விட
குறைந்த  நேரத்திலேயே
மனதை   சிதைப்பவரிடையே,
இயந்திர  கதியில்  வாழ்வோரை
இயல்பு   கதிக்கு  கொண்டு  வந்து


தாய்,  தந்தையாக , நாங்கள்  இருக்கிறோம் ,
வயது   முதிர்ந்தோரே  வாருங்கள்
பிள்ளைகளாக    நாங்கள்   இருக்கிறோம் ,.
என    இறுமாப்போடு   கூறுவது    மட்டுமன்றி
ஈடுபாடோடு      செயல்படும்


நீங்கள்        வாழ்க    வளமுடன் ............


நாற்பது  வரையிலே  ஒலியெழுப்பும்  வீணைகள்
நாற்பதுக்கு   மேலே தான்  எதிரொலியை
கேட்கத் தொடங்குகின்றன....
இதுவரை  எதிரொலியை  அலட்சியப்  படுத்தக் கூடிய
இரத்தம் இருந்தது .......இப்போது  இரத்தத்தை விட எதிரொலி
சக்தி வாய்ந்ததாக    காட்சியளிக்கும் ..
எதிரொலியை  எதிர்கொள்ள  தடுமாறும் .....


இத் தருணத்தில்  நாங்கள்  இருக்கிறோம் ..
வாருங்கள்  கூடி செயல் படுவோம்,மகிழ்வோம் , ...என அழைக்கும்


 நீங்கள்        வாழ்க    வளமுடன் .......


இந்த  வாய்ப்பை  ஏற்படுத்திய
இறைவனுக்கு  நன்றி   நன்றி    நன்றி ...

நாங்கள்   இன்புற
 நீங்கள்        வாழ்க    வளமுடன் .......



                                                                                                           வே.முத்துலஷ்மி ..