Thursday, December 9, 2021

Enninaivugalin e pathivu

 Pls read tis,

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.


நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.


நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.


மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.


போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். "உடனே காய்ச்சிடுங்க... இல்லேன்னா கெட்டுடும்" என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்.


'... நீங்க ?...'  என இழுத்தேன்.


பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.


'நன்றி.. என்ன பண்றீங்க.. ' என முதன் முறையாக விசாரித்தேன். கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.


மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.


சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.


வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.


தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.


மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.


புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.


அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்...".


நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.


ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,


"கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".


பிள்ளைகள் சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."


அது மழையல்ல,


பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !


இந்த ஒரு பதிவை மட்டும் எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு செய்து விட்டேன்.

Enninaivugalin e pathivu

 தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணை  பெற்ற புதிய கமாண்டிங் ஆபிசர் பதவியேற்றுக் கொண்டார். 


மறுநாள் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பென்ஞ்ச் அருகில் இரு வீரர்கள் காவல் இருந்ததைப் பார்த்தார்.


"ஏன் இந்த பென்ஞ்சுக்கு காவல் நிற்கிறீர்கள்? இந்த பென்ஞ்ச்சிற்கு அப்படி என்ன சிறப்பு?" என்று கேட்டார்.


"பழைய கமாண்டிங் ஆபிசர் சொன்னதால் காவல் காக்கிறோம்" என்றனர் வீரர்கள் .


பழைய கமாண்டிங் ஆபிசரின் நம்பரைத் தேடிப்பிடித்து அவருக்குப் போன் போட்டு  விபரம் கேட்டார் புதிய க.ஆபிசர்.


அவர்,"எனக்குத் தெரியாது; எனக்கு முன்பு பணியாற்றிய அதிகாரிகள் இருந்த போதும் இவ்வாறு காவல் இருந்தார்கள்" என்று கூறினார்.


இதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் என உறுதி பூண்ட ஆபிசர்,


நூறு வயதான பழைய கமாண்டிங் ஆபிசரைத் தேடிக் கண்டு பிடித்து இந்த விசயத்தைக் கூறி விபரம் கேட்டார்.


அவர்," பெயிண்ட் அடித்த பென்ஞ்ச்சில் யாரும் உட்கார்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னேன்; இன்னுமா காயவில்லை?" என்றார்.


இன்றும் கூட நாமும் இப்படித்தான் சிலவிசயங்களில் சில நடைமுறைகளை விடாமல் பின்பற்றி வருகிறோம். சிந்திப்பதற்கு சோம்பல் படுகிறோம்.                   ---------

Monday, December 6, 2021

Enninaivugalin e pathivu

 உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை.....


கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம் !" என்று கூறியது.

புலியோ கோபமடைந்து, "இல்லை, புல்லின் நிறம் பச்சை !"  என்று கூறியது.

விவாதம் சூடு பிடித்தது, 

இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர்,  எனவே 

அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.

சிங்கம் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, 

"அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா ?" என்று கேட்டது.

சிங்கமோ உண்மை, புல் நீல நிறமானது" என பதிலளித்தது.  

கழுதை விரைந்து தொடர்ந்தது, புலி என்னுடன் உடன்படவில்லை••• முரண்படுகிறது•• 

அரசே•••!என்னை எரிச்சலூட்டுகிறது, 

தயவுசெய்து அவரை தண்டியுங்கள்."  என்றும் கூறியது.

அப்போது அரசர், புலியாகிய நீ இன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்கு யாருடனும் பேசவேக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும்••• இதுதான் உனக்குரிய தண்டனை" என்று அறிவித்தது.

கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, "புல் நீல நிறமானது !"  , "புல் நீல நிறமானது !"  என்று கூறிக்

கொண்டே அங்கிருந்து அகன்றது. 

புலி அதனது தண்டனையை ஏற்றுக் கொண்டது, 

ஆனால் அது சிங்கத்திடம் சென்று "அரசே, ஏன் என்னைத் தண்டித்தீர்கள் ? 

புல்லின் நிறம் பச்சை நிறம் தானே." என்றது.

சிங்கம், "நீ சொல்வது மிகவும் சரி தான், புல்லின் நிறம் பச்சை நிறம் தான்."  புலி, அப்படியானால் 

ஏன் ? என்னைத் தண்டித்தீர்கள் ?". சிங்கம் 

பதிலளித்தது, "புல் நீலமா 

அல்லது பச்சை நிறமா ?" என்ற கேள்விக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான ஓர் கம்பீர உயிரினம், ஏன் ? கழுதையுடன் விவாதித்து பொன்னான நேரத்தை வீணாக்கினாய் ? அதுவே எனக்கு பெருங்கவலையை உண்டாக்கியது. அதற்கே இந்தத் தண்டனை !”

முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது தான், மிக மோசமான நேர விரயமாகும். 

அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி சிறிதளவும் கவலையேப்படாதவர்கள், 

ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம், அவர்களது பேச்சு வாத-விவாதங்களில் வெற்றி மட்டுமே.  

ஆகவே அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள் ... 

நாம் அவர்களுக்கு எத்தனை ஆதாரப் பூர்வமான சான்றுகளை வழங்கினாலும், அவர்கள்

புரிந்து கொள்ளும் திறனே இல்லாதவர்களே. 

அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும், கண் மூடித்தனமாகவேத்தான் இருப்பார்கள்.  அவர்கள் பக்கம் பிழையாகவே இருந்தாலும், அவர்களுக்கு தம்மை சரியாக இருப்பதாகவே காட்டிக் கொள்ள வேண்டும்.

அறியாமை அலறும் போது, ​​நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும்.  

உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை

Enninaivugalin e pathivu

 வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும்......


எமதர்மராஜன்   ஒரு குருவியை  வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.   அடடா...  இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த  கருடபகவான்,   உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு  பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.  அந்த பொந்தில் வசித்து வந்த  ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில்  அந்த குருவியை விழுங்கிவிட்டது.   குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த  குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து கருடபகவான்,   குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.  “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"  நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம்,   "அந்த குருவி சில நொடிகளில்  பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்  வசித்த ஒரு பாம்பின் வாயால்  இறக்க நேரிடும்" என எழுதப்பட்டிருந்தது;   அது எப்படி நிகழப் போகிறது?  என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.   அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.  *_"வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!"_*

Enninaivugalin e pathivu

 தெளிவு

   நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற உயர்நிலை IAS அதிகாரி.

ஆரவாரம் மிக்க பணியில் இருந்து ஓய்வுபெற்றபின்

தனது மகன் பெங்களூரில்

வாங்கியிருந்த டீலக்ஸ் பிளாட்டில் குடியேறினார்.

அது சுமார் 2000 குடியிருப்புக்கள் கொண்ட மிகப்பெரிய ரிசிடென்ஷியல் காம்பளக்ஸ்.

அதிகாரதோரணையில் மிதந்து பழக்கப்பட்ட அவருக்கு இந்த ஓய்வான

வாழ்க்கை நிறையவே சலிப்பையும் வெறுப்பையும் தந்தது.

செட்டிலாகி சில நாட்கள் ஆனபின் ஒருநாள் காலாற குடியிருப்பின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நீண்ட

நடைபாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

இவரை யாருக்கும் தெரியாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை.

யாரிடமும் பேசாது விரக்தியோடு சில நிமிடம் நடந்துவிட்டு அங்குள்ள பூங்காவில் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தார்.

பெஞ்சில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட ஒருமுதியவரும் அமர்ந்திருந்தார்.

அரைக்கை கதர்ச்சட்டை

கதர்வேஷ்டியுடன் ஒரு காங்கிரஸ் தியாகி போல் இருந்தார்.

சிறிதுநேரம் சென்றது.

பெரியவர்

"நீங்கள் புதிசா குடி வந்திருக்கீங்களா" என

வினவினார்.

அவ்வளவு தான்.

மடைதிறந்த வெள்ளம் போல நாராயணமூர்த்தி தனது சுயபுராணத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

  தான் தனது 25 ஆம் வயதில் IAS தேர்வில் சிறப்பாகத் தேறியது

 35 ஆண்டு காலம் IAS அதிகாரியாக பல அரசுத் துறைகளில் பணியாற்றியது

 தான் பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள்

  சிறப்புச் செயலராக ஓய்வு பெற்றது

  தனது மகன்,மகள் இருவரும்  ஐ ஐ டி யில் படித்து பின்

அமெரிக்காவில் செட்டில் ஆனது

 அவரது நாலு பேரக்குழந்தைகள் என ஒன்று விடாமல் சுமார் 

அரை மணி நேரம் தனது

பெருமைகளை சற்று கர்வத்தோடு விரிவாகக்

கூறி போரடித்து விட்டார்.

 பெரியவர் அமைதி காத்தார்.

வியந்து பாராட்டுவார் என எதிர்பார்த்த நாராயணமூர்த்தி ஏமாற்றமடைந்தார்.

  பின்னர் "இங்கு யாரும்

ஒருத்தர் கூடவும் சரியா பேசமாட்டேங்கறாளே " என வெகுவாக ஆதங்கப்பட்டார்.

"நீங்க பேசினா அவங்களும் பேசுவாங்க"  என பெரியவர் ஆரம்பித்தார்.

  அங்கு சற்று தள்ளி மற்றொரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த தன்னைப்போன்ற ஒரு முதியவரைக்காட்டி

"அவன் பெயர் ஆறுமுகம் பிள்ளை. என் பால்ய நண்பன். கிளாஸ்மேட்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

இங்குள்ள தமிழ்க் குழந்தைகள்

ஆங்கிலமும் இந்தியும் சரளமா எழுதும். பேசும்.

ஆனா தமிழ் பேசவரும்.

எழுத படிக்கத் தெரியாது.

அந்தக் குழந்தைகளுக்குன்னு பிரத்யேகமாக ஒரு தமிழ் 

ஸ்கூல் நடத்தறான் அவன்.

இங்கு அவனை எல்லாருமே தமிழ்த் தாத்தான்னு தான் கூப்பிடுவாங்க.

அவனை இங்கு தெரியாத ஆளே கிடையாது" ன்னு தூரத்தில் இருந்தபடியே

அறிமுகம் செய்தார்.

" அதோ, சிவப்பா உயரமா இருக்கிறவர் தான் 

வாசுதேவன் நாயர் "என இன்னொருவரை அடையாளம் காட்டினார்.

அவர் ISRO விஞ்ஞானியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார்.

 அடுத்து  ஒருவரைக்காட்டி

" அவர் தான் ஸ்ரீதரமேனன். சவுத் சென்ட்ரல் ரெயில்வே

ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்"என அறிமுகம்

செய்தார்.

 அடுத்து ஆஜானுபாவனாய் இருந்த சர்தார்ஜியைக் காட்டி

"அவர் தான் உத்தம் சிங்.

 இந்திய ராணுவத்தில்

மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

பரம் வீர் சக்ரா விருதுபெற்றவர்" என அறிமுகம் செய்தார்.

கடைசியாக காக்கிபேண்ட்

நீல ஷர்ட் போட்டிருந்த ஒருவரைக்காட்டி

"அவர் தான் கலியமூர்த்தி.

BHEL ல் போர்மேனாய் இருந்து ஓய்வுபெற்றவர்.

இந்தக்குடியிருப்பின் முதுகெலும்பே அவர் தான்.

எங்களது கௌரவ

Facility Manager.

எங்களது பிளம்பிங்

எலக்டிரிக் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மகான்." என 

அறிமுகம் செய்தார்.

 மேலும் கூறினார்.

"இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள்.

பொதுவான விஷயங்களைப் பேசி மகிழ்வார்.

யாரும் தங்களது கடந்த கால பெருமைகளை அசை போடுவதில்லை"

 மேலும் என்னையும் ஆறுமுகத்தையும் தந்தை போல் பாவித்து மரியாதை செலுத்துவர் என விரிவாக எடுத்துக்

கூறினார்.

"தங்களைப் பற்றி ஏதும்

சொல்லவில்லையே" என

நாராயணமூர்த்தி வினவினார்.

 பெரியவர் மெதுவாக

"நான் இருமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.

திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை.

இங்குள்ள குடியிருப்போர்

சங்கத்தின் கௌரவத் தலைவராகச் செயற்படுகிறேன்" என ஆர்ப்பாட்டமின்றி கூறினார்.

ஆடிப் போனார் நாராயணமூர்த்தி.

பெரியவர் மேலும் அறிவுரையாக சில விஷயங்களைக் கூறினார்.

"ஓய்வு பெற்ற நிலையில் 

உள்ள நாம் அனைவரும்

 Fused Bulb மாதிரிதான்.

 பல்புகளில் பலவகை உண்டு.

0 வாட் பல்பு விடிவிளக்காய் பயன் தரும்.

40 வாட் பல்பு குறைவான வெளிச்சம் தேவைப்படும் 

பகுதிகளில் பயன்படுத்தப்படும்.

டியூப் லைட் பரவலான வெளிச்சத்தைத் தரும்

ஹெட்லாம்ப் காரில் 

பயன்படும்.

ஹாலஜன் லாம்ப் உயர்நிலைகளில் பயன்படும்.

ஆனால் எல்லாம் வெளிச்சம் தரும்.

பயன்பாடுகள் தான் வெவ்வேறு.

ஆனால் பியூஸ் ஆன நிலையில் அவை மாற்றப்படும்.

அதுபோல நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் வெவ்வேறு பணிநிலைகளை மேற்கொண்டு அதற்குரிய 

பணிகளைச் செய்கிறோம்.

ஓய்வு என்பது Fused Bulb 

நிலை.

இதை உணர வேண்டும்.

நமக்கு மாற்றாக மற்றவர்

தயாராக இருக்கையில்

வழிவிட்டு ஒதுங்குகிறோம்.

ஆனால் உதிக்கும் சூரியனின் மதிப்பே தனி.

அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கும் நாம் மறையும் சூரியனை கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் இரண்டுமே சூரியன் தான்

ஔி தரும் காலைக் கதிரவன் நமது பணிக்காலம் போன்றது

சுறுசுறுப்பாய் இயங்குகிறோம்.

மாலை நேரத்தில் ஓய்வை நாடுகிறோம்.நமது பணிஓய்வும் மாலைக் கதிரவன் போன்றதே.

அமைதி நாடி ஓய்வுற்று இருக்கவேண்டிய மாலை 

வேளைகளில் காலை நேரக் கனவுகள் அர்த்தமற்றவை.

அவற்றை அசைபோடுவது பேதமையே.

மாலை நேர நிஜங்களில்

காலை நேரக் கனவுகள்

அர்த்தமற்றவை"என

போதனை செய்தார்.

மனத் தெளிவு பெற்றார்

நாராயண மூர்த்தி.தெளிவு

   நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற உயர்நிலை IAS அதிகாரி.

ஆரவாரம் மிக்க பணியில் இருந்து ஓய்வுபெற்றபின்

தனது மகன் பெங்களூரில்

வாங்கியிருந்த டீலக்ஸ் பிளாட்டில் குடியேறினார்.

அது சுமார் 2000 குடியிருப்புக்கள் கொண்ட மிகப்பெரிய ரிசிடென்ஷியல் காம்பளக்ஸ்.

அதிகாரதோரணையில் மிதந்து பழக்கப்பட்ட அவருக்கு இந்த ஓய்வான

வாழ்க்கை நிறையவே சலிப்பையும் வெறுப்பையும் தந்தது.

செட்டிலாகி சில நாட்கள் ஆனபின் ஒருநாள் காலாற குடியிருப்பின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நீண்ட

நடைபாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

இவரை யாருக்கும் தெரியாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை.

யாரிடமும் பேசாது விரக்தியோடு சில நிமிடம் நடந்துவிட்டு அங்குள்ள பூங்காவில் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தார்.

பெஞ்சில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட ஒருமுதியவரும் அமர்ந்திருந்தார்.

அரைக்கை கதர்ச்சட்டை

கதர்வேஷ்டியுடன் ஒரு காங்கிரஸ் தியாகி போல் இருந்தார்.

சிறிதுநேரம் சென்றது.

பெரியவர்

"நீங்கள் புதிசா குடி வந்திருக்கீங்களா" என

வினவினார்.

அவ்வளவு தான்.

மடைதிறந்த வெள்ளம் போல நாராயணமூர்த்தி தனது சுயபுராணத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

  தான் தனது 25 ஆம் வயதில் IAS தேர்வில் சிறப்பாகத் தேறியது

 35 ஆண்டு காலம் IAS அதிகாரியாக பல அரசுத் துறைகளில் பணியாற்றியது

 தான் பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள்

  சிறப்புச் செயலராக ஓய்வு பெற்றது

  தனது மகன்,மகள் இருவரும்  ஐ ஐ டி யில் படித்து பின்

அமெரிக்காவில் செட்டில் ஆனது

 அவரது நாலு பேரக்குழந்தைகள் என ஒன்று விடாமல் சுமார் 

அரை மணி நேரம் தனது

பெருமைகளை சற்று கர்வத்தோடு விரிவாகக்

கூறி போரடித்து விட்டார்.

 பெரியவர் அமைதி காத்தார்.

வியந்து பாராட்டுவார் என எதிர்பார்த்த நாராயணமூர்த்தி ஏமாற்றமடைந்தார்.

  பின்னர் "இங்கு யாரும்

ஒருத்தர் கூடவும் சரியா பேசமாட்டேங்கறாளே " என வெகுவாக ஆதங்கப்பட்டார்.

"நீங்க பேசினா அவங்களும் பேசுவாங்க"  என பெரியவர் ஆரம்பித்தார்.

  அங்கு சற்று தள்ளி மற்றொரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த தன்னைப்போன்ற ஒரு முதியவரைக்காட்டி

"அவன் பெயர் ஆறுமுகம் பிள்ளை. என் பால்ய நண்பன். கிளாஸ்மேட்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

இங்குள்ள தமிழ்க் குழந்தைகள்

ஆங்கிலமும் இந்தியும் சரளமா எழுதும். பேசும்.

ஆனா தமிழ் பேசவரும்.

எழுத படிக்கத் தெரியாது.

அந்தக் குழந்தைகளுக்குன்னு பிரத்யேகமாக ஒரு தமிழ் 

ஸ்கூல் நடத்தறான் அவன்.

இங்கு அவனை எல்லாருமே தமிழ்த் தாத்தான்னு தான் கூப்பிடுவாங்க.

அவனை இங்கு தெரியாத ஆளே கிடையாது" ன்னு தூரத்தில் இருந்தபடியே

அறிமுகம் செய்தார்.

" அதோ, சிவப்பா உயரமா இருக்கிறவர் தான் 

வாசுதேவன் நாயர் "என இன்னொருவரை அடையாளம் காட்டினார்.

அவர் ISRO விஞ்ஞானியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார்.

 அடுத்து  ஒருவரைக்காட்டி

" அவர் தான் ஸ்ரீதரமேனன். சவுத் சென்ட்ரல் ரெயில்வே

ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்"என அறிமுகம்

செய்தார்.

 அடுத்து ஆஜானுபாவனாய் இருந்த சர்தார்ஜியைக் காட்டி

"அவர் தான் உத்தம் சிங்.

 இந்திய ராணுவத்தில்

மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

பரம் வீர் சக்ரா விருதுபெற்றவர்" என அறிமுகம் செய்தார்.

கடைசியாக காக்கிபேண்ட்

நீல ஷர்ட் போட்டிருந்த ஒருவரைக்காட்டி

"அவர் தான் கலியமூர்த்தி.

BHEL ல் போர்மேனாய் இருந்து ஓய்வுபெற்றவர்.

இந்தக்குடியிருப்பின் முதுகெலும்பே அவர் தான்.

எங்களது கௌரவ

Facility Manager.

எங்களது பிளம்பிங்

எலக்டிரிக் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மகான்." என 

அறிமுகம் செய்தார்.

 மேலும் கூறினார்.

"இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள்.

பொதுவான விஷயங்களைப் பேசி மகிழ்வார்.

யாரும் தங்களது கடந்த கால பெருமைகளை அசை போடுவதில்லை"

 மேலும் என்னையும் ஆறுமுகத்தையும் தந்தை போல் பாவித்து மரியாதை செலுத்துவர் என விரிவாக எடுத்துக்

கூறினார்.

"தங்களைப் பற்றி ஏதும்

சொல்லவில்லையே" என

நாராயணமூர்த்தி வினவினார்.

 பெரியவர் மெதுவாக

"நான் இருமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.

திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை.

இங்குள்ள குடியிருப்போர்

சங்கத்தின் கௌரவத் தலைவராகச் செயற்படுகிறேன்" என ஆர்ப்பாட்டமின்றி கூறினார்.

ஆடிப் போனார் நாராயணமூர்த்தி.

பெரியவர் மேலும் அறிவுரையாக சில விஷயங்களைக் கூறினார்.

"ஓய்வு பெற்ற நிலையில் 

உள்ள நாம் அனைவரும்

 Fused Bulb மாதிரிதான்.

 பல்புகளில் பலவகை உண்டு.

0 வாட் பல்பு விடிவிளக்காய் பயன் தரும்.

40 வாட் பல்பு குறைவான வெளிச்சம் தேவைப்படும் 

பகுதிகளில் பயன்படுத்தப்படும்.

டியூப் லைட் பரவலான வெளிச்சத்தைத் தரும்

ஹெட்லாம்ப் காரில் 

பயன்படும்.

ஹாலஜன் லாம்ப் உயர்நிலைகளில் பயன்படும்.

ஆனால் எல்லாம் வெளிச்சம் தரும்.

பயன்பாடுகள் தான் வெவ்வேறு.

ஆனால் பியூஸ் ஆன நிலையில் அவை மாற்றப்படும்.

அதுபோல நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் வெவ்வேறு பணிநிலைகளை மேற்கொண்டு அதற்குரிய 

பணிகளைச் செய்கிறோம்.

ஓய்வு என்பது Fused Bulb 

நிலை.

இதை உணர வேண்டும்.

நமக்கு மாற்றாக மற்றவர்

தயாராக இருக்கையில்

வழிவிட்டு ஒதுங்குகிறோம்.

ஆனால் உதிக்கும் சூரியனின் மதிப்பே தனி.

அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கும் நாம் மறையும் சூரியனை கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் இரண்டுமே சூரியன் தான்

ஔி தரும் காலைக் கதிரவன் நமது பணிக்காலம் போன்றது

சுறுசுறுப்பாய் இயங்குகிறோம்.

மாலை நேரத்தில் ஓய்வை நாடுகிறோம்.நமது பணிஓய்வும் மாலைக் கதிரவன் போன்றதே.

அமைதி நாடி ஓய்வுற்று இருக்கவேண்டிய மாலை 

வேளைகளில் காலை நேரக் கனவுகள் அர்த்தமற்றவை.

அவற்றை அசைபோடுவது பேதமையே.

மாலை நேர நிஜங்களில்

காலை நேரக் கனவுகள்

அர்த்தமற்றவை"என

போதனை செய்தார்.

மனத் தெளிவு பெற்றார்

நாராயண மூர்த்தி.

Enninaivugalin e pathivu

 எலி......

சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

Enninaivugalin e pathivu

 குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்

முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.

ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…

என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு

ஆகியவையும்,

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,

சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.

இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "

என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

Enninaivugalin e pathivu

 அறியாத  அற்புதங்கள் !..


*1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.*


*2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.*


*3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.*


*4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.*


*5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.*


*6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.*


*7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )*


*8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.*


*9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.*


*10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.*


*11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.*


*12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.*


*13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.*


*14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.*


*16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.*


*17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.*


*18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.*


*19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.*


*20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.*


*21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.*


*22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.*!


*23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.*


*24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.*


*25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.*


*26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.*


*27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.*


*28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.*


*29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.*


*30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.*


*31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.*


*32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.*


*33. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.*


*34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.*


*35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.*


*36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.* 


*வாழ்க வளமுடன்...*

*பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*!.

Enninaivugalin e pathivu

 ஒரு துறவியிடம் 

அழகான பெண் ஒருத்தி கேட்டாள் ...

"என் கணவர்கிட்ட நிறைய குறைகள்...

அவரோடு என்னால் இனி  வாழமுடியாது...

எனவே அவரைவிட்டு நான் 

விலகி விடட்டுமா?" 

அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி... >

"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...%

எது வேண்டும் கேள்?" என்றார்.

அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...

"அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்...

அதோடு அதில் நிறைய முட்கள் வேறு இருக்கிறதே,

இதுவா வேண்டும்?" 

என்று கேட்டார் துறவி.

"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...

அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை என்றாள்..."

புன்னகைத்த துறவி சொன்னார்: "வாழ்க்கையும் அப்படித்தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".

குறைகளை பெரிதுபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நேசிப்போம்...

நாமும் குறைகள் நிறைந்தவர்கள்தான்...!

குறைகளே இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை .என்று அந்த பெண்னுக்கு புரியவைத்தார்.

குறிப்பு:- கதையின் நீதி 

இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.....

Enninaivugalin e pathivu

 காலம் ஒரு சக்கரம் போன்றது ......


ஒரு எலி ஒரு பண்ணையார் வீட்டில் வெகுகாலமாக உல்லாசமாக வாழ்ந்தது. வழக்கம்போல் இரவில் உணவு தேட வெளியே புறப்பட்டது அப்போது பண்ணையாரும் அவருடைய மனைவியும் ஒரு அட்டைப்பெட்டியை பிரிப்பதை கண்டது தனக்குத்தான் ஏதோ உணவு கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் எலியும் அதை ஆர்வமாக உற்று பார்க்க அவர்கள் அதிலிருந்து ஒரு பெரிய எலி பொறியை வெளியே எடுத்தனர்...

அதை கண்ட எலி மிகவும் பயந்தது நொந்து போனது, இந்த எலி பொறியை வீட்டிலிருந்து தூக்கி எறிய வேண்டும், அல்லது இதை உடைத்தெறிய வேண்டும் என்று திட்டம் போட்டது அதற்கு உதவிட இன்னோரு ஆள் வேண்டும் என்று தோன்றியது அதன்படி... வேகமாக தோட்டத்திற்கு சென்று அங்கு ஒரு கோழியிடம்...

"என்னை கொல்ல பொறி வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை உடைக்க எனக்கு உதவி செய்யவேண்டும்!" என்றது கோழியோ சத்தமாக சிரித்து... "அந்த பொறியினால் எனக்கு எந்த ஆபத்துமில்லை அது உன்னுடைய பிரச்சினை அதை நீதான் சரிசெய்யவேண்டும் முதலில் இடத்தை காலி பன்னு இங்கிருந்து போ!" என சொல்லி விரட்டியது,

அடுத்து வேகமாக ஓடி ஒரு கிடா ஆட்டிடம் சென்று "கிடா அண்ணே... என்னை கொலை செய்ய ஒரு பொறி. வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை... உடைக்க...!" என்றது... நக்கலுடன் சிரித்த அந்த கிடா ஆடு "எலி பொறிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், உனக்கு உதவினால் எனக்கென்ன லாபம் கிடைக்கும்? நீ இருந்தாலும் செத்தாலும் எனக்கென்ன வந்தது...!" என்றது...

மிகவும் மன வருத்தத்தில் இருந்த அந்த எலி வானத்தை பார்த்து கடவுளிடம் வேண்டியது.... அப்போது திடீரென "படார்" என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது பண்ணையார் அம்மா வேகமாக ஓடி அந்த எலி பொறியில் ஒரு பாம்பு மாட்டிக்கொண்டது என தெரியாமல் அதை திறக்க... வலியில் துடித்த அந்த பாம்பு ஓங்கி ஒரே போடாக பண்ணையார் அம்மாவை கொத்திவிட்டது....

வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் பரபரப்புடன் பண்ணையார் அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர், விஷம் இறங்கிவிட்டது ஆனால் காய்ச்சல்தான் இன்னும் இறங்கவில்லை என்றார் டாக்டர்... அதற்கு கோழி அடித்து சூப் வைத்து குடித்தால் காய்ச்சல் இறங்கிவிடும் என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கூற... அதன்படி உடனே பண்ணையிலிருந்து ஒரு கோழியை பிடித்து சூப்பு வைத்து கொடுத்தனர்...

தன் மனைவிக்கு உடல் நலம் தேறி நல்லபடியாக வீட்டிற்கு வந்தால் குலச்சாமிக்கு ஒரு கிடா விருந்து வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்ட அந்த பண்ணையார்... அதன்படி அவர் மனைவியும் உடல் நலன் தேறி வீட்டிற்கு வர... உடனே

பண்ணையிலிருந்து ஒரு கிடா ஆட்டை பிடித்து மனமும் ருசியுமாக எல்லோருக்கும் விருந்து வைத்தார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த அந்த எலி தன்னுடைய பிரச்சினை மட்டும் இன்னும் தீரவில்லையே என மறுபடியும் சோகமானது...

திடீரென ஏதோ சிந்தனையில் அந்த பண்ணையார் இந்த எலி பொறியினால்தான் தன் மனைவிக்கு இந்த நிலைமை தனக்கும் எவ்வளவு செலவு என அந்த எலி பொறியை தூக்கி குப்பையில் எறிந்துவிடுகிறார். அதை பார்த்த அந்த எலி ஒரு மெல்லிய புன்னையுடன் வானத்தை பார்த்து கடவுளுக்கு நன்றி சொன்னது.

#நீதி 👌

ஒருவர் பிரச்சினை என்று உங்களிடம் வந்தால் அவரை மேலும் புண்படுத்தாதீர். ஏனெனில் காலம் ஒரு சக்கரம் போன்றது எப்போது யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.🙂

Enninaivugalin e pathivu

 சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர்

ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில்

கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.

பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.

இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர

கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்

கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்

எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.

ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்

4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட

கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..

இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு

அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல 

அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்

புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்

5 அடிதான்.. 

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு

அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்

இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.

அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,

ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்க்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை 

நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு

லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,

அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை

அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி

மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,

ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற

அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று

இருக்கும்..

 *சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோ ழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது

Enninaivugalin e pathivu

 *நன்றியுணர்வின் சக்தி*


வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை,  பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.


ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை  சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை  கேட்டது.


"கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.


தன் குருவை  அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்.


இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய ஞானி  "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை பணிந்து வேண்டினார்.


குருவும் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார்.  *அனைத்தும் நன்மைகே  அனைத்திற்கும் நன்றி* என்பதுவே அந்த மாமந்திரம்.


குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும்  அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.


அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.


குருவிற்கு  மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு  கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச் சென்றார்.


குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால் *அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி* என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால்  நிலைமை மாறியது.


பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது.


வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.


*சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது*.


எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று  பதில் கூறினார்.


ஞானியும் தன் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.


ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பித்தார்  சந்திக்கும் எல்லா சூழல்களிலும்


*அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி*


என்று உளமார கூற ஆரம்பித்தார்.


அதுவரை அவர்  பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.


அதை போல் நாமும்  உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் .... என அனைத்திலும், எல்லா  சூழ்நிலைகளிலும், நடப்பவை  அனைத்தும் நன்மைக்கே, எனவே  

*நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறுங்கள்*.


இந்த கதையை  மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .


அவர்களது வாழ்விலும் மாபெரும் மாற்றங்கள் வரும்


இந்த எளிமையான மாமந்திரம்  வாழ்வில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வரும்.


தன்னம்பிக்கை  எவ்வளவு சக்தி மிக்கது.


தன்னபிக்கை  ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின் பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.


இந்த மந்திரத்தை அறியாமல்தான் பிறவி மேல் பிறவியாக கர்ம வினையைச் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.


இந்த மாமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உச்சரித்து வருவோமெனில் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கி உணர்வோம்.


வாழ்க வளமுடன் !


*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...*


*அனைவருக்கும் பகிர்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளே...!🙏🙏🙏

Enninaivugalin e pathivu

 குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்

முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.

ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். 

அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…

என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு

ஆகியவையும்,

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,

சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.

இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "

என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.