Thursday, December 9, 2021

Enninaivugalin e pathivu

 தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணை  பெற்ற புதிய கமாண்டிங் ஆபிசர் பதவியேற்றுக் கொண்டார். 


மறுநாள் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பென்ஞ்ச் அருகில் இரு வீரர்கள் காவல் இருந்ததைப் பார்த்தார்.


"ஏன் இந்த பென்ஞ்சுக்கு காவல் நிற்கிறீர்கள்? இந்த பென்ஞ்ச்சிற்கு அப்படி என்ன சிறப்பு?" என்று கேட்டார்.


"பழைய கமாண்டிங் ஆபிசர் சொன்னதால் காவல் காக்கிறோம்" என்றனர் வீரர்கள் .


பழைய கமாண்டிங் ஆபிசரின் நம்பரைத் தேடிப்பிடித்து அவருக்குப் போன் போட்டு  விபரம் கேட்டார் புதிய க.ஆபிசர்.


அவர்,"எனக்குத் தெரியாது; எனக்கு முன்பு பணியாற்றிய அதிகாரிகள் இருந்த போதும் இவ்வாறு காவல் இருந்தார்கள்" என்று கூறினார்.


இதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் என உறுதி பூண்ட ஆபிசர்,


நூறு வயதான பழைய கமாண்டிங் ஆபிசரைத் தேடிக் கண்டு பிடித்து இந்த விசயத்தைக் கூறி விபரம் கேட்டார்.


அவர்," பெயிண்ட் அடித்த பென்ஞ்ச்சில் யாரும் உட்கார்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னேன்; இன்னுமா காயவில்லை?" என்றார்.


இன்றும் கூட நாமும் இப்படித்தான் சிலவிசயங்களில் சில நடைமுறைகளை விடாமல் பின்பற்றி வருகிறோம். சிந்திப்பதற்கு சோம்பல் படுகிறோம்.                   ---------

No comments:

Post a Comment