Wednesday, March 2, 2016

enninaivugalin e pathivu... my words about sai school

இலட்சியம் இல்லா வாழ்க்கை துடுப்பு இல்லாத படகை போலாகும்..
துடுப்பு என்னும் முயற்சியை அதாவது தான் நடந்து  சென்று கல்வி கற்ற சாலையில் கல்விக் கூடம் அமைக்க வேண்டும் .என்ற முயற்சியில் வெற்றி கண்டு  ஆண்டு விழாவையும் இனிதாக நடத்திக் கொண்டிருக்கிறார்.பாராட்டுதலுக்குரிய  திரு.நடராசன் அவர்கள் .

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டிருக்கும் .ஆனால் அந்த பக்கத்தை உலகத்தையே படிக்க வைப்பது நம் கையில் தான் உள்ளது. என்கிறார்.அப்துல் கலாம் ஐயா அவர்கள். மேலும் ,கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும்,படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் , உழைப்பால், அறிவால்,விடா  முயற்சியால்,வெற்றி பெறலாம் என்ற கலாம் ஐயாவின் கருத்துக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் திரு.நடராசன் அவர்கள் .

மலர்களின் எண்ணிக்கையை கொண்டு தோட்டத்தின் அழகை அறியலாம் .அது போல  நடராசன்  அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களின்  எண்ணிக்கையை கொண்டு  இவரின் உழைப்பின் அழகையும், இளைய சமுதாயத்திற்காக வாழும் அழகையும், நாம் அறியலாம்..

தாமின் புறுவது  உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் ...என்ற வள்ளுவர் வாக்கிற்கு உதரணமாக திகழ்பவர்.
ஆறாம் அறிவிற்கு கல்வி புகட்டி நாளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் உங்களை வாழ்த்துகிறேன்...வாழ்க பல்லாண்டு ..பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூராயிரம்....