Tuesday, April 24, 2012

en ninaivugalin e -pathivu --elango super man

சிறு வயது முதல் தமிழ் மீடியத்திலேயே படித்து வந்த அந்த இளைஞருக்கு(இளங்கோ) ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவராக வந்தார். அடுத்து பிளஸ் 2விலும் நல்ல மதிப்பெண்கள் (மாவட்டத்தில் முதல்) எடுத்ததை அடுத்து, லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தார்.
ஆங்கிலம் பேசவேண்டும் என்கிற தணியாத ஆவல் காரணமாக, ஆங்கிலத்தில் பேசும் மாணவர்களுடன் தமது நட்பை – அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ – இவர் வளர்த்துக்கொண்டார். பின்னர், கல்லூரியில் நடைபெறும் இலக்கியம் தொடர்பாக நிகழ்ச்சிகள், நாடகங்கள், அனைத்திலும் தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்வார். அவருக்கு இருந்ததெல்லாம் ஒரே ஒரு லட்சியம் தான். ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெறவேண்டும். அதற்காக எந்த அவமானத்தையும் அவமதிப்பையும் இவர் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்.

இதெல்லாம் ஒரு விஷயமா? இதென்ன பிரமாதம்? அப்படின்னு தானே கேக்குறீங்க. ம்….. சொல்ல மறந்துட்டேனே அந்த இளைஞருக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. அவர் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி.

ராபர்ட்  அந்த காலேஜ்ல ராகிங் ஸ்பெஷலிஸ்ட்.

ஒரு நாள்  இளங்கோ கண்ணுல மாட்டுனாரு. “ஏய்…இங்கே வா…”ன்னு கூப்பிட்டான்.
“நான் இங்கே இருக்கேன். கரெக்டா பார்த்து வா” – அதுலயும் ஒரு நக்கல்.
நம்மாளு போனாரு.
“Tell me senior”
“ஏய்… என்ன இங்கிலிஷ்ல பேசுறே? தமிழ் தெரியாதா உனக்கு?”
“Yes… i know senior”
“அப்போ தமிழ்ல பேசு”
“No senior. I am speaking in English because you know English and understand it senior. Isn’t it?”
“என்ன மறுபடியும் இங்கிலிஷ்ல பேசுறே… தமிழ் தெரியும்ல? ஒழுங்கா தமிழ்லயே பேசு…”

With Mr Elango4r  “வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு… வாழவே பிடிக்கலைன்னு சதா புலம்பிகிட்டே இருப்பவரா நீங்க?” ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு

“சரி.. நீ இங்கிலீஷ்ல பெரிய எக்ஸ்பர்ட் தான். பெரிய ப்ரொஃபசர் தான்… ஒத்துக்குறேன். நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு”
“உங்க அம்மாவை நீ பார்த்திருக்கியா?”
“………..” (மௌனம்)
“உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த உங்கம்மா எப்படியிருப்பாங்க தெரியுமா?”
“………..” (மௌனம்)
“உன் அப்பா எப்படியிருப்பார்?”
“………..” (மௌனம்)
“இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரம் இதெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா?”
“………..” (மௌனம்)
“ரெயின்போ, மலை, அருவி, நதி, போன்ற இயற்கை காட்சிகள் எப்படியிருக்கும்னு தெரியுமா?”
“………..” (மௌனம்)
“சரி… அதையெல்லாம் விடு. நீ எப்படியிருப்பேன்னு உனக்கு தெரியுமா? உன் முகம் எப்படியிருக்குன்னு உனக்கு தெரியுமா?”
“………..” (மௌனம்)
“தெரியாதில்லே… உன் முகமே உனக்கு எப்படியிருக்கும்னு தெரியாது. நீ என்ன இங்க்லீஷ்ல டிகிரி படிச்சு, இங்கிலீஷ்ல பேசி கிழிக்கப்போறே? நீ வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போறே?


நம்ம ஹீரோ மௌனத்தை உடைக்கிறார். ராபர்ட்டிடம்…”முதல்ல நீ கையை கொடு… ஜஸ்ட் வான்ட் டு ஷேக் மை ஹாண்ட்ஸ் வித் யு….”
“டேய்… முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… சமாளிக்காத”
“நோ… நோ… நீ கையை கொடேன். அப்புறம் சொல்றேன்”
வேண்ட வெறுப்பாக ராபர்ட் கைகளை நீட்ட, அழுத்தமாக அவரது கைகளை பற்றி குலுக்குகிறார் நம்ம ஹீரோ.
பின் டிராப் சைலன்ட்டாக இவர் சொல்லப்போவதை மொத்த கூட்டமும் பார்த்து கொண்டிருக்கிறது.
“முதல்ல உனக்கு நான் நன்றி சொல்லனும்னு ஆசைப்படுறேன். தேங்க் யூ வெரி மச். எனக்கு இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நீ சொன்ன மாதிரி தற்கொலை எண்ணம் வந்திருக்கு. ‘பார்வையில்லாம எதுக்கு இந்த உலகத்துல வாழனும்? பேசாம செத்துடலாம்’னு யோசிச்சிருக்கேன். ஆனா, உன்னை பார்த்ததும், இந்த நிமிஷத்துல இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். நான் வாழ்ந்து காட்டுறேன். என்னால என்ன முடியும்னு சாதிச்சு காட்டுறேன். உன்னை மாதிரி மிருகங்களே வெட்கமில்லாம இந்த உலகத்துல நடமாடும்போது நான் எதுக்கு சாகனும்?”


அன்றைக்கு நம்ம ஹீரோவின் மனதில் கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய லட்சியத் தீ…. இன்று வரை எரிந்துகொண்டிருக்கிறது.

நம்ம ஹீரோ லயோலா கல்லூரியில் பி.ஏ. படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்றபின்பு, அங்கேயே முதுகலைப் பட்டப் (எம்.ஏ.) படிப்பில் சேர்ந்தார். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. பின்னர் சென்னை பல்கலைகழகத்தில் ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு M.Phil முடித்தார். பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் தான் பயின்ற சென்னை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக பணி.


பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் ரேமண்ட்ஸ் ஷர்டிங் & ஷூட்டிங் விளம்பரங்களில் ஆங்கிலத்தில் கணீரென்று ஒலிக்கும் குரல் (Prince Jewellery Panagal Park, Raymonds the Complete Man) இவருடையது தான்!



No comments:

Post a Comment