Sunday, August 12, 2012

en ninaivugalin e -pathivu ----jokes

ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:
"ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு"
"ஐந்து"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?"
"எட்டு"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு."
"ஜேக்"




என் நண்பன் என்னிடம் கேட்டான் காதலுக்கும் நட்புக்கும் என்ன் வித்தியாசம்.நான் சொன்னேன் காதலன்,காதலி என்றூ சொன்னால் உதடுகள் ஒட்டாது.
நட்பு,நண்பன்,நண்பேன்டா என்றூ சொல்லிபார் உதடுகள் கூட‌ ஒட்டும் என்றூ சொன்னேன்.உடனே அவன் என்னை மெரீனா கடற்கரைக்கு அழைத்து
சென்றான் ,அங்கே சென்றூ பார்த்தால் காதலனும் காதலியும் இனைந்தால் உதடு ஒட்டும் என்றூ சொல்கிறான். என்னிடம் எந்த‌ பதிலும் இல்லை.    Hmmmm


உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?
உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?

ரொம்ப சிம்பிள்.

உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு டைப் பண்ணி, ஒரு இடைவெளி விட்டு, உங்க பேர டைப் பண்ணுங்க.

அப்புறமா ஒரு இடைவெளி விட்டுட்டு,

உங்களோட காதலன் அல்லது காதலி பேர டைப் பண்ணுங்க.

இந்த S M S   யாருக்கு அனுப்பனும் தெரியணுமா?

கொஞ்சம் கீழ வாங்க............
*
*
*
*

வேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கு அனுப்பனும்.

உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு…. எப்படி?



கடி தத்துவங்கள்
மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?

சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில்இருந்துசனிக்கிழமை வரை..?

சைக்கிள்ல போனா ‘சைக்கிளி’ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?

டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது


டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.


போலீஸ்: நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?
ஒருவர்: ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
போலீஸ்: அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!


ஒருத்தர் பஸ்ஸில் பயணப்படும் போது திடீரென் ஓட்டுனர் பிரேக் போட அவர் முன்னால்
நின்ற பெண்மீது இடித்துவிட்டார்.. அவர் சுதாகரித்துக்கொண்டு எழும்முன்...
பெண் : ஏய், நீ என்னப்பண்ணிக்கிட்டிருக்க..?????
நம்மாளு: பஞ்சாப் யூனிவர்ஸிட்டில் பைனல் இயர் B.E.


ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர் பயந்து போய் : ஏன்??
நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..


மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..


அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி.. 


சூரியன் எப்எம் ல வேலைக்குசேர்ந்தது தப்பா போச்சுபா..
ஏன்...
சம்பளம் கேட்டா , கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்கிறான்


பிச்சக்காரங்க கூட அஞ்சு பைசா வாங்க மாட்டாங்க.
ஆனா AIR CEL, AIR TEL, HUTCH இவங்களுக்கெல்லாம் என்ன கஷ்டமோ தெரியல, ஒரு
மெசேஜுக்கு அஞ்சு பைசா வாங்கறாங்க.


கிரிக்கெட் ப்ளேயருக்கும், காலேஜ் பிகருக்கும் என்ன வித்தியாசம்?
கிரிக்கெட் பிளேயர் *BAT*ல அடிப்பார்
காலேஜ் பிகர் *BATA*ல அடிப்பா


எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?
திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.


டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.









No comments:

Post a Comment