Saturday, August 18, 2012

en ninaivugalin e -pathivu ---பேசும் சிலைகள்

சிலைகளைக் கூட ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான் அமைத்திருகிறார்கள்
 இப்படிதான் ஒரு முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள் அமைக்கப்படிருந்ததாம் .
 அதைப் பார்த்து வியந்துபோன ஒரு வழிப்போக்கன் அந்த நாட்டவரிடம்
எதற்க்காக ஒவ்வொரு குதிரையையும் ஒரு கோணத்தில் வடிவமைத்து இருகிறிர்கள் என்றுக் கேட்க அதற்கு பதில் தந்த அந்த நாட்டவர் .
குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில்,
 குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம் என்றும் !
முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம் என்றும் !
குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம் என்றும் பதில் அளித்தாராம் . 
இதற்குப் பெயர்தான் பேசும் சிலைகளோ என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு கடந்து சென்றானாம் அந்த வழிபோக்கன் .

No comments:

Post a Comment