Saturday, August 18, 2012

en ninaivugalin e -pathivu ---சக்தி பீடங்கள்

தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி சிவபெருமானுக்கு மனைவி ஆனார். தட்சன் பலவிதமான பராக்கிரமங்களைக் கொண்டவன். இறைவனான சிவ பெருமானைவிட தானே உயர்ந்தவன் என்ற இறுமாப்பும் கர்வமும் உடைய வன். சிவபெருமான் தனது மருமகனாக இருந்தும் அவருக்கு மதிப்பளிப்பது இல்லை. தான் என்ற அகம்பாவம் தட்சனிடம் மேலோங்கி இருந்த காலகட்டம்.

அப்போது தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான். இந்த யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைத்தான். உலகிலுள்ள அனைத்து சித்தர்கள், அரசர்கள், பெரும்புலவர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுத்தான். இப்படி எல்லாருக்கும் அழைப்பு விடுத்து யாகத்தை நடத்த தட்சன் ஏற்பாடு செய்தபோதும், தனது மருமகனான சிவ பெருமானையும் மகள் பார்வதியையும் அழைக்க வில்லை. இவ்விஷயம் தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் எட்டியது. இறைவனை அழைக்காமல்- மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நாம் மட்டும் எப்படிச் செல்ல முடியும் என்ற விவாதம் எழுந்தது. உடனே தேவ சபை கூடியது. சிவ பெருமானை அழைக்காதது பற்றி விவாதித்தனர். இறுதியாக பிரம்ம தேவன் உட்பட யாருமே தட்சன் நடத்தும் யாகத்தில் கலந்து கொள்வ தில்லை என முடிவெடுத்தனர்.

ஆனால் தட்சன் யாகம் ஆரம்பித்த வுடன், "தட்சன் சிவபெருமானைவிட செல்வாக்கு படைத்தவன்- முன்கோபக் காரன். நாம் யாகத்தில் கலந்து கொள்ளா விட்டால் நம்மைப் பழி வாங்கி விடுவானோ என்று பயந்து, பிரம்மன் உட்பட தேவர்கள், முனிவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் ஒவ்வொரு வராக நழுவிச் சென்று தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டனர்.

இப்படிப்பட்ட நிலையில் பார்வதி தேவி தனது தகப்பன் நடத்தும் யாகத்தின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, பிறந்த வீட்டுப் பாசம் காரணமாக அந்த யாகத் தில் கலந்து கொள்வது என்று முடிவு செய்தாள். தனது கணவரான சிவபெருமானிடம் உத்தரவு கேட்டாள்.

""நம்மை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத் திற்கு நீ செல்லக்கூடாது'' என்று சிவபெருமான் தடுத்தார். பெருமானின் கட்டளையையும் மீறி பிறந்த வீட்டின் பெருமையை எண்ணி பார்வதி தேவி தகப்பன் தட்சன் நடத்தும் யாகத்திற்குச் சென்றாள்.

அதனால் மனம் வருந்திய பார்வதிதேவி, தீயில் வீழ்ந்து உயிர் துறந்தாள். இதை அறிந்த சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு தட்சனின் யாகத்தை அழித்ததோடு, இறந்து கிடந்த பார்வதியின் உடலைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அதன் உக்கிரத்தால் உலகங்கள் யாவும் அதிர்ந்தன. இந்த நிலை நீடித்தால் அனைத்து உலகங்களும் அழிவது உறுதி என்று அஞ்சிய தேவர்கள் மகாவிஷ்ணுவைச் சரணடைய, அவர் தனது சக்ராயுதத்தால் பார்வதி தேவியின் உடலை அறுத்து பூமியில் வீழ்த்தினார். அப்படி பார்வதி தேவியின் உடற் பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்கள் எனப்பட்டன. அவ்வகையில் 51 சக்தி பீடங்கள் இருப்பதாகச் சொல்வர். 

No comments:

Post a Comment