Saturday, August 18, 2012

en ninaivugalin e -pathivu ---story

சோழப் பேரரசனாய் வாழ்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி  முற்பிறவியில் கயிலை மலையில் குரங்காக வாழ்ந்தான். அப்பொழுது குளிராலும் பயத்தாலும் நடுங்கிய குரங்கு, ஓர் இரவு முழுவதும் சிவராத்திரி அன்று தன்னையறி யாமல் வில்வ மரத்து இலைகளை உதிர்த்துப் போட்டுக் கொண்டே இருந்தது. அது மரத்தினடியில் இருந்த சிவ

லிங்கத்தின்மீது விழுந்தது. சிவபெருமான் குரங்கை இறங்கி வரச் சொன்னார். கீழே இறங்கி வந்த குரங்கு ஈசனின் திருவடி பணிந்தது; தவறு செய்து விட்டதற்காக மன்னிப்பு வேண்டியது.

சிவபெருமான் குரங்கை ஆதரவாய்த் தடவிக் கொடுத்து, ""நீ சிவராத்திரி அன்று எம்மை அர்ச்சித்திருக்கிறாய். இந்தப் புண்ணியத்தின் பலனாக உனக்கு மனிதப் பிறவி வழங்குகிறேன்! பூவுலகில் சோழர் குடியில் அரசனாய்ப் பிறந்து பேரரசனாவாய்'' என்று ஆசீர்வதித்தார்.

ஆனால் அந்தக் குரங்கோ, ""எனக்கு அரச பதவி வேண்டாம். தங்கள் பாதத்தின் அருகே இருந்தாலே போதும்'' என்றது.

""யாராயிருந்தாலும் செய்த நல்வினை- தீவினைகளுக்குரிய பலனை அனுபவித்தே ஆகவேண்டும். இது உலகப் பொதுநியதி'' என்றார் சிவபெருமான்.

""அப்படியாயின் தங்களை மறவாதிருக்க இதே குரங்கு முகத்துடனே பிறக்கவாவது அருள் புரிக'' என்றது குரங்கு. அப்படியே அருள் பெற்றது. குரங்கு முகத்து டன் பிறந்து ஆட்சி புரிந்தவனே முசுகுந்த சக்கரவர்த்தி! முசு என்றால் குரங்கு.

No comments:

Post a Comment