1.”பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை” என்பது சிறிய குழந்தைகள் கூட அறிந்ததே..
மாலையில் வெளியே செல்லும் போது குழந்தைகள் கேட்பது. என்ன வாங்கித் தருவாய்? கடைகாரர் பணம் கொடுத்தால் தான் தருவார் என நன்கு அறிவார்கள்.
2.கல்லானே ஆனாலும் கைப்பொருள் உண்டாயின்
எல்லோரும் சென்றங்கு எதிர் கொள்வர்;--இல்லானை
இல்லாளும் வேண்டாள்,மற்றீன்றெடுத்த தாயும் வேண்டாள்
செல்லாதவன் வாயிற் சொல்.
என்று முன்னோர்கள் தெரியாமலா சொன்னார்கள்.படிக்கவில்லை என்றாலும், பணமிருந்தால் அவனை அனைவரும் வரவேற்கும் விதமே மிகவும் உயர்வாக இருக்கும்.
ஒரு முறை ஈஸ்வர்சந்திரவித்தியாசாகர்,அவர்கள் ஒரு விருந்துக்கு எளிய உடையில் சென்றிருந்தார்.அந்த விருந்தே வித்தியாசாகருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து. பெரிய பணக்காரர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள்; வாயிற்காப்போன் வித்யாசாகரை அவரின் எளிய உடையின் காரணமாக உள்ளே விட வில்லை.
அவரும் வேறு உயர்ந்தஉடையுடன் மறுபடியும் வந்தார். வாயிற்காப்போன் இம்முறை அவரைத் தடுக்கவில்லை.விருந்து ஆரம்பமானது. அனைவரும் உண்ண தொடங்கினர்.வித்யாசாகர் தன் உடையைப் பார்த்து ஏ..உடையே நீ சாப்பிடு .என்ற படி சாப்பிடாமல் இருந்தார், விருந்து ஏற்பாடு செய்தவர்கள் குழப்பம் அடைந்து காரணம் கேட்டனர்.வித்யாசாகரும் நடந்ததை கூறி இந்த விருந்து எனக்கு இல்லை. என் உடைக்கு என்றார்.
பின்னர் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டனர்..
3.இந்த உலகில் முதல் நண்பன் ---பணம்
இரண்டாவது நண்பன்---- சொந்தம்
மூன்றாவது நண்பன்—செய்யும் நற்செயல்கள்
4.முன்பெல்லாம் பாசமாக இருந்தால் பாதுகாப்பு தானாக வந்தது.ஆனால் இப்போதோ... பாதுகாப்பாக(வீடு, வாசல், சொத்து, வங்கியில் பணம்) இருந்தால் தான் பாசமே வருகிறது.
5.பணம் போதும் என்ற நிலையே ஏற்படாது. ஏனெனில் இருக்கும் பணம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் என நினைக்கிறோம்.ஆனால் மாறாக அது நம் தேவைகளைப் பெருக்கவே செய்கிறது.
6.பணம் தான் இக்காலத்தில் எல்லாமாக இருக்கிறது.சாதனையின் அளவுகோல் கூட பணம் தான். எவ்வளவு மடத்தனமாக இருக்கிறது என்று தெரிந்தாலும், துரதிஷ்டவசமாக நம்மிடம் பணம் தவிர வேறு அளவுகோல் இல்லை.
7.பணம் ஒரு விசித்திர மாயமான். அது துரத்துபவனுக்கு குட்டி போட்டு விட்டு ஓடிக் கொண்டே இருக்கும்.குட்டிகளில் திருப்தி அடையாத மனிதன் தாய் மானைப் பிடிக்கும் வேட்டையில் தவிக்க தவிக்க ஓடிச் செத்துப் போகிறான். என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை,நிதர்சனமான உண்மை.
8.முற்றிலும் வருந்தத்தக்க விஷயம் இக்காலத்தில் பணம் பாசத்தை அளக்கும் கருவியாக, அறிவிக்கும் கருவியாக இருப்பதை நிச்சயமாக மறுக்க முடியாது.
No comments:
Post a Comment