Monday, December 13, 2021

Enninaivugalin e pathivu

 நான் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்தபோது, அது எழுபத்தைந்து ஆகாதா என்று ஏங்கினேன்; ஆயிற்று.


ஆயிரம் வராதா என்று அமைதி இழந்து கேட்டது மனது; அதுவும் வந்தது.


அது லட்சம் வரை போயிற்று; அப்போதும் நிம்மதி இல்லை.


வந்த ஏதும் தங்கவில்லை.


‘செல்வம் என்பது செல்வதற்காக வருவதுதான் என்று முடிவு கொண்டேன்.


பொருளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், ‘வருவதும் வரும், போவது போகும்’ என்று சமநோக்குமுடிவு கொண்டேன், அந்த வகையில் நிம்மதி வந்தது.


ஆனால், லௌகீக வாழ்க்கையில் ஒரு நிம்மதி வரும்போது, ஒருதுன்பமும் கூட வருகிறதே. என்ன செய்ய?


பேதலித்த மனத்தைப் பார்த்து, ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று அழுதேன்.


‘இரண்டு மனம் வேண்டும் ‘ என்று இறைவனைக் கேட்டேன்.


உபதேசத்தில் இறங்கியிருக்கும் எனக்கே இன்னும் முழு நிம்மதி கிட்டவில்லை.


பகவத் கீதையின் தியானயோகம் என்னை செம்மைப்படுத்தி வருகிறது.


என்றோ ஒரு நாள் சாகப்போகிறோம். செத்த பிணத்தின் முன் இனி, சாகப்போகும் பிணங்கள் கதறி அழப்போகின்றன.


வீடு வரை உறவு


வீதி வரை மனைவி


காடுவரை பிள்ளை


கடைசி வரை யரோ?.


-ஆம்; கதை ஒருநாள் முடியப்போகிறது.


சிலர் அழுது முடிக்கப்போகிறார்கள்!


பிறகு எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள்


கீதையில் கண்ணன் சொல்வது போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான், மனநிம்மதி சாத்தியமாகும்.


எனது வாழ்க்கையிலேயே இதற்கான அனுபவங்கள் உண்டு.


முதலில் நான் மனதாரக் காதலித்த பெண் எனக்குக் கிடைக்கவில்லை.


நான் கவலைப்பட்டேன்.


நிம்மதி இழுந்தேன்.


பிறகு திருமணம் பேசும்போது, நான் குறிப்பிட்ட பெண் எனக்குக் கிடைக்கவில்லை.


நான் மீண்டும் நம்பிக்கை இழந்தேன்.


‘விரும்பியது கிடைக்காததால், கிடைத்ததை விரும்புய என்ற பழமொழிபடி கிடைத்ததை விரும்பத் தொடங்கி, செயற்கையான நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.


கண்ணதாசன்

No comments:

Post a Comment