Tuesday, July 24, 2012

en ninaivugalin e -pathivu - captain lakshmi shakal

மறைந்தார் கேப்டன் லக்ஷ்மி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ., படையில் இடம் பெற்று, இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக வடிவெடுத்த கேப்டன் லட்சுமி ஷெகல் காலமானார். சென்னையில் பிறந்த லட்சுமி ஷெகல், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று டாக்டரானார். பின்நாளில் ஐ.என்.ஏ., படையின் ஜான்சி ராணி ரெஜிமென்ட் பிரிவின் கேப்டனாக இருந்தார். 2004ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், கம்யூனிஸ்ட் ஆதரவோடு அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

97 வயதான அவர் நெஞ்சுவலி காரணமாக கடந்த புதன் கிழமையன்று கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மூன்று நாட்களாக கோமா நிலையிலேயே இருந்தவர், இன்று(24.7.2012) காலையில் மாரடைப்பு காரணமாக காலமானார். தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக அளித்துள்ளார் லெட்சுமி ஷெகல் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment