Monday, July 23, 2012

en ninaivugalin e -pathivu அதிசய சிறு கதைகள்

 பாம்பைக் கண்டால் படையும்  நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !?

இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .


 உயிர் காக்கும் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங், துப்பாக்கி சுடுவதில் கில்லாடியாம். முதல் உலகப் போரின் போது எதிரிப் படையினர் ஒரே நேரத்தில் பத்துக்கும் அதிகமானோர் இவரை நோக்கி ஆயுதங்களுடன் வரவே இவரின் அருகில் இருந்த ஒரு வீரன் இவரை நோக்கி என்னிடம் உள்ள துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டுதான் உள்ளது வாருங்கள் அவர்களிடம் மண்டியிடுவோம் என்று அழைத்திருக்கிறார்.


பதில் அளித்த ஃப்ளெமிங் ஒரு குண்டு இருக்கிறதே அது போதும் நான் ஒரே நேரத்தில் ஒரு குண்டை வைத்து பத்து வீரர்களையும் வென்று விடுவேன் என்று தனது கைகளின் இருந்த அமிலப் பாட்டிலை நூறு அடிக்கு அதிகமான துரத்தில் வருபவர்களை நோக்கி வீசி குறி தவறாமல் சுட்டிருக்கிறார் அந்த அமிலப் பாட்டில் வெடித்து சிதறியதில் அந்த வீரர்கள் மட்டும் இல்லாது அதன் அருகில் இருந்த பல வெடிகுண்டு கிடங்குகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறி நானுறுக்கும் அதிகமான வீரர்கள் இறந்து போனார்களாம், அது மட்டும் இல்லாது குண்டடி பட்டு விழுந்த வீரர்களுக்குப் போர் முனையில் டாக்டராக இருந்தும் உயிர் காத்து தனது நாட்டிற்கு அரும்பணி செய்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . 

No comments:

Post a Comment