Monday, July 23, 2012

en ninaivugalin e -pathivu ---thaththuvangal

ஒரு எறும்பு நினைச்சா, ஆயிரம் யானையை கடிக்கலாம். ஆனால், ஆயிரம் யானை நினைச்சாலும், ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!

ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.
-விவேகானந்தர்.


நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-ப்ராங்கின்.

 
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-தாகூர்.

 
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
-கண்ணதாசன்.

 
மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-பிளாட்டோ.

 
தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி விடுங்கள்.
-யாரோ.

 
நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-கன்பூஷியல்.



பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். -கவிஞர் கண்ணதாசன். 

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்.
-பல்கேரியப் பழமொழி.

 
எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு.
-சிங்சௌ.

 
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
-மாவீரன் நெப்போலியன்.

 
உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான். உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
-யங்.


பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.

No comments:

Post a Comment