Monday, July 23, 2012

en ninaivugalin e -pathivu -olimpic thagavalgal

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் 11 தங்கம் பெற்று இந்தியா அசத்தல் துவக்கம்

டெல்லி: சமோவாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியின் முதல் நாளில் 11 தங்கப்பதக்கங்களை பெற்று இந்தியா அபார துவக்கத்தை பெற்றுள்ளது.

சமோவா தலைநகர் ஏபியாவில் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி நேற்று துவங்கியது. போட்டியின் முதல் நாளிலேயே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்க வேட்டையை துவங்கிவிட்டனர். முதல் நாளின் முடிவில் இந்தியா 11 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களை வென்றது.

இப்போட்டி சீனியர், ஜூனியர், யூத் 3 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சீனியர் பெண்களில் 48 கிலோ எடை பிரிவில் சஞ்ஜிதா 154 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். 58 கிலோ பிரிவில் மினாட்டி சேதி 175 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோல சீனியர் ஆண்களில் 56 கிலோ பிரிவில் ரஞ்சித் 224 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.

யூத் பெண்களில் 48 கிலோ பிரிவில் அடோம் இந்துபாலா, 53 கிலோ பிரிவில் இரா தீக்ஷிதா, 58 கிலோ பிரிவில் தன்சானா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். யூத் ஆண்களில் 50 கிலோ பிரிவில் ஜம்ஜங் டேரு, 56 கிலோ பிரிவில் அருணா சந்தா ஆகியோர் தங்கம் வென்றனர்.

ஜூனியர் பெண்களில் 53 கிலோ பிரிவில் வெங்கட லட்சுமி, 58 கிலோ பிரிவில் சுமன்பாலா தேவி ஆகியோர் தங்கம் வென்றனர். ஜூனியர் ஆண்களில் 56 கிலோ எடை பிரிவில் எம்.எஸ்.கார்த்திக் தங்கம் வென்றார்.

இது தவிர சீனியர் பெண்களில் 53 கிலோ பிரிவில் திகினா கோபாலும், 58 கிலோ பிரிவில் சுமன்பாலா தேவியும், யூத் பெண்களில் 58 கிலோ பிரிவில் எஸ்.முனிராவும் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனியர் பெண்களில் 53 எடை பிரிவில் கத்திலா வெங்கட லட்சுமி வெண்கலப் பதக்கம் வென்றார்.

No comments:

Post a Comment