சூரிய ஒளி நமக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய வரம். சுட்டெரிக்கும் சூரியனால்
நாமெல்லாம் மிகவும் கஷ்டப்பட்டாலும், அது இல்லாமல் ஒரு புல், பூண்டு கூட
பூமியில் முளைக்காது. அதை விட இன்றைய நாகரிக உலகில் நம் மின்சாரத் தேவைக்கு
பல வழிகளைக் கையாண்டு வருகிறோம். அதில் அணுமின சக்தியும் அடங்கும். ஆனால்,
இந்த அணு மின் சக்தியைப் பெற, நாம் பல பேரழிவுகளை எதிர் நோக்கி பயந்து
கொண்டிருக்கிறோம். இருந்தாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையில் அதனை
உற்பத்தி செய்யவும் முனைப்போடு செயலாற்றிக் கொண்டு வருகிறோம்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, மனிதனுக்கோ அலது வேறு ஜீவராசிகளுக்கோ சிறிதளவும் தீங்கு ஏற்படுத்தாத மின்சக்தியை உற்பத்தி செய்ய நாம் முயற்சி செய்து வருகிறோம். அந்த வகையில் நமக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது தான் இந்த சூரிய மின் சக்தி. நம் நாட்டில் வருடம் முழுவதும் இந்த சூரிய ஒளி போதும், போதும் என்கிற அளவுக்கு கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி சூரிய மின்சக்தியை நாம் முழு மூச்சாக செயல்பட்டு உற்பத்தி செய்தால், நம் மின் தேவையும் பூர்த்தி ஆகும். அணு உலை பற்றிய பயமும் போகும்.
சமீபத்தில் ஜெர்மனியில் இந்த சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார்கள். அங்கெல்லாம் சூரிய ஒளி வருடம் முழுவதும் கிடைப்பது அரிது. அங்கேயே இந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடிந்தால் ஏன் நம்மால் முடியாது. நிச்சயம் நம்மாலும் முடியும்.
இது பற்றிய ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பெர்லின்: 20 அணுமின்நிலைங்களில் உற்பத்தி செய்யும் அளவுக்கு சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது.ஐரோப்பிய நாடான ஜெர்மன் தனது அணுமின் திட்டத்தை கைவிட்டு,தனது மின்தேவைக்காக புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கு மாறியுள்ளது.
இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின்தேவையினை பூர்த்தி செய்கிறது.இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.
இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும்சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது. இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட்மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது 20 அணுமின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்உற்பத்திக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட்ஆகும்) இதன் மூலம் தற்போதுநாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிஒளி சக்தி மூலம்பூர்த்தி செய்து ஜெர்மன் சாதனை படைத்துள்ளது.
-நன்றி தினமலர்.

No comments:
Post a Comment