Thursday, December 5, 2013

enninaivugalin e-pathivu தமிழ் தத்துவங்கள் ----2

எழுந்து நடந்தால்
இமயமலையும்
நமக்கு வழி கொடுக்கும்

உறங்கி கிடந்தால்
சிலந்தி வலையும்
நம்மை சிறை பிடிக்கும்.

வெள்ளைக் காரன் மணலை பார்த்து கடிகாரத்தை தயாரித்தான்.
தமிழன் சூரியனை பார்த்து கடிகாரத்தை தயாரித்தான்.
வெள்ளைக் காரன் மண்ணைப் பார்த்து சிந்திக்கும் போதே
தமிழன் விண்ணைப் பார்த்து சிந்திக்க ஆரம்பித்து விட்டான்..வாழ்க தமிழன்..


நீ வெளிச்சத்தில் நடந்தால் உன்னை உலகமே பின் தொடரும்..ஆனால் இருட்டில் நடந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது..


முயற்சி செய்ய தயங்காதே..முயலும் போது முட்களும் உன்னை முத்தமிடும்..மறக்காதே..

முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும்.
ஆனால் முயலாமை என்றும் வெல்லாது..


தன்னை தானே சீர்திருத்திக் கொள்பவனே சீர்திருத்தவாதி..

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போழுதும் மண்டியிடுவதே இல்லை...


தோல்வி என்பது நாம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே தவிர  அதில் அவமானம் என்று எதுவும் இல்லை


நம்பிக்கை என்பது ஒரே நாளில் பூத்து உதிரும் பூவாக இருக்க கூடாது. பூக்களை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.



வெற்றி வந்தால் பணிவு அவசியம்
தோல்வி வந்தால்  பொறுமை அவசியம்
எதிர்ப்பு  வந்தால்  துணிவு அவசியம்
எது வந்தாலும்  நம்பிக்கை அவசியம்..


நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பை போல் இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால் நம் காலை கடிக்கும். பெரிதாக இருந்தால் நாம் இடறி விழுந்து விடுவோம்...

எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.

நான் என்ற உணர்வு நிச்சயம் தவறில்லை..நான் மாத்திரம்  தான் என்ற உணர்வு தான் தவறு..


மலரைப் பார் கொடியைப் பார் வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே.. அதை பார்க்க முயன்றால் மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

மருந்துகளில் சிறந்தவை ஓய்வும்  உண்ணா நோன்புமே..

நானும் குறைகள் நிறைந்த மனுஷி யாக இருப்பதாலும் எனக்கும் பிறருடைய அனுதாபம் தேவை படுவதாலும் நான் பிறரிடம் குறைகளை கண்டு பிடிக்க  இப்ப முயலுவதில்லை..

எல்லாம் நன்றாக இருக்கிறது என்பவனிடமும் எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு..

அன்புக்கு மீறி  தன் புலன்களுக்கு உணவு அளிப்பவன் தன் எதிரிகளுக்கு விருந்து படைத்தவன் ஆகிறான்.


உன்னை விட அதிர்ஷடம் குறைந்தவனிடம் உன் இன்பத்தை பற்றி பேச வேண்டாம்.

கடினமான செயலின் சரியான பெயர் --சாதனை
சாதனையின் தவறான பெயர் ---கடினம்

துன்பம் வந்துவிடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் துன்பத்தை விட துயரமானது...


உனக்கு இந்த உலகம்(வீடு) சொந்தமல்ல..நீ தான் இந்த உலகத்திற்கு (வீட்டிற்க்கு )சொந்தம்...

எல்லாரும் தம்மை விட்டு எதையோ  சீர்படுத்த எண்ணுகிறார்கள்.

எழுமின்!எழுமின்! கருதிய கருமம கை கூடும் வரை நில்லாது உழைமின்..

நீங்கள் விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும்...எனவே நல்ல எண்ணங்களையே விதைப்போம்..

நூலறிவு பேசும்.. மெய்யறிவு  கேட்கும்...

பணக்காரனாக வேண்டுமென விரும்புபவன் கஞ்சனாக இருக்கிறான்.நான் பணக்காரன் என செலவு செய்பவன் ஏழையாகிறான்..

பிரட்சனை இல்லா வாழ்க்கையை வேண்டுவதை விட அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வது சிறந்தது..

சகோதரர்களாக இருங்கள் ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்..


தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை உடனே திரும்பி விடுங்கள்..


உடலே  தேர் பொறி புலன்களே  குதிரைகள் மனமே கடிவாளம் அறிவே  தேர் பாகன்..

உண்மையாக நடக்கும் மனைவியை சந்தேகப் படுகிறவன் அவளை பொய்யாய் நடக்கும் படி செய்து விடுகிறான..

உங்கள் பயங்கள் உங்களிடமே இருக்கட்டும். உங்கள் தைரியத்தை மட்டும்  பிறருக்கு புகட்டுங்கள்.

பக்குவமில்லாத மனதை  பக்குவப் படுத்துபவர் தவசி.. அது போல  பக்குவமில்லாத அரிசியையும் காய்கறிகளையும் பக்குவப் படுத்தி சமைப்பதாலே  சமையல் காரரை  தவசி என அழைக்கிறார்கள்.


அஞ்சும் மூனும் சரியாக இருந்தா அறியா பெண்ணும் கறி சமைப்பா..
அஞ்சு---அஞ்சலறை  பெட்டி
மூணு--அடுப்பு

தாழ்வு மனப் பான்மை என்பது செடியில் ஒட்டிக் கொள்ளும் புழு போன்றது.அதை எடுத்து நசிக்கி  விட வேண்டும்.இல்லா விட்டால் புழு செடியை அரித்து விடும்.செடிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கலாம்..ஆனால் மனிதர்களுக்கு....


ஒழுக்கம் என்னும் ஒரு தாயிடத்திலிருந்து  தான்
அறிவு
அன்பு
அறம்
அருள்
ஆகிய  நான்கு சேய்கள் அவதரிக்கின்றன..
அடக்கம்
அமைதி
ஆன்மீகம்
ஆனந்தம்
ஆகிய நான்கு அணிகளை  அவை தரிக்கின்றன..
அவா
அழுக்காறு
அச்சம்
ஆத்திரம்
ஆகிய நான்கு அழுக்குகளை அவை எரிக்கின்றன.
அவன்
அது
இவன்
இது
ஆகிய நான்கு பேதங்களை அவை கரிக்கின்றன.
ஒழுக்கம்
ஒளிர் விடு மாயின்
வையமே
வணங்க வரும்..


ஆண்டவன் நமக்கு  அளிக்கும் வாய்ப்புகள் எதுவாயினும் அதை எப்படி பயனுள்ளதாக்கி கொள்வது என்பது நம் கையில் தான் இருக்கிறது..

ஆண்டவன் நமக்கு மாம்பழத்தை அளித்தால் மாம்பழ ஜூஸ் தான் செய்யமுடியும்..எழுமிச்சை ஜூஸ்  செய்ய முடிய வில்லையே என கவலை பட்டுக் கொண்டிருந்தால் பலனில்லை...


நல்லதென்றும் கெட்டதென்றும் எதுவும் இல்லை..நாம் நினைப்பது தான் அதை அவ்வண்ணம் ஆக்குகிறது..

நேரம் வருகிற போது  அடங்கா  மாடும் நுகத் தடியைச் சுமக்க தான் வேண்டும்.

உன்னை புரிந்து கொள்ளாதவன் உன் மேல் அன்பு கொள்ளவும் மாட்டான்..

கொடிய கற்பனைகளை விட நிகழ் கால பயங்கள் ஒன்றும் பெரிதில்லை..

நிதானமாக நேசி..நின்று நிலைக்கும்  நேயம்  அது தான்..மிக  வேகமாக வருவதும்  மிக மந்தமாக வருவதும்  நிறைவு தரா..


செதுக்குதல் என்பதோ  சீவுதல் என்பதோ  வலி நிறைந்தது தான்.என்றாலும்  பென்சில் சீவப்பட்டால் தான் கூர்மையானதாக இருக்கும்..

பென்சிலின்  வெளிப் புறத் தோற்றம் முக்கியமல்ல. அதன் உள்ளே இருப்பது தான் முக்கியம்..பணம் செல்வம்  வசதி  இதெல்லாம் வெளிப்புறம் மகிழ்ச்சி சந்தோஷம் திருப்தி இதெல்லாம் உட்புறம்.....

விட்டு விடப் போகுது உயிர்...விட்டவுடனே  உடலை சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்...

உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்ப மாகிறது.அதற்கு  முன் பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு..பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை...

மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
வணக்கமும் இணக்கமும்
பின்பற்ற வேண்டியது:
சகிப்புத்  தன்மை அனுசரித்துப் போதல்
விட்டு விட வேண்டியது:
டிமாண்ட்     கமாண்ட்


புது மணத் தம்பதிகள் வெங்காயம் மாதிரி இருக்கணும்.
வெங்காயத்தோட முதல் நிலையில் சிவப்பு வெள்ளை என ரெண்டு வர்ணங்கள் இருக்கும்.திருமண மான புதுசுல  புருஷனுக்கும் மனைவிக்கும் இரு விதமான கருத்துக்கள் இருக்கலாம்.

ஆனா  வெங்காய  தோலை உரிக்க உரிக்க ரெண்டு கலரும் மாறி மாறி வந்து கடைசியில் வறும் வெள்ளை நிறம் மட்டும் வர்ற மாதிரி  காலப் போக்கில்
தனித்  தனி  கருத்துகள் மாறி ஒரே கருத்தா வந்திடணும்..

திருமணம் என்பது முற்றுகை யிடப் பட்ட கோட்டை..வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிப்பார்கள்..

உள்ளே இருப்பவர்கள் வெளியே வரத் தவிக்கிறார்கள்...

பலவீனர்களின் பாதையில் தடையாக இருந்த கருங்கல் பாறை  பலசாலியின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது.

பணம் பிரித்து பார்க்கும்..பாசம் சேர்த்து பார்க்கும்..

சேமிப்பு மனிதனுடைய தகுதியை யும் அந்தஸ்தையும் உயர்த்தக் கூடிய மூலதனம்...

கஷடம் ஒரு நோய் போன்றது. திடீரென தாக்கும் போது அந்த டென்ஷனில்  மனிதன் உண்மையிலேயே நோயாளியாகி விடுவான்.

எந்த விஷயத்தையும் பிரட்சனையையும் நாசூக்காக கையாளுங்கள்.விட்டுக் கொடுங்கள்..


அனுபவம் என்பது கிளியோபாத் ராவை போன்றது. வயதாக வயதாக  அதன் அழகு அதிகரிக்கிறது.

நாளைய வெளிச்சத்தை நம்பித்  தான் இன்றைய இருட்டில் நான் இடித்து விடாமல் இருக்கிறேன்..

பிரட்சனை எல்லாருக்கும் தான் உண்டு.டென்ஷனாவதால் யாருக்கு நஷ்டம். மறப்போம் மன்னிப்போம்  தினமும் ஒவ்வொரு பிரட்சனைகளுக்காக டென்ஷனாகிக் கொண்டிருந்தால் நம் தலைமாட்டில் தான் மாத்திரை பொட்டலம் அதிகமாகும்.ஆகவே  டென்ஷனை மதிக்காதீர்கள். அது டென்ஷனாகி ஓடி விடும்...

No comments:

Post a Comment