ஒரு விஞ்ஞானி தவளையை பரிசோதித்தார். தாவு என்றார். தவளை தாவியது. பின், ஒரு காலை வெட்டி விட்டு தாவு என்றான், தவளையும் தாவியது. பின் அடுத்த காலையும் வெட்டி விட்டு தாவு என்றார், தவளையும்
தாவியது. இவ்வாறு மூன்று கால்களையும் வெட்டிய பின்னும் தவளை ஒரு
காலால் முயற்ச்சி செய்து தாவியது.
கடைசியாக நான்காவது காலையும் வெட்டி விட்டு தாவு என்றார்,தவளை
தாவ முடியாமல்,கிடந்தது.
விஞ்ஞானி தனது குறிப்பில் எழுதினார், தவளையின் கால்களை வெட்ட வெட்ட தவளை தன் கேட்கும் தன்மையை இழந்து செவிடாகி விட்டது.இதில்
இருந்து தெரிவது, தவளையின் கால்களை வெட்டினால் அதற்கு காது கேட்காது.
No comments:
Post a Comment