Monday, November 7, 2011

PRIVACY-yoga



     யோகா என்பது ஒரு தத்துவம். உடலையும், மனதையும், சமநிலைப்படுத்துவதே யோகாவின் குறிக்கோள் ஆகும்.
முதுமையை தடுக்க முடியாது, ஆனால் முதுமையின் அறிகுறிகளை யோகா தடுக்கிறது.மனநலம் பழுது படாமல் முழு ஆரோக்கியத்துடன் முதுமை பெற யோகாபயிற்சிகள் வழிவகுக்கின்றன.
    யோகா ஆரோக்கியம் தருவதுடன் மன அமைதியையும், சமநிலையையும்அளிக்கிறது.
விளையாட்டின் போது சக்தி செலவாகிறது,ஆனால் யோகாவில் சக்தி சேமிக்கப் படுகிறது.யோகா ப்யிற்சி முடிந்த உடன் நல்ல ஓய்வுடனும்,நிதானமாகவும்,முழு சக்தியுடனும், நாம் அந்த நாளின் பிரச்ச்னைகளை எதிர் கொள்ளலாம்.
யோகா பயிற்சிகள் உள் உறுப்புகளைத் தடவிக்  கொடுக்கின்றன.ஒரு பாட்டரி இஞ்சினுக்கு புதிய சக்தியை அளிப்பது போல் யோகாபயிற்சிகள் களைத்த உடலுக்கு தெம்பளிக்கின்றன.
பிராணாயமா என்பது மூச்சு விடுதலைக் கட்டுப்படுத்தும் அறிவியல் ஆகும்மூச்சே உயிராகும். சரியாக மூச்சு விடுதலை மேற் கொண்டால் தான் நரம்புகளுக்கும், உடல் உற்ப்புகளுக்கும் சக்தி கிடைக்கும் .

மேலோட்டமான விரைவான மூச்சு நோய்களை ஏற்படுத்தும். நுரையீரல்களில்அசுத்த காற்று நிறையும் போது ஆக்ஜிசன் இல்லாமல் போய் விடுகிறது.நிதானமான மூச்சு நரம்பு மண்டலத்தை அமைதிப் படுத்துகிறது.
        

No comments:

Post a Comment